கிளின்டாமைசின்
கிளின்டாமைசின் (Clindamycin) என்னும் எதிருயிரி காது, தொண்டை, எலும்பு அல்லது மூட்டுகளில் ஏற்படும் தொற்றுகள், இடுப்பு அழற்சி நோய், நுரையீரல் அழற்சி, இதய உள்ளுறை அழற்சி ஆகிய பாக்டீரிய தொற்றுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது[1]. சில நேரங்களில் மெத்திசிலின்-எதிர்ப்பு இஸ்டெபிலோகாக்கசு ஆரியசு (MRSA) பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது[2]. மேலும், முகப்பரு, மலேரியாவிற்கு குயினைன் மருந்துடனும் உபயோகப்படுத்தப்படுகிறது[1][3]. வாய்வழி மற்றும் சிரைவழியாக உபயோகிப்பதற்கோ, தோல் அல்லது யோனியில் தடவுவதற்காக மேற்பூச்சு குழைவாகவோக் கிடைக்கிறது[1][3].
குமட்டல், வயிற்றுப்போக்கு, அரிப்பு, ஊசி போடும் இடத்தில் வலி ஆகியன பொதுவான பக்க விளைவுகளாகும்.[1] இம்மருந்தை உபயோகப்படுத்துவதினால், மருத்துவமனையில் ஏற்படும் பெருங்குடல் அழற்சிக்கான இடர் நான்கு மடங்கு அதிகரிக்கிறது[4]. இக்காரணத்தினால் கிளின்டாமைசினுக்குப் பதிலாக பிற எதிருயிரிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[1] பொதுவாக கர்ப்பகாலங்களில் உபயோகப்படுத்தப்படுவது பாதுகாப்பானதாகவே தோன்றுகிறது.[1] பாக்டீரியாவின் புரத உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் எதிருயிரியாகச் செயற்படுகிறது.[1]
வரலாறு
தொகுகிளின்டாமைசின் முதலில் 1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.[5] இது உலக சுகாதார அமைப்பு பட்டியலில் உள்ள, சுகாதாரத்திற்கு தேவையான, மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான அத்தியாவசிய மருந்துகளில் ஒன்றாக உள்ளது.[6] கிளின்டாமைசின் பெரியளவில் வர்க்க மருந்துகளாகத் தயாரிக்கப்படுவதால் இதன் விலை குறைவாகவே உள்ளது.[7]
மருத்துவப் பயன்கள்
தொகுகிளின்டாமைசின் சிகிச்சை காற்றின்றி வாழும் தொற்றுகளான பல் தொற்றுகள்,[8] சுவாச பாதை, தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுகள், மற்றும் வயிற்றறை உறையழற்சிக்கு (peritonitis) எதிராக முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.[9] உயிர்வளியின்றியமையா பாக்டீரிய நோய் சிகிச்சைகளில் பெனிசிலின் மருந்து பயன்படுத்தும்போது மிகையுணர்வூக்கம் ஏற்படுபவர்களில் கிளின்டாமைசின் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. எலும்பு அல்லது மூட்டுகளில் முக்கியமாக இஸ்டெபிலோகாக்கசு ஆரியசு (MRSA) பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.[9][10] மிதமான முகப்பரு சிகிச்சைக்கு கிளின்டாமைசின் பாஸ்பேட்டு மேற்பூச்சு பயன்படுத்தப்படுகிறது.[11]
முகப்பரு
தொகுமுகப்பருவிற்கு கிளின்டாமைசின், பென்சோயில் பெராக்சைடு ஆகிய மருந்துகளைத் தனித்தனியாகப் பயன்படுத்துவதைவிட இவை இணைந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.[12][13][14] அதே நேரத்தில் கிளின்டாமைசின், அடப்பாலின் ஆகிய மருந்துகளைத் தனித்தனியாகப் பயன்படுத்துவதைவிட இவை இணைந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் பாதகமான விளைவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.[15]
பக்க விளைவுகள்
தொகுஒரு சதவீத மக்கள் வயிற்றுப்போக்கு, பெருங்குடல் அழற்சி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது பிடிப்பு போன்ற கிளின்டாமைசின் மருந்தின் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதிக அளவுகளில் சிரை மற்றும் வாய் வழியாகப் பயன்படுத்தப்படும்போது ஒருவிதமான உலோகச் சுவையை உண்டாக்குகிறது. பத்து சதவீத மக்கள் கிளின்டாமைசினை மேற்பூச்சாக பயன்படுத்தும்போது தோல் வறட்சி, எரிச்சல், அரிப்பு, தோல் உரிதல், செந்தடிப்பு (erythema) போன்ற பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். கூடுதல் பக்க விளைவாக தீண்டற் சருமவழல் ஏற்படுகிறது.[16][17] யோனியில் கிளின்டோமைசின் தடவுவதனால் பத்து சதவீத மக்களில் பூஞ்சை தொற்றுகளும் பக்கவிளைவுகளாக ஏற்படுகின்றன.
அரிதாக 0.1 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகள் கிளின்டாமைசின் சிகிச்சையினால் காப்புப்பிறழ்வு, இரத்த புன்கலவை (blood dyscrasias), மூட்டழற்சி, மஞ்சள் காமாலை, ஈரல் நொதிகள் அதிகளவு அதிகரித்தல், சிறுநீரக செயலிழப்பு, இதயத்தம்பம் மற்றும் ஈரலுக்கு மருந்துகளால் தூண்டப்படும் நச்சுத்தன்மை ஆகியப் பாதகமான விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.[16]
கால்நடைகளில் சிகிச்சை
தொகுகிளின்டாமைசின் மனிதர்களின் சிகிச்சைக்குப் பயன்படுவதை போலவே கால்நடைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் அத்திச்சோற்றழல் (osteomyelitis) சிகிச்சைக்கும் கிளின்டாமைசின் உபயோகப்படுத்தப்படுகிறது.[18] நாய்கள் மற்றும் பூனைகளில் தோல் நோய்த்தொற்றுகளுக்கும், டாக்சாப்பிளாசுமம் என்னும் ஒட்டுண்ணி நோய்க்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Clindamycin Hydrochloride". The American Society of Health-System Pharmacists. Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் Sep 4, 2015.
- ↑ Daum RS (2007). "Clinical practice. Skin and soft-tissue infections caused by methicillin-resistant Staphylococcus aureus". N Engl J Med 357 (4): 380–90. doi:10.1056/NEJMcp070747. பப்மெட்:17652653.
- ↑ 3.0 3.1 Leyden, James J. (2006). Hidradenitis suppurativa. Berlin: Springer. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540331018. Archived from the original on 2017-09-08.
- ↑ "Antibiotics and hospital-acquired Clostridium difficile-associated diarrhoea: a systematic review". J Antimicrob Chemother 51 (6): 1339–50. 2003. doi:10.1093/jac/dkg254. பப்மெட்:12746372 இம் மூலத்தில் இருந்து 2016-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160107115031/http://jac.oxfordjournals.org/content/51/6/1339.full.pdf.
- ↑ Neonatal Formulary: Drug Use in Pregnancy and the First Year of Life (7 ed.). John Wiley & Sons. 2014. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118819517. Archived from the original on 2017-09-08.
- ↑ "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Archived from the original (PDF) on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
- ↑ Hamilton, Richart (2015). Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition. Jones & Bartlett Learning. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781284057560.
- ↑ Brook I, Lewis MA, Sándor GK, Jeffcoat M, Samaranayake LP, Vera Rojas J. Clindamycin in dentistry: more than just effective prophylaxis for endocarditis? Oral Surg Oral Med Oral Pathol Oral Radiol Endod. 2005 ;100:550-8
- ↑ 9.0 9.1 "Cleocin I.V. Indications & Dosage". RxList.com. 2007. Archived from the original on 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.
- ↑ "Antibiotic treatment of gram-positive bone and joint infections". J Antimicrob Chemother 53 (6): 928–35. 2004. doi:10.1093/jac/dkh191. பப்மெட்:15117932 இம் மூலத்தில் இருந்து 2015-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151106122103/http://jac.oxfordjournals.org/content/53/6/928.full.pdf.
- ↑ "Diagnosis and treatment of acne". Am Fam Physician 69 (9): 2123–30. May 2004. பப்மெட்:15152959 இம் மூலத்தில் இருந்து 2011-07-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110727113218/http://www.aafp.org/afp/2004/0501/p2123.pdf.
- ↑ "A randomized, double-blind comparison of a clindamycin phosphate/benzoyl peroxide gel formulation and a matching clindamycin gel with respect to microbiologic activity and clinical efficacy in the topical treatment of acne vulgaris". Clin Ther 24 (7): 1117–33. 2002. doi:10.1016/S0149-2918(02)80023-6. பப்மெட்:12182256.
- ↑ "Comparison of the efficacy and safety of a combination topical gel formulation of benzoyl peroxide and clindamycin with benzoyl peroxide, clindamycin and vehicle gel in the treatments of acne vulgaris". Am J Clin Dermatol 2 (1): 33–9. 2001. doi:10.2165/00128071-200102010-00006. பப்மெட்:11702619.
- ↑ "Treatment of acne with a combination clindamycin/benzoyl peroxide gel compared with clindamycin gel, benzoyl peroxide gel and vehicle gel: combined results of two double-blind investigations". J Am Acad Dermatol 37 (4): 590–5. 1997. doi:10.1016/S0190-9622(97)70177-4. பப்மெட்:9344199.
- ↑ "Efficacy and tolerability of combined topical treatment of acne vulgaris with adapalene and clindamycin: a multicenter, randomized, investigator-blinded study". J Am Acad Dermatol 49 (3 Suppl): S211–7. 2003. doi:10.1067/S0190-9622(03)01152-6. பப்மெட்:12963897.
- ↑ 16.0 16.1 Rossi S, editor. Australian Medicines Handbook 2006. Adelaide: Australian Medicines Handbook; 2006.
- ↑ De Groot, M. C. H.; Van Puijenbroek, E. N. P. (2007). "Clindamycin and taste disorders". British Journal of Clinical Pharmacology 64 (4): 542–545. doi:10.1111/j.1365-2125.2007.02908.x. பப்மெட்:17635503.
- ↑ (February 8, 2005) "Osteomyelitis" பரணிடப்பட்டது 2008-01-07 at the வந்தவழி இயந்திரம், in Kahn, Cynthia M., Line, Scott, Aiello, Susan E. (ed.): The Merck Veterinary Manual, 9th ed., John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911910-50-6. Retrieved 14 December 2007.
- ↑ (February 8, 2005) "Toxoplasmosis: Introduction" பரணிடப்பட்டது 2007-12-20 at the வந்தவழி இயந்திரம், in Kahn, Cynthia M., Line, Scott, Aiello, Susan E. (ed.): The Merck Veterinary Manual, 9th ed., John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911910-50-6. Retrieved 14 December 2007.