கி. செயராமன்

கி. செயராமன் (K. Jayaraman)(பிறப்பு திசம்பர் 21, 1928) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் குகைப் பகுதியினைச் சார்ந்தவர். இவர் சேலம் ஊராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் சேலம் ஊராட்சிக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். செயராமன், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக சேலம்-I சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 சேலம்-I திமுக 46,776 57.92
1971 சேலம்-I திமுக 46,262 50.92

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 127. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._செயராமன்&oldid=3538154" இலிருந்து மீள்விக்கப்பட்டது