என்கி

சுமேரிய புராணத்தில் குறிப்பிடப்படும் கடவுளர்

என்கி (Enki) மெசொப்பொத்தேமியாவின் சுமேரியர்களின் சமயத்தின் படைப்பு, அறிவு, கைவினைத்தொழில், நீர், சட்டம் இயற்றுதல், வளம், விந்து, மாயாஜாலம் மற்றும் துயரத்தின் அதிபதியான சுமேரியக் கடவுள் ஆவார். இவரது சின்னம் ஆடு மற்றும் மீன் ஆகும். இக்கடவுளின் துணைவிகள் நின்ஹர்சக்/கி, நின்சர், நின்குர்ரா மற்றும் தம்கினா ஆவார். இவருக்கு பிறந்த குழந்தைகள் உது, மர்துக், நின்சர், நின்குர்ரா மற்றும் நின்டி ஆவார். பின்னாட்களில் இக்கடவுளை அக்காடியர்கள், பாபிலோனியர்கள் இயா என அழைத்தனர். துவக்கத்தில் இக்கடவுள் எரிது நக்ரத்தின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டது. பின்னர் இக்கடவுள் வழிபாடு மெசொப்பொத்தேமியா முழுவதும் பரவியது. இக்கடவுளை இட்டைட்டுகள், ஹுரியத் மக்கள் மற்றும் கானானியர்களும் வழிபட்டனர். இத்தெய்வத்தின் தூதுவர் இசிமூத் எனும் சிறுதெய்வம் ஆவார்.

என்கி
குவளையை ஏந்தி அமர்ந்த நிலையில் கடவுள் என்கியின் சிற்பம், காலம் கிமு 2004-1595, நசிரியா, தெற்கு ஈராக்
அதிபதிபடைப்பு, அறிவு, கைவினைத்தொழில், நீர், சட்டம் இயற்றுதல், வளம், விந்து, மாயாஜாலம் மற்றும் துயரத்தின் அதிபதி
துணைநின்ஹர்சக்/கி, நின்சர், நின்குர்ரா, தம்கினா
குழந்தைகள்உது, மர்துக், உத்து, நின்சர், நின்குர்ரா, நின்டி

கடவுள் என்கி தொடர்பான பல தொன்மக் கதைகள் தற்கால தெற்கு இராக் முதல் லெவண்ட் கடற்கரைப் பகுதிகளில் உள்ள பல தொல்லியல் களங்களில் கிடைத்த ஆப்பெழுத்து கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகிறது. கிமு மூவாயிரம் ஆண்டுகளில் பண்டைய அண்மை கிழக்கில் சிறப்புடன் விளங்கிய என்கி வழிபாடு, கிமு 320-இல் தொடங்கிய எலனியக் காலத்தின் போது வீழ்ச்சி அடைந்தது.

என்கி எனில் பூமியின் தலைவர் என மொழிபெயர்க்கப்படுகிறது. சுமேரிய ஆப்பெழுத்து கல்வெட்டுகளில் கடவுள் என்றும் தலைமைப் பூஜாரி என்றும் குறிப்பிட்டுள்ளது.

அக்காடியர் (காலம்:கிமு2300) காலத்திய முத்திரையில் இடமிருந்து வலமாக கடவுளர்கள் இஷ்தர், உது, என்கி மற்றும் இருமுகம் கொண்ட இசிமூத்
அக்காடியப் பேரரசர் சர்கலிசாரி (கிமு2200) காலத்திய உருளை முத்திரையில், கடவுள் என்கி மற்றும் நீண்ட கொம்புகளைக் கொண்ட நீர்யானைகள் [1][2][3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Cylinder Seal of Ibni-Sharrum". Louvre Museum.
  2. "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
  3. Brown, Brian A.; Feldman, Marian H. (2013). Critical Approaches to Ancient Near Eastern Art. Walter de Gruyter. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781614510352.

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Enki
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்கி&oldid=3714905" இலிருந்து மீள்விக்கப்பட்டது