கி (சுமேரியக் கடவுள்)
கி (Ki) சுமேரியர்களின் பூமியைக் குறிக்கும் பெண் கடவுள் ஆவார். இவர் வானத்தின் தலைமைக் கடவுளான அனுவின் மனைவி ஆவார்.[1] அனு மற்றும் கி பெண் கடவுளுக்கு பிறந்த கடவுளர்களையும், தேவதைகளையும் அனுன்னாகி என்பர். அனுன்னாகி கடவுளர்களில் புகழ்பெற்றவர் காற்றின் கடவுளான என்லில் ஆவார். பாபிலோனியர்கள் மற்றும் அக்காடியர்கள் காலத்தில் கி பெண் கடவுள், அனுவின் மனைவியாகப் போற்றப்பட்டார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dalley, Stephanie. Myths from Mesopotamia: Creation, the Flood, Gilgamesh, and Others (англ.). — Oxford: Oxford University Press, 1998. — P. 326. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-283589-5
- Michael Jordan, Encyclopedia of Gods, Kyle Cathie Limited, 2002