கிளாவேசீன்
கிளாவேசீன் (பிரெஞ்சு: Clavecin (க்லாவேசாங்), ஆங்கிலம்: Harpsichord (ஹார்ப்சிகார்ட்), இத்தாலியம்: Clavicembalo (க்லாவிசெம்பாலோ)) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஒரு இசைக்கருவி. ஒரு வதியை (Key) அழுத்தும் பொழுது ஒரு கம்பியை மீட்டுவதன் மூலம் ஒலியை உண்டுபண்ணுகிறது. இது பரோக்கு இசையில் (Baroque music) பெரிதாகப் பயன்படுத்தப்பட்டது. பியானோவின் கண்டுபிடிப்பிற்கு பின்னர் இதன் புகழ் குறையத் துவங்கியது. ஆனால், இதன் தனித்தன்மையுள்ள ஓசை இன்றும் நவீன இசையில் (Contemporary music) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாந்த கிளாவேசீன்(Flemish harpsichord) | |
வதிப்பலகை இசைக்கருவி | |
---|---|
வேறு பெயர்கள் | இத்தாலியம்: க்லாவிசெம்பாலோ(Clavicembalo) பிரெஞ்சு: க்லாவேசாங்(Clavecin) |
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை | 314.122-6-8 |
கண்டுபிடிப்பு | மத்திய காலத்தின் பிற்பகுதி |
தொடர்புள்ள கருவிகள் | |
spinet, virginals |