அனுன்னாகி (Anunnaki (also transcribed as Anunaki, Annunaki, Anunna, Ananaki) பண்டைய சுமேரியர்கள், அக்காதியர்கள், அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வணங்கிய கடவுளர்களின் கூட்டமாகும். வானத்தின் கடவுள் அனு மற்றும் பூமியின் பெண் கடவுளான கி ஆகியோர்களின் வழித்தோன்றல் கடவுள்களையும், தேவதைகளையும் அனுன்னாகி என்று அழைத்தனர். அனுன்னாகி என்ற பெயர் வானத்துக் கட்வுளான அனு மற்றும் பூமிக் கடவுளான கி என்ற கடவுளர்களின் குழந்தைகள் என்பதால் அனுன்னாகி எனப்பெயராயிற்று.

செப்பு உலோகத்தினால் செய்யப்பட்ட நான்கு சுமேரிய கடவுள்கள் காலம், கிமு 2130
அக்காடியப் பேரர்சின் உருளை முத்திரையில் இஷ்தர், உது மற்றும் என்கி, அமர்ந்த நிலையில் அனுன்னாகி, காலம் கிமு2300
அக்காடியப் பேரர்சின் உருளை முத்திரையில் பொறிக்கப்பட்ட தாய்க் கடவுளும், தாவரங்களுக்கு அதிபதியுமான நிகுர்சக் (அரியணையில் அமர்ந்த நிலை) சுற்றிலும் வழிபாட்டாளர்கள், காலம் கிமு 2350- 2150

அனுன்னாகி உறுப்பினர்களில் மூத்தவர் காற்றின் கடவுளான என்லில் ஆவார். அனுன்னாகி கடவுள்களின் பெயர்கள் அக்காதிய இலக்கியங்களில் அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் அக்கடவுள்களின் வழிபாடு பற்றிய தெளிவு இல்லை. (கிமு:2144–2124) அனுன்னகி என்ற சொல் உருளை முத்திரைகளில், மன்னர் குடியா (கிமு:2144–2124) ஆட்சிக் காலத்திலும், ஊரின் மூன்றாம் வம்ச (கிமு 2112 முதல் 2004) காலத்திலும் அனுன்னகி கடவுள் உறுப்பினர்களின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

அசிரியர்களும் பாபிலோனியர்களும் அனுன்னகியின் முக்கிய உறுப்பினர்களாக மர்துக் கடவுளைப் போற்றினர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுன்னாகி&oldid=3851134" இலிருந்து மீள்விக்கப்பட்டது