வடமேற்கு செமிடிக் மொழிகள்

வடமேற்கு செமிடிக் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவு ஆகும். இக்குழுவில் அடங்கும் மொழிகள் சுமார் 8 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றன. பொதுவாக இக்குழு மூன்று துணைக்குழுக்களாகப் பிரித்து நோக்கப்படுகிறது. அவையாவன: உகரிதிக், கானானிய, அறமைக் என்பனவாகும், இவற்றுள் உகரிதிக் மொழி அழிவுற்ற மொழியாகும். செமிடிக் மொழியியலாளர்கள், அரபு மொழி வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் கொண்டுள்ள தொடர்புகளை கருத்தில் கொண்டு, பொதுவாக வடமேற்கு செமிடிக் மொழிகளை அரபு மொழியுடன் சேர்த்து மத்திய செமிடிக் மொழிகள் என்ற பெருங்குழுவை அமைப்பர்.

வடமேற்கு செமிடிக்
லெவந்தைன்
புவியியல்
பரம்பல்:
மத்திய கிழக்கு பகுதிகளில் செறிவாகவுள்ளது
இன
வகைப்பாடு
:
ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு செமிடிக்
   மத்திய செமிடிக்
    வடமேற்கு செமிடிக்
துணைக்
குழுக்கள்:

அருகிப் போன மொழியான உகரிதிக் மொழியே முதலாவதாக இக்குழுவை சேர்ந்த மொழியாகும். உகரிதிக் மொழியின் "தாத்" () என்ற எழுத்தானது "ட்சேட்" () என்ற எழுத்துக்கு மாற்றம் பெற்றது. (இதே மாற்றம் அக்காத் மொழியுலும் ஏற்பட்டது) இதே எழுத்தானது அறமைக் மொழியில் "அயின்"(ʕ) என மாற்றமடைந்தது.

கானானிய மொழிகளிக்கு நல்ல உதாரணமாக எபிரேய மொழி]]யை குறிப்பிடலாம். கானானிய மொழிகள் முன்பு, இன்றைய இசுரேல், பாலஸ்தீனம், யோர்தான், லெபனான், மற்றும் சீனாய் குடா பகுதிகளில் பேசப்பட்டது. ā இலிருந்து ō க்கான மெயெழுத்து மாற்றம் கானானிய மொழிகளை உகரிதிக் மொழியிலிருந்து பிரிக்கிறது. மேலும், நாவினால் முன்பற்களை தொட்டவாறு உச்சரிக்கப்பட்ட மெய் எழுத்துக்களான (Interdental consonant) , மற்றும் என்பன மேல் பல்லுகும் கீழ் உதட்டுக்குமிடையே காற்றை ஓடவிட்டு உச்சரிக்கப்படும் மெய் எழுத்துக்களான (Sibilant consonant) z, š மற்றும் ஆக மாற்றம் பெற்றது. இதன் தாக்கங்களை பின்வரும் சொற்களை ஒப்பிட்டு காணலாம்:

மாற்றம் உகரதிக் அறமைக் எபிரேய கருத்து
z ḏhb dəhaḇ zāhāḇ பொன்
š ṯlṯ təlāṯ šālôš மூன்று
ṱw ṭûr ṣûr மலை

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.