கிளிசரால் ஐதராக்சி சிடீயரேட்டு

கிளிசரால் ஐதராக்சி சிடீயரேட்டு (Glyceryl hydroxystearate) என்பது C21H42O5. என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கிளிசரால் மோனோ ஐதராக்சி சிடீயரேட்டு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. வெண்மை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் தூளாக கிளிசரால் ஐதராக்சி சிடீயரேட்டு காணப்படுகிறது. பல்வேறு அழகுசாதனப் பொருள்களிலும் தோல் பாதுகாப்புப் பொருள்களிலும் காணப்படுகிறது.

கிளிசரால் ஐதராக்சி சிடீயரேட்டு
Glyceryl hydroxystearate
கிளிசரால் ஐதராக்சி சிடீயரேட்டு வேதிக் கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,3-ஈரைதராக்சிபுரோப்பேன்-2-யில் 2-ஐதராக்சி ஆக்டாடெக்கனோயேட்டு
வேறு பெயர்கள்
கிளிசரால் மோனோ ஐதராக்சி சிடீயரேட்டு; ஐதராக்சி ஆக்டாடெக்கனாயிக் அமிலம், மோனோயெசுத்தர் கிளிசரால்; சிடீயரிக் அமிலம், மோனோயெசுத்தர் கிளிசரால் ஐதராக்சி சிடீயரிக் அமிலம், ஆக்டாடெக்கனாயிக் அமிலம், மோனோயெசுத்தர் 1,2,3-புரோப்பேன்டிரையால்
இனங்காட்டிகள்
1323-42-8 Y
ChemSpider 92678
EC number 215-355-9
InChI
  • InChI=1S/C21H42O5/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-20(24)21(25)26-19(17-22)18-23/h19-20,22-24H,2-18H2,1H3
    Key: YIDBZTKQBSDQDX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 102606
  • O=C(OC(CO)CO)C(O)CCCCCCCCCCCCCCCC
UNII UJ6CAW9YNV Y
பண்புகள்
C21H42O5
வாய்ப்பாட்டு எடை 374.56 g·mol−1
தோற்றம் வெண்மை/வெளிர் மஞ்சள் தூள்
அடர்த்தி 1.007 கிராம்/மி.லி[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள்

தொகு

கிளிசரால் ஐதராக்சி சிடீயரேட்டு தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு மூலப்பொருள் ஆகும். இது பொதுவாக ஓர் இளக்கியாக, குழம்பாக்கும் முகவர் அல்லது உடற்கூறு முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் முக பராமரிப்பு, பாத பராமரிப்பு, மற்றும் உதடு பராமரிப்பு பொருட்கள், ஒளி பராமரிப்பு, தோல் சுயப் பராமரிப்பு , வறட்சிக் களிம்பு, தலை சவர்க்காரம், குழைமங்கள், வெளிப்பூச்சு நீர்மங்கள், சோப்புகள், புள்ளி மறைப்பான்கள் மற்றும் சூரிய வெளிப்பாடு சிகிச்சைகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Glyceryl Hydroxystearate
  2. "Naturechem GMHS". Hallstar.com. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.