கிளேர் பரேகு
கிளேர் யோவான்னா பரேகு நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பிரித்தானியத் துகள் இயற்பியலாளராக உள்ளார். வானியற்பியல் ஆய்வுகளையும் குறுக்கீட்டளவியலையும் ஆகியவற்றைப் பயன்படுத்தி இருண்ட ஆற்றல் ஆராய்ச்சியில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
இளமையும் கல்வியும்
தொகுஇவர் தான் குழந்தையாக யோதிரெல் வங்கி ஆய்வகத்தில் உள்ள உலோவெல் தொலைநோக்கியைக் கடந்து சென்றதே அண்டவியல் மீதான தனது அன்பைக் குறிக்கிறது எனக் கூறியுள்ளார்.[1] இவர் காலிங்வுடு கல்லூரியில் பயின்றார் , மேலும் கணிதத்திலும் செருமானிய மொழியிலும் ஏ - திறன்களை அடைந்தார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தைப் படித்தார் , 2004 இல் முதுகலைப் பட்டமும் , 2005 இல் கணித டிரிபோசின் மூன்றாம் பகுதியையும் பெற்றார்.[2] ஒரு மாணவராக இருந்தபோது , பரேகு இலெகோலாந்து வின்ட்சர் விடுதியில் பணிபுரிந்தார்.[2] தனது முதுகலை ஆராய்ச்சிக்காக , அளவன்புலங்கள், அண்ட மிகுவேக விரிவாக்கம் ஆகியவற்றைப் படிக்கும் பயன்பாட்டுக் கணிதம், கோட்பாட்டு இயற்பியல் துறையில் அன்னே - கிறித்தின் டேவிசில் சேர்ந்தார்.[3] மெசியர் 87 எனும் முனைவான பால்வெளிக் கருவில் உள்ள பச்சோந்தி துகள்களின் அறிகுறிகளை இவர் கண்டறிந்தார்.[4]
ஆராய்ச்சியும் தொழிலும்
தொகுபரேகு 2008 ஆம் ஆண்டில் தேசி( DESY) அமைப்பில் கோட்பாட்டு இயற்பியல் குழுவில் முதுமுனைவர் ஆய்வாளராகப் பணியமர்த்தப்பட்டார்.[5] தேசியில் இருந்தபோது , ஆக்சியான் - ஒளியன் மாற்றத்திற்கான வானியற்பியல் தகவல்களை இவர் கண்டுபிடித்தார்.[6] அவர் 2010 இல் ஜெனீவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று , அண்டவியலில் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில் பரேகு நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் அன்னே மெக்லாரன் ஆய்வுறுப்பினராக பணியமர்த்தப்பட்டார். இருண்ட ஆற்றலை சோதிக்க வானியற்பியல் மூலங்களிலிருந்து ஒளியைக் கவனிப்பதே பரேகு பயன்படுத்துகிறார்.[7] 2013 ஆம் ஆண்டிலும் மீண்டும் 2018 ஆம் ஆண்டிலும் அவருக்கு அரசு கழகத்தின் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டது.[8][9] அவர் 2015 ஆம் ஆண்டில் இயற்பியல் நீறுவனத்தின் மேக்சுவெல் பதக்கத்தியும் பரிசையும் வென்றார்.[1] இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் தண்பொருள் மையத்தில் பரேகு பணிபுரிகிறார் , அங்கு அவர் ஒளித்துடிப்பு அணு குறுக்கீட்டளவிகளை விசையுணர் அனுக்கலை முடுக்குவதற்காக உருவாக்குகிறார்.[10] வானியற்பியல் நோக்கிடுகளை அணு நுட்பங்களுடன் இணைப்பதன்வழி , இருண்ட ஆற்றல் பொருளுடன் பல்வேறு வழிகளில் ஊடாடக்கூடிய சிறந்த கட்டுத்திட்டகளைப் பரேகு வழங்கியுள்ளார்.[7]
பொது ஈடுபாடு
தொகு' நான் ஓர் அறிவியல் அறிஞர்' , ' என்னை இங்கிருந்து வெளியேற்றுங்கள் ' உட்பட பல பொது ஈடுபாட்டு நடவடிக்கைகளில் பரேகு பங்கேற்றுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினருடன் ஒரு இணையர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் வெசுட்டுமிமினிசுட்டர் அரண்மனையில் தனது ஆய்வுகளை வழங்கியுள்ளார்.[1] எடின்பர்கு பன்னாட்டு விழாவிலும் கே விழாவிலும் இவர் பங்கேற்றுள்ளார்.[1] ஆங்காங்கில் சயின்ஸ் அலைவ் போட்டியில் இங்கிலாந்தின் பேராளராகப் பிரித்தானிய மன்றத்தால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] விருது பெற்ற இயற்பியல் காணொலித் தொடரான அறுபது குறியீடுகள் நிகழ்வில் இவர் பங்கேற்றுள்ளார்.[12][13][14]
புழுத்துளை ஊடாக எனும் நிகழ்வின் இரண்டாம் கட்டத்தில் மார்கன் பிரீமேன் பரேகை நேர்காணல் செய்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Physics, Institute of. "Award-winning early-career physicist is put in the spotlight". www.iop.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ 2.0 2.1 "Profile - Electromagnetic Zone" (in en-US). Electromagnetic Zone. https://electromagneticm12.imascientist.org.uk/profile/clareburrage/.
- ↑ "Dr. Clare Burrage - AcademiaNet". www.academia-net.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ Merali, Zeeya (2009-05-29). "Dark-energy particle spotted?" (in en). Nature. doi:10.1038/news.2009.531. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. https://www.nature.com/news/2009/090529/full/news.2009.531.html.
- ↑ "Members of the Group". www.desy.de. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ Burrage, Clare; Davis, Anne-Christine; Shaw, Douglas J. (2009-05-21). "Active Galactic Nuclei Shed Light on Axion-like-Particles". Physical Review Letters 102 (20): 201101. doi:10.1103/PhysRevLett.102.201101. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. பப்மெட்:19519013. Bibcode: 2009PhRvL.102t1101B.
- ↑ 7.0 7.1 Physics, Institute of. "2015 Maxwell medal and prize". www.iop.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ "Clare Burrage". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ "Clare Burrage". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ "Searching for dark energy candidates using atom interferometry". Imperial College London (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ "Science Alive 2016: Discover science in our daily lives | British Council". www.britishcouncil.hk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
- ↑ Sixty Symbols (2015-02-13), Shining Light Through Walls - Sixty Symbols, பார்க்கப்பட்ட நாள் 2018-06-12
- ↑ Sixty Symbols (2015-05-01), Chameleon Particles and Dark Energy - Sixty Symbols, பார்க்கப்பட்ட நாள் 2018-06-12
- ↑ Butterworth, Jon (2015-02-15). "Dark Matter: an Axion to grind? | Jon Butterworth | Life & Physics". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.