அரமேயம்

(அறமைக் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரமேயம் (Aramaic;[1] אַרָמָיָא Arāmāyā, Classical Syriac: ܐܪܡܝܐ‎, அரபு மொழி: آرامية‎) என்பது ஒரு மொழி அல்லது மொழிக்குடும்பம் ஆகும். இது ஆப்பிரிக்க-ஆசிய துணை பிரிவை சேர்ந்த செமித்திய மொழி ஆகும். குறிப்பாக இது கானானிய மொழிகளான எபிரேயம் பொனீசியம் போன்றவை அடங்கிய வடமேற்கு செமித்திய குடும்ப பிரிவாகும் அரமேய எழுத்துமுறை பரவலாக பல மொழிகளிலும் எபிரேயம் சிரிக் அரேபிய எழுத்து முறைகளில் எடுத்தாளப்படுகிறது. 3000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றை கொண்ட செமித்திய மொழியான அரமேயம் [2] பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. மத்திய கிழக்கில் இருந்த செமித்திய மக்களின் பேச்சு மொழியாகவும் அரமேயம் இருந்தது. வரலாற்றுரீதியாக அரமேயம் சிரியாவிலும் புறாத்து ஆற்றின் வடபகுதி பள்ளத்தாக்குகளிலும் இருந்த அரமேய பழங்குடிகளின் மொழி. கிமு 1000 ஆண்டுவாக்கில் அரமேயர்கள் தற்போதய மேற்கு சிரியா பகுதியில் பல அரசுக்களை கொண்டிருந்தனர். புது அசிரியன்கள் பேரரசின் (கிமு 911-615) தலைமையில் அரமேயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெசபடோமியா, சிரியா முழுவதும் வளர்ந்தது. அரமேயத்தின் புகழ் அதிகளவில் இருந்தபோது தற்கால ஈராக், சிரியா, லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், சோர்டான், ஈரானின் வடமேற்கு, குவைத், வடக்கு அரேபியா, கிழக்கு அரேபியா, தென்கிழக்கு தென் மத்திய துருக்கியில் அரமேயத்தின் பல வடிவங்கள் பேசப்பட்டது[3].

அரமேயம்
ܐܪܡܝܐ‎, ארמיא
Arāmāyā
புவியியல்
பரம்பல்:
லெவண்ட், பிறைவடிவ வளமான நிலம், கீழை அரேபியா
மொழி வகைப்பாடு: ஆப்பிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு செமிடிக்
   மத்திய செமிடிக்
    வடமேற்கு செமிடிக்
     அரமேயம்
துணைப்பிரிவு:
கீழை அரமேயம்
மேலை அரமேயம்
ISO 639-2 639-5: arc

தானியே, எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அரமேயம் இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது.[4][5][6] புது அரமேயம் இன்று பல மக்கட் கூட்டங்களாற் பேசப்படுகிறது. இவர்கள் சிதறி வாழ்கிறார்கள். முக்கியமாக அசிரியாவில் வாழ்ந்த அசிரியர்களால் பேசப்பட்டது. புது அசிரியன் அதிகாரிகளின் எழுத்தர்கள் அரமேயத்தை பயன்படுத்தினார்கள், அதனாலும் சில நிருவாக பயன்களாலும் அவர்களுக்கு பின் வந்த புது பாபிலோனிய இராச்சியத்தினரும் (கிமு 605-539) மற்றும் அகாமனிசியர்களும் (கிமு 539-323) அரமேயத்தை நிருவாகத்திலும் வணிகத்திலும் பயன்படுத்தினார்கள்.[7][8]

தரப்படுத்தப்பட்ட அரேமியத்தை (இது அகாமனிசியர் பேரரசின் அரேமியம் என்றும் அழைக்கப்படுகிறது) அகாமனிசியர்கள் வணிகத்தில் பயன்படுத்தினார்கள். அதிகாரபூர்வமற்றதாக இருந்தாலும் அனைவராலும் அகாமனிசியர் பகுதிகளில் வணிகத்துக்கு பயன்படுத்தும் மொழியாக அரேமியம் இருந்தது. அரேமயத்தின் நெடிய வரலாறும் பன்முகமும் பரவலாக பேசப்பட்டதும் பல வட்டார வழக்குகள் தோன்ற காரணமாயின. இந்த வட்டார வழக்குகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன அவற்றில் பல தனி மொழிகளாக வளர்ச்சி கண்டன. எனவே அரமேயம் என்பது தனி ஒரு மொழியை மட்டும் குறிக்காது. எந்த இடத்தில் எவ்வளவு காலம் பேசப்படுகிறது என்பதை பொறுத்து அதில் மாற்றம் இருக்கும். அதிகமான மக்களால் பேசப்படும் கிழக்கு அரமேயமும் மான்டய்க்கம் தற்காலத்தைய வட ஈராக், வட கிழக்கு சிரியா, வடமேற்கு ஈரான், தென் கிழக்கு துருக்கி என்று குர்துகள் வசிக்கும் பகுதியிலேயே பேசப்படுகின்றன. அழியும் தருவாயிலுள்ள வட அரமேயம் சிறு குழுக்களால் வட சிரியாவிலும் இசுரேலிலும் பேசப்படுகின்றது.

சில அரமேய மொழிகள் சில குழுக்களால் புனிதம் வாய்ந்தவையாக கருதப்பட்டு மத சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. மான்டய்க் அப்படிப்பட்ட மொழி ஆகும். வாழும் அரேமிய மொழியான இது மாண்டேயிசம் எனப்படும் இனக்குழுவின் மொழியாகவும் உள்ளது. சிரிஅக் என்பது சிரியக் கிறுத்துவம், கிழக்கு அசிரியன் திருச்சபை, அசிரியன் மரபுவழி திருச்சபை, அசிரியன் பெந்தகொசுத்தே திருச்சபை, பழமையான கிழக்கு அசிரியன் திருச்சபை, சிரியக் கத்தோலிக்க திருச்சபை, மாரோநைட் திருச்சபை, இந்திய புனிதர் தாமசின் கிறுத்துவ திருச்சபை போன்றவை திகமாக சிரியக் என்ற அரேமய மொழியை புனிதமாக கருதி மத சடங்குகளில் பயன்படுத்துகின்றன.[9]

செமித்திய மொழிக் கூட்டம்

தொகு

அரமேயம் ஆப்பிரிக்க-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இக்குடும்பத்துட் காணப்படும் பல தரப்பட்ட மொழிகளில் அரமேயம் செமித்திய மொழிக் கூட்டத்தை சேர்ந்ததாகும். மேலும் கானானிய மொழிகள் அடங்கும். அரமேய மொழி வடமேற்கு செமித்திய மொழிகள் கூட்டத்தை சேர்ந்தது.

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

வரலாறு

தொகு

இம்மொழியின் வரலாறு, மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • பண்டைய அரமேயம் - 1100 BCE–200 CE
  • இடைக்கால அரமேயம் - 200–1200
    • சிரிய இலக்கியம்.
    • தல்மூத் அரமேயம், தார்கும், மிட்ராஸ்.
    • மன்டலிக் மொழி.
  • தற்கால அரமேயம் - 1200 முதல் இன்று வரை
    • பல தற்கால பிரதேச வழக்குகள்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Stuart Creason (2008). "Aramaic". In Roger D. Woodard (ed.). The Ancient Languages of Syria-Palestine and Arabia. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-68498-9. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  2. Beyer (1986: 11) suggests that written Aramaic probably dates from the 11th century BC, as it is established by the 10th century, to which he dates the oldest inscriptions of northern Syria. Heinrichs (1990: x) uses the less controversial date of the 9th century, for which there is clear and widespread attestation.
  3. Kilpatrick, Hilary (1996). "Modernity in a Classical Arabic Adab Work, the Kitāb al-Aghānī". In Smart, J. R. (ed.). Tradition and Modernity in Arabic Language And Literature. Curzon Press. p. 253.
  4. "Aramaic". The Eerdmans Bible Dictionary. (1987). Ed. Allen C. Myers. Grand Rapids, Michigan: William B. Eerdmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2402-1. “It is generally agreed that Aramaic was the common language of Israel in the first century AD. Jesus and his disciples spoke the Galilean dialect, which was distinguished from that of Jerusalem (Matt. 26:73).” 
  5. "Aramaic language". Encyclopædia Britannica.
  6. "What Language Did Jesus Speak?". Markdroberts.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
  7. Chyet, Michael L. (1997). Afsaruddin, Asma; Krotkoff, Georg; Zahniser, A. H. Mathias (eds.). Humanism, Culture, and Language in the Near East: Studies in Honor of Georg Krotkoff. Eisenbrauns. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-020-0. In the Middle Iranian period (Parthian and Sassanid Empires), Aramaic was the medium of everyday writing, and it provided scripts for writing Middle Persian, Parthian, Sogdian, and Khwarezmian.
  8. Green 1992, ப. 45
  9. "City Youth Learn Dying Language, Preserve It". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. May 9, 2016. பார்க்கப்பட்ட நாள் May 9, 2016.

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அரமேயம்ப் பதிப்பு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aramaic language
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரமேயம்&oldid=3948791" இலிருந்து மீள்விக்கப்பட்டது