கிழக்கு லண்டன் மசூதி

இங்கிலாந்தில் உள்ள ஒரு மசூதி

கிழக்கு லண்டன் மசூதி (East London Mosque ) இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஒயிட்சேப்பல் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இங்கிலாந்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாக இது விளங்குகின்றது.இந்தப் பள்ளிவாசலும் லண்டன் முசுலிம் மையமும் இப்பகுதியில் இசுலாமிய சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாக விளங்குகின்றன. இந்தப் பள்ளிவாசல் 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1] இங்கு 7,000 நபர்கள் தொழ முடியும். [2] இந்த மசூதி இங்கிலாந்து நாட்டிலேயே முதன்முதலில் 1986 ல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மசூதி ஆகும்.[3]

கிழக்கு லண்டன் மசூதி
கிழக்கு லண்டன் மசூதி மேலிருந்து எடுத்த படம்
கிழக்கு லண்டன் மசூதி மேலிருந்து எடுத்த படம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லண்டன், இங்கிலாந்து
புவியியல் ஆள்கூறுகள்51°31′03″N 0°03′56″W / 51.5176°N 0.0656°W / 51.5176; -0.0656
சமயம்சுன்னி இசுலாம்
மாநிலம் இங்கிலாந்து
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1985
தலைமைதலைமை இமாம்:கதீப்
இமாம்:அப்துல் கையும்
தலைவர்:
ஹபீப் ரஹ்மான்.
இணையத்
தளம்
www.eastlondonmosque.org.uk

அமைப்பு தொகு

 
மசூதியின் உட்புற தோற்றம்

இம்மசூதியில் 7,000 நபர்கள் தொழலாம்.உள்ளே நூலகம்,பல பயன்பாட்டு அறை,வானொலி நிலையம்,கருத்தரங்கு அறை ஆகியவை உள்ளன.[4].இந்த கருத்தரங்கு அறை நோன்புக்காலங்களில் நோன்பு முடிகின்ற நேரத்தில் சந்திக்கின்ற இடமாகவும் இது உள்ளது.கட்டிடத்தின் மேற்பகுதியை 3 மினார் கோபுரங்கள் சீர் செய்கின்றன.தகருத்தரங்கு அறை ங்க நிற குவிமாடம் மேற்பகுதியில் உள்ளது.

லண்டன் முசுலிம் கலாச்சார மையம் தொகு

 
லண்டன் முசுலிம் கலாச்சார மையம்

கிழக்கு லண்டன் மசூதியும் லண்டன் முசுலிம் கலாச்சார மையமும் இப்பகுதியில் இசுலாமிய சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாக விளங்குகின்றன.லண்டன் முசுலிம் கலாச்சார மையம் 2001 ல் இளவரசர் சார்லசால் தொடங்கிவைக்கப்பட்டது.[5] தொடக்க விழாவில் 15,000 நபர்கள் கலந்து கொண்டனர்.

விருது தொகு

2008 ஆம் ஆண்டு அக்டோபரில் கிழக்கு லண்டன் மசூதி மற்றும் லண்டன் முஸ்லீம் மையம் ஆகியவற்றிற்கு "உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக" இஸ்லாமிய சேனல் மையம் சார்பாக சிறந்த மசூதி விருது வரங்கப்பட்டது.[6][7]

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_லண்டன்_மசூதி&oldid=3240344" இலிருந்து மீள்விக்கப்பட்டது