கிழங்கான்

மீன் இனம்
கிழங்கான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சில்லாஜினிடே
பேரினம்:
சில்லாகோ
இனம்:
சி. சிகாமா
இருசொற் பெயரீடு
சில்லாகோ கிகாமா
(பார்சாகல், 1775)
கிழங்கான் மீன்களின் பரம்பல்

கிழங்கான் (northern whiting, silver whiting அல்லது sand smelt; உயிரியல் பெயர்: Sillago sihama)[1] என்பது ஒரு கடல்வாழ் மீன் வகையாகும். இவை மேற்கில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிழக்கில் ஜப்பான் மற்றும் இந்தோனேசியா வரை உள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படுகின்றன. மேலும் சுயஸ் கால்வாய் வழியாக நடுநிலக்கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளன. ஊணுண்ணியான இவை, பலவகையான கடற்புழுக்களையும் ஓட்டுக் கணுக்காலிகளையும் உட்கொள்கின்றன. இந்தோ-பசிபிக் முழுவதும் கிழங்கான் மீன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது பெரும்பாலும் சீன் வலைகள் மற்றும் வார்ப்பு வலைகளால் எடுக்கப்பட்டு புதியதாக சந்தைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Common Names List - Sillago sihama". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழங்கான்&oldid=3434418" இலிருந்து மீள்விக்கப்பட்டது