ஆதாத் (வானிலைக் கடவுள் ஆங்கிலம்: Hadad; உகாரிட்க்: அத்து, 𐎅𐎄𐎆, Haddu); அக்காதியம்: ஆதாத், ஹத்தாத்) பண்டைய அண்மை கிழக்கைச் சேர்ந்த மெசொப்பொத்தேமியாவின் பண்டைய மெசொப்பொத்தேமியாரின் சமயத்தைச் சார்ந்தவர்கள் சுமேரிய மொழியில் புயல் மற்றும் மழை கடவுள் என்கின்றனர். சுமேரிய மொழி என்பது வடமேற்கு செமிடிக் மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவு ஆகும்.[1][2]

ஆதாத்
Hadad
ஆதாத்தின் சிலையை சுமந்தபடி அசீரியப் படைவீரர்கள்
இடம்சொர்க்கம்
துணைசாலா Shala
பெற்றோர்கள்சின் புராணம் மற்றும் நிங்கள்.
சகோதரன்/சகோதரிஉடு, இனன்னா
குழந்தைகள்கிபில் அல்லது போர் கடவுள்

உறுதிசெய்யப்பட்டக் காலம் மற்றும் இடம்

தொகு

கிமு 2500 வரை உறுதிப்படுத்தப்படாத இந்த "ஆதாத்" (Hadda) எனும் மழைக் கடவுளை, கிமு 2500 இல், சிரியாவில் முந்தைய அரசாட்சியில் ஒன்றாக இருந்த "எப்லா இராச்சியம் மற்றும் லெவண்ட் என்னும் சாம் பகுதியில் அதாத் வழிபாடு உறுதிசெய்யப்பட்டது.[3][4]

சாம் என்பது, கிழக்கு மத்தியதரைக் கடலில் அமைந்த சைப்பிரசு, மற்றும் நிலநடுக்கடலின் கிழக்கே அமைந்த வடக்கு அரேபிய தீபகற்பத்தின் பகுதிகளான இசுரேல், யோர்தான், லெபனான், பாலத்தீனம், சிரியா, மற்றும் தெற்கு துருக்கி அடங்கிய பகுதிகளாகும்.[5][6]

பின்புலம்

தொகு

ஆதாத் கடவுளை, தென்மேற்கு ஆசியாவிலுள்ள டைகிரிசு ஆறு, புறாத்து ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளம் மிகுந்த பகுதியான மெசொப்பொத்தேமியா எமோரியரின் (Amorites) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு ஒரு பண்டைய யூத மொழி பேசும் மக்களான அக்கேதியர்கள் (அசிரியா-பபிலோனியா) அது ஆதாத் கடவுள் என அறிந்தார்கள்.[7][8]

உபப் பெயர்கள்

தொகு

ஆதாத் (Hadad) மற்றும் இஸ்குர் (Iškur)[9] என்பது ஒரு சுமேரிய வார்த்தையில் "புயல் கடவுள்" என்ற பொருளாகும் இது, சொல்லச்சு (Logogram ) முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும், "பிதர்" (pidar), "ரபியு" (Rapiu), அல்லது "பாகால் சிப்போன்" (Baal Zephon)[10] என்றும் அழைக்கப்படுகிறது,மேலும் எளிமையாக "பாகால்" (இறைவன்) என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர், ஆனால் இந்த பெயரை மற்ற தெய்வங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.[11]

அடையாளம்

தொகு

காளை (எருது), ஆதாத் என்ற அடையாளப்பூர்வ விலங்காக இருந்தது. அவர் (கடவுள்) பெரும்பாலும் ஒரு காளையின் கொம்பு உடனான தலைப்பாகை அணிந்து, தாடியுடன் இடியேறு (thunderbolt) கையிலேந்தி மன்றகத்தில் தோன்றுவார்.[12][13][14][15] இந்தோ-ஐரோப்பிய ஏத்தியனான புயல்-கடவுளான "தேசுப்" (Teshub); எகிப்திய கடவுள் அமை (தெய்வம்) (Set (deity); ரிக்வேத கடவுள் இந்திரன்; கிரேக்க கடவுள் சியுசு; மற்றும் உரோமானியக் கடவுளான சூபிடர், போன்ற கடவுள்கள் ஆதாத் கடவுளுக்கு சமமாக கருதப்படுகிறது.[16]

சமய நூல்களில் ஆதாத்

தொகு

சமய நூல்களில், ஆதாத் (பாகால்) வானத்தின் இறைவனாவார் என்றும், அவர் வானத்திலிருந்து மழையைத் தருவதால், தனது விருப்பத்தின்படியே சக்திமிக்க தாவரங்கள் முளைத்தெழுந்து செழிப்பதாக கூறுகிறார்கள். மேலும், அவர் விவசாய மக்களின் வாழ்வு மற்றும் வளர்ச்சிப் பிராந்தியத்தின் பாதுகாவலன் என்கிறார்கள். ஆதாத் அல்லாத நிலையில் வறட்சி, பட்டினி, இறப்பு, மற்றும் குழப்பம் ஏற்படுகிறது. மேற்கு மலை காற்றும் இதை குறிக்கிறது.[17] மேலும், கிருத்துவ புனித நூலான விவிலியத்திலும் இவ்வாறாக சொல்லப்பட்டுள்ளது. (யாத்திராகமம் 14: 21,22)[18] அதிகாரம்: 21 இல், மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. அதிகாரம்: 22 இல், இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதில்சுவராக மாறியது.[19]

உப தகவல்

தொகு

சிரியாவில் உள்ள "உமயத் மசூதி" எனப்படும் ஒரு பள்ளிவாசலின் கிழக்கு வாயில் முகப்பு, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிதைந்து போன செஞ்சிக் கோட்டையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சூபிடர் தெய்வத்திற்கு உரோமர்கள் கட்டிய கோயிலின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. மேலும், பல வரலாறுகளை உள்ளடக்கிய இந்த பள்ளிவாசல்,[20] சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆதாத் என்ற தெய்வத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட கோயிலாக இருந்துள்ளது, பின்னர் ரோமர்கள் ஆட்சியில் சூபிடர் தேவதையின் கோயிலாக விரிவுபடுத்தப்பட்டது. சிரியாவுக்கு கிறித்தவம் வந்தபோது செயின்ட் ஜான் என்பவரால் கிறித்தவ திருக்கோயிலாக மாற்றப்பட்டது. பிற்காலத்தில், அரேபியாவில் இசுலாம் தோற்றுவிக்கப்பட்ட சமயம், உமயத் இசுலாமியப் பேரரசு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிரியாவைக் கைப்பற்றி, செயின்ட் ஜான் கிறித்தவக் கோயிலை, உமயத் பள்ளிவாசலாக மிகப் பிரமாண்டமாக மாற்றியமைத்தது.[21]

இதனையும் காண்க

தொகு

சான்றாதாரங்கள்

தொகு
  1. HADAD ON TOPIC
  2. "BAGDAD RAILWAY BADLY RUN DOWN". www.newworldencyclopedia.org (ஆங்கிலம்). 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2016.
  3. Sarah Iles Johnston. Religions of the Ancient World: A Guide. p. 173.
  4. Spencer L. Allen. The Splintered Divine: A Study of Istar, Baal, and Yahweh Divine Names and Divine Multiplicity in the Ancient Near East. p. 10.
  5. Mandyam Srinivasan, Theodore Stank, Philippe-Pierre Dornier, Kenneth Petersen (2014), Global Supply Chains: Evaluating Regions on an EPIC Framework – Economy, Politics, Infrastructure, and Competence: “EPIC” Structure – Economy, Politics, Infrastructure, and Competence, p. 3
  6. Ayubi, Nazih N. (1996), Over-stating the Arab State: Politics and Society in the Middle East p. 108
  7. Albert T. Clay. The Origin of Biblical Traditions: Hebrew Legends in Babylonia and Israel. p. 50.
  8. Theophilus G. Pinches. The Religion of Babylonia and Assyria. p. 15.
  9. http://www.ancientneareast.net/mesopotamian-religion/iskur-adad/
  10. Gibson, John C. (1978-04-01). Canaanite Myths and Legends. T&T Clark. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0567080897.
  11. "Has Anyone Worked with Ba'al Hadad". www.reddit.com (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  12. Sacred bull, holy cow: a cultural study of civilization's most important animal. By Donald K. Sharpes –Page 27
  13. Studies in Biblical and Semitic Symbolism - Page 63. By Maurice H. Farbridge
  14. Academic Dictionary Of Mythology - Page 126. By Ramesh Chopra
  15. The New Encyclopædia Britannica: Micropædia. By Encyclopaedia Britannica, inc – Page 605
  16. "features Temple of the Storm God". archive.archaeology.org (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  17. "Jezebel from "Promptuarii Iconum Insigniorum "". rosamondpress.com (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  18. யாத்திராகமம் 14: 21,22
  19. "Bible > Exodus > Chapter 14 > Verse 22". biblehub.com (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
  20. [1]
  21. "Baalbek". sacredsites.com (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆதாத்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாத்&oldid=3851133" இலிருந்து மீள்விக்கப்பட்டது