சுமேரிய கடவுள்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.[1]

சுமேரியாவின் அக்காடியப் பேரரசின் கிமு 2300 காலத்திய உருளை முத்திரையில் நீர்க்கடவுள் என்கி, இருதலை இசிமத், சூரியக் கடவள் உது மற்றும் பெண் கடவுள் இஷ்தர் கடவுளின் சிற்பங்கள்
கிமு 2334-2154 காலத்திய சுமேரியர்களின் இஷ்தர் எனும் பெண் தெய்வம்
சுமேரியர்களின் புயல் மற்றும் மழை கடவுளான இராம்மன் எனும் ஆதாத் சிலையை தாங்கிச் செல்லும் அக்காடிய பேரரசின் படைவீரர்கள்
பிற்காலத்திய சுமேரிய கடவுள்களான இஷ்தர், சின் உது மற்றும் சமாஷ், கிமு 12ம் நூற்றாண்டு

சுமேரிய மும்மூர்த்திகள்

தொகு
  1. அனு - வான் கடவுள் - இவரது மனைவி பூமியின் பெண் கடவுளான கி ஆவார். இவ்விருவரின் குழந்தைகள் அனுன்னாகிகள் என்ற தேவதைகள்.
  2. என்கி - கடல் கடவுள்
  3. என்லில் - காற்று மற்றும் சூறாவளிக் கடவுள்[2]

மற்ற கடவுள்கள்

தொகு
  1. கி, பூமியின் பெண் கடவுள் - அனுவின் மனைவி. இவரில் பிறந்தவர்கள் அனுன்னாகி தேவதைகள்
  2. உது - சூரியக் கடவுள்
  3. ஆதாத் - மழை மற்றும் புயல் கடவுள்
  4. இஸ்தர் - செழுமைக்கான பெண் தெய்வம்
  5. மர்துக் -நீர், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கு அதிபதி
  6. நாபூ - எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதி
  7. மனிதத் தலையுள்ள காளை மாடுகள்
  8. துமுழி - இசுதாரின் இணைத்தெய்வம்
  9. இசிமூத் - தூதுக் கடவுள்
  10. அப்சு -நன்னீர்க் கடவுள்
  11. அனுன்னாகி - அனு மற்றும் கி கடவுளரின் வழித்தோன்றல்கள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sumerian Religion
  2. Enlil/Ellil (god)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமேரிய_கடவுள்கள்&oldid=3851126" இலிருந்து மீள்விக்கப்பட்டது