கிளித்தட்டு

கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் தமிழீழத்திலும், ஈழத்தமிழர்கள் வாழும் பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவிலும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும்.

கிளித்தட்டு

தோற்றம்

தொகு

வயல் நிலங்களில் விளையும் பயிரைக் கொத்திச் செல்ல வரும் கிளிகளை கூட்டமாய் நின்று உழவர் துரத்தும் வழமையினின்று கிளித்தட்டு தோன்றியது என்கிறார் தேவநேயப் பாவாணர்.[1]

போட்டி விதிமுறைகள்

தொகு

மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்noபது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும்.

 
கிளிதட்டு மைதான அமைப்பு

யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை சேர்ந்தவர் கிளி என்று அழைக்கப்பட்டு, எந்த கோடுகளாலும் செல்ல வல்லவர். கிளியால் தொடப்பட்டால் புகும் குழு உறுப்பினர் ஆட்டமிழப்பார்.

முதலில் கிளி ஒரு தொங்கலிலும், புகுபவர்கள் ஒரு தொங்கலும் நிற்பார்கள். கிளி கூவிக்கொண்டு முன்னோக்கி வருவார். கிளி கூவியவுடன் புகுபவர்கள் உச்சி, தெண்டி அடுத்த எல்லைக்கு செல்ல முயல வேண்டும். தாண்டும் பொழுது மறிப்பவரால் தொடப்பட்டால் தாண்டுபவர் ஆட்டமிழப்பார். தாண்டும்போது மட்டுமே மறுப்பவர் தட்ட முடியும், சும்மா அருகில் நிற்கும் பொழுதோ, உச்சும் பொழுதோ தட்ட முடியாது. ஆனால், கிளி எங்கும் சென்று யாரையும் எப்பொழுதும் தட்டலாம். அதாவது, எட்டியும் தட்டலாம்.

உச்சி, தப்பி எல்லைக்கு சென்றவர்கள் பழம் என்று கருதப்படுவர். வந்து கொண்டிப்பவர்கள் காய்கள். பழமானவர், மீண்டும் புகுந்த எல்லைக்கே சென்றால் தான் அந்த அணியினருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். ஆனால், மீண்டும் வரும் பொழுது, பழம் காய் உள்ள ஒரு பெட்டிக்கு போகவது அவ்வளவு நல்லதல்ல, காரணம், இருவருக்கும் உச்சுவதற்கு குறுகிய இடமே கிடைக்கும். மேலும், கிளி பூட்டு போட்டு தட்ட முயல்வார்.

எந்த அணி கூடிய புள்ளிகளைப் பெறுகின்றதோ அவர்களுக்கே வெற்றி. பலருடன் சேர்ந்து விளையாடும் பொழுது, இந்த விளையாட்டு மிகவும் வேகமாகவும், விறு விறுப்பாகவும் அமையும்.

வேறு பெயர்கள்

தொகு
 
இதன் வேறு வகையான விளையாட்டில் பயன்படுத்தப்படும் அரங்கங்கள் - படம் 11 ஆடவர் விளையாடும் கிளித்தட்டு விளையாட்டு அரங்கம். படம் 12 சிறுவர்கள் விளையாடும் கிளித்தட்டு விளையாட்டு அரங்கம். அ-ஆ இணையர் உள்ளே உப்புக் கொடுத்து உப்பு வாங்குவதாக நடித்துக் கைகொடுக்கும் இடம். இ-ஈ, உ-ஊ, எ-ஏ பாத்திகளும் அவை
  • கிளித்தட்டு
குறிஞ்சி நிலத்தில் தட்டு என்பது பாத்தி. பாத்தியில் விளைந்த கதிர்களைத் தின்ன வரும் கிளிகளைத் தட்டி ஓட்டுவது போன்றதால் இதனைக் கிளித்தட்டு என்றர்.
  • தண்ணீர் புரி
வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது போல இருப்பதால் இதனை மருதநில மக்கள் தண்ணீர் புரி என்பர்
  • உப்பு விளையாட்டு
கடல்நீர் உப்புப் பாத்தியில் பாய்வது போல இருப்பதால் நெய்தல்-நில மக்கள் இதனை உப்பு-விளையாட்டு என்பர்

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஞா. தேவநேயப்பாவாணர். தமிழ்நாட்டு விளையாட்டுகள்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளித்தட்டு&oldid=3496649" இலிருந்து மீள்விக்கப்பட்டது