விவிலிய நூல்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

விவிலிய புத்தகங்கள் (நூல்கள்) யூத சமயத்தவராலும் கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரேய விவிலியம் என்று கூறுவதும் உண்டு.

கிறித்தவர்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கும் விவிலிய நூல் தொகுதி இயேசு கிறிஸ்துவின் போதனையை உள்ளடக்கிய பகுதியாகிய நற்செய்தி நூல்களையும், அப்போதனையின் அடிப்படையில் அமைந்த வேறு நூல்களையும் கொண்டுள்ளது.

புதிய ஏற்பாட்டு நூல்கள் எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டைப் பொறுத்தமட்டில், கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபுவழி திருச்சபையும் புரடஸ்தாந்து சபைகளைவிட அதிகமான சில நூல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்நூல்கள் எபிரேய மொழியிலன்றி, கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை ஆகும்.

யூதமார்க்கம் மற்றும் கிறிஸ்தவத்தில் புனிதமாக கருதப்படுகின்ற திருமுறை(Cannon) செய்யப்பட்ட புத்தகங்களின் தொகுப்பே வேதாகம்ம் ஆகும். ஆங்கிலத்தில் பைபில் என்று இதை கூறுவர் (கோயின் கிரேக்க மொழியில் τὰ βιβλία, tà biblía என்றால் “புத்தகங்கள்” என்று பொருள்). பல்வேறு மார்க்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு விதங்களில் தங்கள் புனித நூல்களை திருமுறை செய்வார்கள். பல்வேறு வரிசைகளின்படியும், புத்தகங்களை பிரித்தும், சில சமயங்களில் புதிய புத்தகங்களை சேர்த்தும் முறைபடுத்தி திருமுறை செய்வார்கள். சீர்திருத்த கிறிஸ்தவ வேதாகமங்களில் அறுபத்து ஆறு புத்தகங்களும், எத்தியோப்பிய வைராக்கிய திருச்சபை வேதாகமங்களில் எண்பத்து ஒன்று புத்தகங்களும் இடம்பெற்று இருக்கின்றன. எபிரேய வேதாகம்ம் அல்லது டான்காவில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட இருபத்து நான்கு புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதல் ஐந்து புத்தகங்கள், தோரா (போதனை அல்லது சட்டம்), அடுத்தது நெவி’இம் (தீர்க்கதரிசிகள், இறைவாக்கினர்கள்), இறுதியாக கெத்துவிம் (எழுத்துக்கள்). கிறிஸ்தவ வேதாகமத்தின் முதல் பகுதி பழைய ஏற்பாடு. இதில் முப்பத்து ஒன்பதாக பிரிக்கப்பட்ட இருபத்து நான்கு புத்தகங்கள் இடம்பெற்று இருக்கின்றன. எபிரேய வேதாகமத்தில் இருந்து வித்தியாசமாக முறைபடுத்தப்பட்டு இருக்கின்றன. கத்தோலிக்க மற்றும் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் இணைக்கப்பட்ட திருமறை நூல்களையும் தங்கள் பழைய ஏற்பாட்டுடன் இணைத்து இருக்கிறார்கள். கிறிஸ்தவ வேதாகமத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாடு. இதில் இருபத்து ஏழு நூல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அவற்றுல் திருமுறைபடுத்தப்பட்ட நான்கு நற்செய்தி நூல்களும், திருத்தூதர் பணிகளும் (அப்போஸ்தலருடைய நடபடிகள்), இருபத்து ஓரு திருமுகங்கள் (கடிதங்கள்) மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம் ஆகியவை அடங்கி இருக்கின்றன. பொது ஊழிக்கு முன் (கிறிஸ்துவுக்கு முன்) 2ஆம் நூற்றாண்டில் யூத குழுவினர் வேதாகமத்தை “புனித புத்தகங்கள்” (பரிசுத்த நூல்கள்) என்று அழைத்தனர். இப்போது பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் அடங்கிய கிறிஸ்தவ வேதாகமத்தை பரிசுத்த வேதாகமம் (புனித திருவிவிலியம்) என்று பொதுவாக அழைக்கின்றனர். முழு வேதாகமும் தெய்வீக வெளிப்பாடுகள் உடையவை என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். நீண்ட காலமாக அழியாமல் இருக்கும் பழங்கால கிரேக்க தோல்படிமான வேதாகமங்கள் பொது ஊழி (கிறிஸ்துவுக்கு பின்) 4ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. எபிரேயத்திலும், அரமேயத்திலும் கிடைத்த பழமை வாய்ந்த தானாக் தோல்படிமான புத்தகங்கள் பொது ஊழி 10ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. ஆனால், ஆரம்ப நூற்றாண்டு மொழிபெயர்ப்பான செப்த்துவாஜிந்தம் (Septuagint) கோடக்ஸ் வேடிகனஸில் பொது ஊழி 4ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்ப்ட்டன. 13ஆம் நூற்றாண்டில் ஸ்டீஃபன் லேங்டன் என்பவரால் வேதாகமம் அதிகாரங்களாக பிரிக்கப்பட்ட்து. ஃப்ரெஞ்சு பதிப்பாளர் ராபர்ட் எஸ்டியன் அவர்களால் 16ஆம் நூற்றாண்டில் வசன்ங்களாக பிரிக்கப்பட்டன. இதன் மூலமாக இப்போது வேதாகம வசனங்கள் புத்தகம், அதிகாரம் மற்றும் வசனத்தின் மூலமாக மேற்கோள்காட்டப்படுகின்றது. ஆண்டிற்கு 2 கோடியே 50 லட்சம் பிரதி வேதாகமங்கள் விற்பனை ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றிலும், இலக்கியத்திலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக இது முதலாவதாக அதிகமாக பதிப்பு செய்யப்பட்ட கிழக்கத்திய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

சொல்லிலக்கணம்:

தொகு

பைபில் என்கிற ஆங்கில வார்த்தை பைபிலியா என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து உருவானது. இடைக்கால லத்தீன் மற்றும் பிந்தைய லத்தீன் ஆகியவை கோயின் கிரேக்கத்தில் இருந்தே இவ்வார்த்தையை பெற்று இருக்கின்றன. கோயின் கிரேக்கத்தில் τὰ βιβλία ta biblia என்றால் “புத்தகங்கள்” (ஒருமை βιβλίον biblion). இடைக்கால லத்தீனில் பைபிலியா என்கிற வார்த்தையின் பொருள் சுருக்கமான ஒருமையில் “புனித புத்தகம்”. பிற்கால லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் பைபிலியா என்கிற வார்த்தையின் பொருள் நடுநிலையான பன்மையை குறிக்கின்றன. இடைக்கால லத்தீனில் படிப்படியாக இது பெண்பால் ஒருமை பெயர்சொல்லாக கருதப்பட தொடங்கியது (பைபிலியா, பொதுவாக பைபிலியே). மேற்கு ஐரோப்பியாவின் வழக்கச்சொல்லில் இந்த வார்த்தை கடன்வாங்கப்பட்டு ஒருமையாகவே பயன்படுத்தப்படுகின்றது. கிரேக்கத்தில் இருக்கும் τὰ βιβλία τὰ ἅγια ta biblia ta hagia (பரிசுத்த நூல்கள், புனித நூல்கள்) என்னும் வார்த்தை லத்தீனில் புனித நூல் அல்லது பரிசுத்த புத்தகம் என்று மொழிபெயர்க்கப்படுகின்றது. βιβλίον என்கிற வார்த்தைக்கே ’தாள்’ அல்லது ’தோல்சுருள்’ என்னும் அர்த்தம் இருக்கின்றது. புத்தகத்தை குறிக்கும் இயல்பான வார்த்தையாக அது மாறியது. இது ’எகிப்திய பாபைரஸ்’(βύβλος bublos) என்பதன் மருவிய சொல். எகிப்திய பாபைரஸ் ஏற்றுமதி செய்யப்பட்ட பீனிக்க துறைமுகம் பைப்லோஸ்ஸில் இருந்து இந்த பெயர் உருவாகி இருக்க்க்கூடும். கிரேக்க வார்த்தை டா பைபிலியா (சிறிய பாபைரஸ் புத்தகங்கள்) என்பது ஹெலனிய யூதர்களின் புனித புத்தகத்தை (செப்துவாஜிந்தம்) குறிக்கும் வழக்கச் சொல்லில் இருந்து உருவானது. பொது ஊழி 223ல் கிறிஸ்தவர்கள் இந்த சொல்லை பயன்படுத்தியதற்கு சான்று இருக்கின்றது. கிரேக்க வாக்கியமான ’தா பைபிலியா’வை பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் குறிப்பிட பயன்படுத்திய முதல் எழுத்தாளர் கிறிஸோதோம் என்று தோன்றுகிறது என்று வேத அறிஞர் எஃப்.எஃப்.ப்ரூஸ் குறிப்பிடுகின்றார் (ஹோமிலீஸ் ஆன் மேத்யூ என்கிற அவருடைய புத்தகத்தில், பக்கம் 386 முதல் 388 வரை குறிப்பிடுகின்றார்).(ஹோமிலீஸ் ஆன் மேத்யூ என்கிற அவருடைய புத்தகத்தில், பக்கம் 386 முதல் 388 வரை குறிப்பிடுகின்றார்).

கிறிஸ்தவ வேதாகமங்கள்

தொகு

கிறிஸ்தவர்கள் தெய்வீக உந்துதலோடு எழுதப்பட்ட புத்தகஙக்ள் என்று கருதும் ஒரு புத்தகத்தொகுப்பே கிறிஸ்தவ வேதாகமம். ஆதி திருச்சபை அரமேய பேச்சாளர்களை வைத்து செப்துவாஜிந்தம் மற்றும் தார்கம்களையே முக்கியமாக பயன்படுத்தினார்கள். எனினும், அப்போஸ்தலர்கள் (திருத்தூதர்கள்) குறிப்பிட்ட சில புதிய வேத பகுதிகளை விட்டுச்செல்லவில்லை. புதிய ஏற்பாட்டின் திருமுறை பின்னரே வளர்ச்சி அடைந்தது. கிறிஸ்தவர்களுக்கு உள்ளே இருக்கும் பல்வேறு பிரிவினர் பல்வேறு இணைதிருமறை புத்தகங்களை தங்கள் புனித நூலோடு இணைத்து இருக்கிறார்கள்.

பழைய ஏற்பாடு

தொகு

கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கை கத்தோலிக்கர்கள், வைராக்கிய சபைகளுக்கும் சீர்திருத்த திருச்சபையினருக்கும் இடையே வேறுபடுகின்றது. எபிரேய வேதாகமத்தில் இருக்கும் புத்தகங்களை மாத்திரமே சீர்திருத்த இயக்கத்தினர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், கத்தோலிக்கர்களும், வைராக்கிய கிறிஸ்தவர்களும் விரிவான திருமுறையை பெற்று இருக்கிறார்கள். சில குழுக்கள் சில குறிப்பிட்ட மொழிபெயர்ப்புகளை மாத்திரம் தெய்வீக உந்துதல் உடையனவாக கருதினார்கள். அவை கிரேக்க செப்துவாஜிந்தம், அரமேய பெசித்தா மற்றும் ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழியாக்கம்.

இணைதிருமறை அல்லது தள்ளுபடி புத்தகங்கள்
தொகு

கிழக்கத்திய கிறிஸ்தவத்தில் செப்துவாஜிந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் இப்போதும் வழக்கத்தில் இருந்து வருகின்றன. 10 ஆம் நூற்றாண்டு மேசோரெடிக் படிமானங்களுக்கு சாதகமாக செப்துவாஜிந்தம் தடைசெய்யப்பட்டது. பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட மேசோரெடிக் படிமானங்கள் அடிப்படையாக அமைந்தன. சில நவீன மொழிபெயர்ப்புகள் 14 ஆம் நூற்றாண்டு முதல் மேசோரெடிக் படிமானங்களை தெளிவுபடுத்த செப்துவாஜிந்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள். செப்துவாஜிந்தம் எபிரேய படிமானத்தின் வேறுபட்ட வாசகத்தை பாதுகாத்து இருக்கலாம் என்பதால், அதை தெளிவான புரிந்துகொள்ளுதலுக்காக பயன்படுத்துகிறார்கள். மற்ற படிமானங்களில் காணப்படும் சில வேறுபட்ட வாசகங்களையும் அவர்கள் சில நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக சவக்கடல் சுருள்களுக்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமானங்களையும் சிலர் பயன்படுத்தி தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

பெசித்தா அல்லது கிரேக்க செப்துவாஜிந்தத்தின் பகுதிகளாக இருந்த பல புத்தகங்கள் எபிரேய வேதாகமத்தில் காணப்படுவது இல்லை. அத்தகைய புத்தகங்கள் இணைதிருமறை புத்தகங்கள் என்று ரோம கத்தோலிக்க சபையினரால் பின்னர் செய்யப்பட திருமறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அந்த திருமுறை ட்ரெண்ட் குழுவினால் (1545-1563) தீர்மானிக்கப்பட்டது. அதிலே 46 பழைய ஏற்பாட்டு புத்தகங்களும் (புலம்பல் மற்றும் எரேமியாவின் புத்தகங்கள் ஒன்றாக கருதப்பட்டால் 45) 27 புத்தகங்கள் புதிய ஏற்பாட்டிலும் இடம் பெற்றன.

பெரும்பாலான சீர்திருத்த திருச்சபையினர் இதை தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கின்றனர். நவீன சீர்திருத்த பாரம்பரியம் இணைத்திருமறை புத்தகங்கள் திருமுறை செய்யப்பட்டதாக ஏற்றுக்கொள்வது இல்லை. எனினும், 1820 வரை சீர்திருத்த வேதாகமங்களில் இவை தள்ளுபடி புத்தகங்களாக பிற்சேக்கை செய்யப்பட்டு வந்தன. ரோம கத்தோலிக்க மற்றும் கிழக்கத்திய வைராக்கிய சபைகள் இந்த புத்தகங்களை பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதினார்கள்.

புதிய ஏற்பாடு
தொகு

4 வகையான கிறிஸ்தவ இலக்கியத்தை சார்ந்த 27 புத்தகங்களின் சேர்க்கையே புதிய ஏற்பாடு ஆகும். இந்த நான்கு வகை இலக்கியங்கள் பின்வருமாறு நற்செதி நூல்கள், திருத்தூதர் பணிகள் அல்லது அப்போஸ்தலர் நடபடிகள், கடிதங்கள் மற்றும் கடவுளுடைய அருள் வெளிப்பாடு). இயேசுவே மைய பாத்திரம் வகிக்கிறார். பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிற்கு நிழலாக அமைகின்றது (2 தீமோத்தேயு 3:16). எல்லா கிறிஸ்தவர்களும் புதிய ஏற்பாட்டை திருமுறை செய்யப்பட்ட வேதபகுதிகளாகவே கருதுகின்றனர்.

நற்செய்தி நூல்கள்
தொகு

சுருக்கமான நற்செய்தி நூல்கள் -> மத்தேயு எழுதின நற்செய்தி நூல் -> மாற்கு எழுதின நற்செய்தி நூல் -> லூக்கா எழுதின நற்செய்தி நூல் யோவான் எழுதின நற்செய்தி நூல் அப்போஸ்தலருடைய நடபடிகள் (அ) திருத்தூதர் பணிகள்

பவுலுடைய கடிதங்கள்
தொகு

-> ரோமருக்கு எழுதின கடிதம் -> கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதம் -> கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் -> கலாத்தியருக்கு எழுதிய கடிதம் -> எபேசியருக்கு எழுதிய கடிதம் -> பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் -> கொலோசெயருக்கு எழுதிய கடிதம் -> தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் கடிதம் -> தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம்

போதக கடிதங்கள்
தொகு

-> தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் -> தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் -> தீத்துவுக்கு எழுதிய கடிதம் -> பிலமோனுக்கு எழுதிய கடிதம் -> எபிரேயருக்கு எழுதிய கடிதம்

பொதுவான கடிதங்கள். கத்தோலிக்க கடிதங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
தொகு

-> யாக்கோபு எழுதிய கடிதம் -> பேதுரு எழுதிய முதலாம் கடிதம் -> பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் -> யோவான் எழுதிய முதலாம் கடிதம் -> யோவான் எழுதிய இரண்டாம் கடிதம் -> யோவான் எழுதிய மூன்றாம் கடிதம் -> யூதா எழுதிய கடிதம்

வெளிப்படுத்தல் புத்தகம்
தொகு

எபிரேய வேதாகமம்

தொகு

எபிரேய வேதாகமத்தின் அதிகாரபூர்வ பதிவுகள் மேசோரெடிக் பதிவுகள் ஆகும். மேசோரெடிக் பதிவுகள் யூத திருமுறையின் புத்தகங்களை குறிப்பிடுகின்றன. அதோடு வேதாகம புத்தகங்ளுக்கான துல்லியமான வார்த்தைகளையும், அவற்றின் ஒலி மற்றும் உச்சரிப்பையும் குறிப்பிடுகின்றன. மேசோரெடிக் பதிவுகளில் பழமை வாய்ந்த பதிவுகள் பொது ஊழி 9 ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. மேசோரெடிக் பதிவுகளின் பழமையான நகலான அலெப்போ கோடெக்ஸ் 10 ஆம் நூற்றாண்டை சார்ந்த்து. இந்த அலெப்போ கோடெக்ஸ் இப்போது தோரா பிரிவில் காணப்படுவது இல்லை. தனாக் (எபிரேயத்தில் תנ"ך) எபிரேய வேதாகமத்தின் முப்பிரிவுகளை குறிப்பிடுகின்றது. அவை தோரா (போதனை), நேவி’’இம்(தீர்க்கதரிசிகள்) மற்றும் கெத்துவிம் (எழுத்துக்கள்).

தோரா

தொகு

தோராவை (תּוֹרָה) ”மோசேயின் ஐந்து புத்தகங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றது. ஐந்து தோல்சுருள் உறை எனப்படும் பெந்தாதுவாச் என்றும் தோரா அழைக்கப்படுகின்றது. இப்புத்தகங்களின் பெயர்களின் அப்புத்தகங்களின் முதல் வார்த்தைகளில் இருந்து பெறப்படுகின்றன. தோரா பின்வரும் ஐந்து புத்தகங்களை உள்ளடக்கியது  ஆதியாகமம்-தொடக்கநூல், பெரெஷித் (בראשית)  யாத்திராகமம்-விடுதலைப்பயணம், ஷேமோட் (שמות)  லேவியராகம்ம்-லேவியர், வாயிக்ரா (ויקרא)  எண்ணாகமம்-எண்ணிக்கை, பாமித்பார் (במדבר)  உபாகமம்-இணைச் சட்டம், தேவாரிம் (דברים) ஆதியாகமத்தின் முதல் 11 அதிகாரங்கள் மனிதனை படைத்தல், மனித வரலாறு மற்றும் மனித இனத்தோடு கடவுளுடைய ஆரம்பகால உறவை குறித்து குறிப்பிடுகின்றது. மீதம் இருக்கும் முப்பத்து ஒன்பது அதிகாரங்கள் ஆதி பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு (இவர் இஸ்ரயேல் என்றும் அழைக்கப்படுகின்றார்) கடவுள் அளித்த வாக்குறுதியை பற்றி குறிப்பிடுகின்றன. இஸ்ரயேலின் பன்னிரண்டு மகன்கள் (இஸ்ரயேல் புத்திரர்), குறிப்பாக யோசேப்பு ஆகியவருக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியை குறித்தும் அந்த முப்பத்து ஒன்பது அதிகாரங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஆபிரகாம் தன் தந்தையை விட்டுவிட்டு, ஊர் என்கிற தன் தாய்நாட்டில் இருந்து வெளியேறவும், கானான் என்னும் நாட்டில் நிரந்தரமாக தங்கிவிடவும் கடவுளால் கட்டளை பெறுவதாகவும், பின்னர் இஸ்ரவேல் புத்திரர் எகிப்துக்கு செல்வதாகவும் இப்புத்தகம் குறிப்பிடுகின்றது. மீதம் இருக்கும் தோராவின் நான்கு புத்தகங்களும் முற்பிதாக்களுக்கு பிறகு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த மோசேயை பற்றி குறிப்பிடுகின்றன. எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரவேல் புத்திரர்களை பாலைவனத்தின் வழியாக சீனாய் மலைக்கு கடவுளுடைய வாக்குறுதியை புதுபிக்க மோசே அழைத்துச் செல்கின்றார். கானானுக்கு செல்ல ஒரு புதிய தலைமுறை உருவாகும் வரை மோசே அவர்களை வழிநடத்தினார். மோசேயின் மரணத்தோடு தோரா நிறைவுபெறுகின்றது.

நேவி’இம்

தொகு

தோராவுக்கும் கெத்துவிமுக்கும் இடையில் இருக்கும் இரண்டாவது முக்கிய பிரிவு நேவி’இம்(எபிரேயர்: Nəḇî'îm‎ , נְבִיאִים, தீர்க்கதரிசிகள்). இதில் இரண்டு இணை பிரிவுகள் இருக்கின்றன. அவை முற்கால தீர்க்கதரிசிகள் (Nevi'im Rishonim נביאים ראשונים), மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகள் (Nevi'im Aharonim נביאים אחרונים) ஆகும். யோசுவா, நியாயாதிபதிகள் (நீதித்தலைவர்கள்), சாமுவேல், இராஜாக்கள் (அரசர்கள்) ஆகிய புத்தகங்கள் முற்கால தீர்க்கதரிசிகள் பிரிவில் அடங்குகின்றன. ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகள் ஆகிய புத்தகங்கள் ஆகியவை பிற்கால தீர்க்கதரிசிகள் பிரிவில் அடங்குகின்றன. எபிரேய மன்னராட்சியின் தொடக்கத்தையும், ஆதி இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் இரண்டு ராஜ்யங்களாக அது பிளவுபடுவதையும், இஸ்ரவேல் நாட்டிற்கும் மற்ற நாட்டினருக்கும் இடையே நடைபெறும் சண்டைகளையும், இஸ்ரவேலர்களுக்குள் நடைபெறும் சண்டைகளையும் குறிப்பாக, கடவுளை நம்புகிறவர்களுக்கும், அன்னிய தெய்வங்களை வணங்குபவர்களுக்கும் இடையே நடைபெறும் சண்டைகளையும் நேவி’இம் குறிப்பிடுகின்றது. நீதி, நியாயம் இல்லாமல் நடந்துகொள்ளும் இஸ்ரவேலின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நேவி’இம்மில் விமர்சிக்கப்படுகின்றார்கள். இதில் தீர்க்கதரிசிகள் முக்கிய பங்குவகிக்கின்றனர். இஸ்ரவேல் ராஜ்யத்தை அசீரியர்களும், யூத ராஜ்யத்தை பாபிலோனியர்களும் கைப்பற்றி, எருசலேம் கோவில் இடிக்கப்படுவதோடு இப்பிரிவு நிறைவுபெறுகின்றது.

முற்கால தீர்க்கதரிசிகள்

தொகு

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல் மற்றும் இராஜாக்கள் ஆகிய புத்தகங்கள் முற்கால தீர்க்கதரிசிகள் பிரிவை சேரும். மோசேயின் மரணத்திற்கு பிறகு யோசுவா தெய்வீக இடைபாட்டினால் தலைவராக நியமிக்கப்படுவதில் இருந்து இப்பிரிவு தொடங்குகின்றது. யோசுவா வாக்குறுதி கொடுக்கப்பட்ட இடத்திற்கு இஸ்ரவேல் புத்திரரை அழைத்துச் செல்கிறார். யூதாவின் கடைசி அரசர் சிறையில் இருந்து விடுதலை செயப்படுவதோடு இப்பிரிவு நிறைவுபெறுகின்றது. சாமுவேல் மற்றும் இராஜாக்கள் ஆகியவற்றை ஒரே புத்தகமாக கருதி அவை கூறும் கருத்துக்களை பின்வருமாறு பார்க்கலாம்.  யோசுவா கானான் நாட்டை கைப்பற்றுகின்றார் (யோசுவா புத்தகத்தில்)  கைப்பற்றிய இடத்திலே மக்களின் பிரச்சனைகள் (நியாயாதிபதில் புத்தகத்தில்)  தங்கள் எதிரிகளுக்கு முன்பாக அந்த நாட்டில் தங்கி இருப்பதற்காக அரசர் வேண்டும் என்று இஸ்ரவேல் மக்கள் கடவுளிடம் மன்றாடுதல் (சாமுவேல் 1&2 ஆம் புத்தகங்களில்)  தாவீது அரசரின் வீட்டில் இருந்து கடவுள் நியமித்த அரசர்கள் மூலமாக நாட்டை கைப்பற்றுவது முதல் வெளிநாட்டிற்கு வெளியேறிச் செல்வது வரை (1&2 இராஜாக்கள்).

யோசுவா
தொகு

யோசுவாவின் புத்தகத்தில் (Yehoshua יהושע) மோசேயின் மரணம் முதல் யோசுவாவின் மரணம் வரை இஸ்ரவேலர்களின் வரலாறு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முன்பே கடவுளால் நியமிக்கப்பட்ட யோசுவா, மோசேயின் மரணத்திற்கு பிறகு யோர்தான் ஆற்றை கடக்கும்படி கடவுளிடம் இருந்து கட்டளை பெறுகின்றார். இப்புத்தகத்தில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன:  நாட்டை கைப்பற்றும் வரலாறு (1-12)  நாட்டை பல்வேறு கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கும் பங்கிட்டு, அடைக்கள நகரங்களை நியமித்து, லேவியர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல் (13-22). அதன் பிறகு கிழக்கத்திய கோத்திரங்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்புதலும் இப்பகுதியில் அடங்கும்.  யோசுவாவின் நிறைவு சொற்பொழிவும், அவருடைய மரணமும் (23,24).

நியாயாதிபதிகள்
தொகு

நியாயாதிபதிகள்(Shoftim שופטים) புத்தகம் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது.  முன்னுரை (1:1-3:10, 3:12). யோசுவா புத்தகத்தின் சுருக்கத்தை கூறுகின்றது.  முக்கிய பகுதி (3:11-16:31) பெரிய நியாயாதிபதில், அபிமலேக்கு மற்றும் சில சிறிய நியாயாதிபதிகளை குறித்த குறிப்புகள்.  பிற்சேர்க்கை (17:1-21:25), நியாயாதிபதிகளை பற்றி விவாதிக்காமல், அவர்கள் காலத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் மாத்திரம் குறிப்பிடப்படுகின்றன.

சாமுவேல்
தொகு

சாமுவேல் (Shmu'el שמואל) புத்தகம் ஐந்து பிரிவுகளைக் கொண்ட்து.  கடவுள் ஏலியை நிராகரித்தல், சாமுவேலின் பிறப்பு, மற்றும் கடவுளின் நியாயத்தீர்ப்பு (1 சாமுவேல் 1:1-7:17).  தாவீதை சந்திப்பதற்கு முன்பு சவுலின் வாழ்க்கை (I சாமுவேல் 8:1-15:35).  சவுல் தாவிதோடு உரையாடுதல் (I சாமுவேல் 16:1- II சாமுவேல் 1:27).  தாவீதின் ஆட்சியும், அவர் சந்திக்கும் எதிர்ப்புகளும் (II சாமுவேல் 2:1-20:22).  ஒழுங்குமுறை இல்லாமல், மற்ற வாக்கியங்களோடு தொடர்ச்சியாக இடம்பெறாமல், கொடுக்கப்பட்டு இருக்கும் பிற்சேர்க்கை (II சாமுவேல் 22:1-24:25). இதன் முடிவுரை போன்ற ஒரு பகுதி I இராஜாக்கள் 1-2ல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தாவீதுக்கு எதிராக தீங்கு செய்தவர்களை பழிவாங்கும்படி தாவீது சாலமோனிடம் கூறுகின்றார். சாமுவேல் புத்தகத்தில் இருக்கும் பாடங்களின் கருத்துக்கள் நாளாகம (குறிப்பேடு) புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. (II சாமுவேல் 11:2-12-:29) பத்சேபாளை குறித்த சம்பவம் நாளாகமம் 20ல் பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது.

இராஜாக்கள்
தொகு

ஆதி இஸ்ரவேல் ராஜ்யம் மற்றும் யூதா ராஜ்யத்தை ஆட்சிசெய்த மன்னர்களை குறித்து இராஜாக்கள் (Melakhim מלכים) புத்தகம் குறிப்பிடுகின்றது. சாலமோன் பதவி ஏற்ற பிறகு யூதருக்கு இருந்த பொதுசொத்துக்கள் முதல் பாபிலோனிய மன்ன்ன் நேபிகாத்நேச்சாரினால் அடிமைப்படுத்தப்படுவது வரை உள்ள பதிவேடுகளும் இதில் அடங்கி இருக்கின்றன.

பிற்கால தீர்க்கதரிசிகள்

தொகு

பிற்கால தீர்க்கதரிசிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றார்கள். ஒன்று பெரிய தீர்க்கதரிசிகள் மற்றொன்று சிறிய தீர்க்கதரிசிகள். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகிய புத்தகங்கள் பெரிய தீரிக்கதரிசிகளின் புத்தகங்கள் ஆகும். மீதம் இருக்கும் 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் ஒரே புத்தகமாக தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

ஏசாயா
தொகு

ஏசாயா புத்தகத்தின் (Yeshayahu [ישעיהו]) 66 அதிகாரங்களும் யூதாவை துன்புறுத்தும் நாடுகளுக்கு கிடைக்க இருக்கும் நீதித்தீர்ப்பை குறிப்பிடுகின்றன. பாபிலோன், அசீரியா, பிலிஸ்தியா, மோவாபு, சீரியா மற்றும் வடக்கு இஸ்ரவேல், எத்தியோப்பியா, எகிப்து, அரேபியா மற்றும் பீனிக்கியா ஆகியவை இந்த நாடுகளில் உள்ளடங்கும். இவர்களுக்கு எதிரான இறைவாக்கை சுருக்கமாக பின்வருமாறு கூறிவிடலாம், யாவே உலகம் முழுவதற்கும் கடவுள், தங்கள் சொந்த ஆற்றலில் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் நாடுகள், கடவுளின் ஆணைப்படி மற்ற நாடுகளால் கைப்பற்றப்படும். ஏசாயா கடவுளுடைய இறைவாக்கினராக அழைக்கப்படுவது அதிகாரம் 6ல் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. அதிகாரங்கள் 35-39 வரை எசேக்கியா மன்னரை குறித்து குறிப்பிடுகின்றது. அதிகாரம் 24-34ஐ வரையறுப்பது சற்று கடினம். என்றபோதிலும், அவை கடவுளால் நியமிக்கப்பட்ட மெசியா என்கிற நபரை குறித்தும், அவர் ஏற்படுத்த இருக்கும் நீதியும் நியாயமும் நிறைந்த அரசாட்சியான மெசியா ராஜ்யத்தை குறித்தும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இப்பகுதி தாவீதின் சந்ததியில் பிறந்து யூதாவை ஒரு பெரிய சாம்ராஜ்யமாகவும், எருசலேமை தூய நகரமாகவும் மாற்றப்போகும் ஒரு ராஜாவை குறித்து விவரிப்பதாக யூதர்கள் கருதுகின்றனர். அதிகாரம் 40ல் “ஆறுதலின் புத்தம்” தொடங்குகின்றது. அதில் அந்த தீர்க்கதரிசனம் தொடர்கின்றது. இப்பகுதியில் அந்த தீர்க்கதரிசனம் நிறைவுபெறுகின்றது. ஆறுதலின் புத்தகத்தின் முதல் எட்டு அதிகாரங்களில் பாபிலோனிடம் இருந்து விடுதலை பெற்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நாட்டிலே ஒன்றுபட்ட இஸ்ரவேல் வாழும் என்று ஏசாயா இறைவாக்கு அளிக்கின்றார். அதிகாரம் 44ல் யூதர்களே கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் என்று குறிப்பிடுகின்றார். யூதர்களுடைய ஒரே கடவுள் யாவே மாத்திரமே என்றும், பாபிலோனியர்களுக்கு தான் யார் என்பதை காண்பிப்பார் என்றும் அதிகாரம் 46 வரை குறிப்பிடுகின்றார். அதிகாரம் 45:1ல் பாபிலோனியர்களை வீழ்த்தி இஸ்ரவேலர்களை அவர்கள் சொந்த நாட்டில் நிலைத்து இருக்க செய்யப்போகும் மெசியா பெர்சிய மன்னர் சைரஸ் என்று குறிப்பிடப்படுகின்றது. மீதம் இருக்கும் அதிகாரங்களில் உண்மையுள்ள பணியாளரின் ஆட்சியின் கீழ் சீயோனுக்கு கிடைக்க இருக்கும் எதிர்கால மகிமையை குறித்து குறிப்பிடப்பட்டு இருக்கின்றது(அதிகாரம் 52&54). அதிகாரம் 53ல் இந்த பணியாளரை பற்றிய ஒரு கவிதைநயமான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு இருக்கின்றது. கிறிஸ்தவர்கள் இது இயேசுவை குறிப்பிடுவதாகவும், யூதர்கள் இது கடவுளுடைய மக்களை குறிப்பிடுவதாகவும் கருதுகின்றனர். தவறான ஆராதனையாளர்களுக்கும், பொய் தெய்வங்களை வழிபடுகின்றவர்களுக்கும் காத்திருக்கும் நீதித்தீர்ப்பை குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தாலும் (அதிகாரம் 65&66), கடவுளுடைய பூலோக ராஜ்யத்தில் தனக்கு உண்மையாக பணிபுரியும் மக்களுக்கு நீதியுள்ள மீட்பு கிடைக்கும் என்னும் நம்பிக்கையின் செய்தியோடு இப்புத்தகம் நிறைவுபெறுகின்றது.

எரேமியா
தொகு

எரேமியா (Yirmiyahu [ירמיהו])புத்தகம் இருபத்து மூன்று இணைபிரிவுகளாக பிரிக்கப்படலாம். அதன் உள்ளடக்கங்கள் ஐந்து இணை பிரிவுகளாக பகுக்கப்படுகின்றன:  முன்னுரை, அதிகாரம் 1  இஸ்ரவேலரின் பாவத்தினால் ஏற்பட்ட வெறுப்பு உணர்வு, ஏழு பிரிவுகளில் இடம்பெறுகின்றது (1.) அதி 2; (2.) அதி 3-6; (3.) அதி. 7-10; (4.) அதி 11-13; (5.) அதி 14-17:18; (6.) அதி 17:19-ch. 20; (7.) அதி 21-24  அனைத்து நாடுகளும் தங்கள் அழிவை முன் அறிந்துகொள்ளுதல், இரண்டு பிரிவுகளில் (1.) அதி. 46-49; (2.) அதி 25;மூன்று பிரிவுகளில் இஸ்ரவேலின் வரலாறு பின்சேர்க்கை செய்யப்ப்டுகின்றது, (1.) அதி. 26; (2.) அதி. 27; (3.) அதி. 28, 29.  மேன்மையான காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையை சித்தரிக்கும் இரண்டு பிரிவுகள் (1.) அதி. 30, 31; (2.) அதி. 32,33;  முடிவுரை, இரண்டு பிரிவுகளில், (1.) அதி. 36; (2.) அதி. 45.


எகிப்திலே ஒரு இடைவெளிக்கு பிறகு எரேமியா மூன்று பிரிவுகளை சேர்த்து இருக்கக்கூடும். அவை அதி. 37-39; 40-43; மற்றும் 44. முக்கியமான மெசியா குறித்த தீர்க்கதரிசன்ங்கள் அதிகாரங்கள் 23:1-8; 31:31-40; மற்றும் 33:14-26ல் இடம்பெற்று உள்ளன. எரேமியாவின் தீர்க்கதரிசன்ங்களில் ஒரே வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் சித்தரிப்புகள் மீண்டும் மீண்டுமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

எரேமியாவின் தீர்க்கதரிசன்ங்களில் ஒரே வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் சித்தரிப்புகள் மீண்டும் மீண்டுமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

எசேக்கியேல்
தொகு

எசேக்கியேல் (Yehezq'el [יחזקאל]) புத்தகத்தில் மூன்று வித்தியாசமான பிரிவுகள் இருக்கின்றன:  இஸ்ரவேலுக்கு எதிரான நீதித்தீர்ப்பு-தன் சக யூதேயர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார் (3:22-24). பொய் இறைவாக்கினருக்கு எதிராக, எருசலேமுக்கு அழிவு ஏற்படும் என்பதை உறுதிபடுத்துகின்றார் (4:1-3). அதிகாரங்கள் 4 மற்றும் 5ல் எருசலேம் அடையப்போகும் சிறுமை அடையாளங்களாக சித்தரிக்கபப்டுகின்றன. லேவிய சட்டங்களை அவர் அறிந்து இருப்பதையும் வெளிப்படுத்துகின்றார். (உதாரணங்கள் யாத்திராகமம் 22:30; உபாகமம் 14:21; லேவியராகமம் 5:2; 7:18,24; 17:15; 19:7; 22:8).  அம்மோனியர்கள் ( எசேக்கியேல். 25:1-7), மோவாபியர்கள் ( 25:8-11), ஏதோமியர்கள் 25:12-14), பெலிஸ்டிஹ்யர்கள் ( 25:15-17), தீரு மற்றும் சீதோன் ( 26-28), எகிப்து (29-32)ஆகிய பல்வேறு அண்டை நாடுகளுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கின்றார்.  நேபுகாத்நெச்சார் II எருசலேமை அழிப்பதன் மூலம் தீர்க்கதரிசனம் நிறைவேறுகின்றது: இஸ்ரவேல் மற்றும் கடவுளுடைய ராஜ்யம் பூமியில் வெற்றி பெறுகின்றன. ( எசேக்கியேல் 33-39 ); மெசியாவின் காலங்கள், மற்றும் கடவுளுடைய ராஜ்யம் நிலைநாட்டப்படுவதன் தீர்க்கதரிசனங்கள் ( 40-48).

பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகள்
தொகு

பன்னிரண்டு, Trei Asar (תרי עשר), பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகள் என்றும் அழைக்கப்படும். • ஓசியா, ஓசேயா (הושע) • யோவேல், யோவேல் (יואל) • ஆமோஸ், ஆமோஸ் (עמוס) • ஒபதியா, ஒபதியா (עבדיה) • யோனா, யோனா (יונה) • மீகா, மீக்கா (מיכה) • நாகூம், நாகூம் (נחום) • ஆபகூக், ஆபக்கூக்கு (חבקוק) • செப்பனியா, செப்பனியா (צפניה) • ஆகாய், ஆகாய் (חגי) • சகரியா, செக்கரியா (זכריה) • மல்கியா, மலாக்கி (מלאכי)

கெத்துவிம்

தொகு

கெத்துவிம் (வேதாகம எபிரேயத்தில் כְּתוּבִים , எழுத்துக்கள்) தனாக்கின் மூன்றாம் மற்றும் இறுதி பிரிவு ஆகும். ரூவாக் ஹாகோதேஷின் கீழ் கெத்துவிம்கள் எழுதப்பட்டு இருப்பதாக நம்பப்படுகின்றது. ஆனால், இவற்றின் அதிகாரத்துவம் தீர்க்கதரிசனத்தை காட்டிலும் ஒரு படி குறைந்து காணப்படுகின்றது.

இலக்கிய புத்தகங்கள்

தொகு

மேசோரெடிக் படிமானங்களில் (சில பதிப்புகளிலும்) சங்கீதம்(திருப்பாடல்கள்), நீதிமொழிகள் மற்றும் யோபு போன்ற புத்தகங்கள் இரண்டு அடி வசனங்களாக எழுதப்பட்டு இருக்கின்றன. அவை அவர்களுடைய இலக்கிய செயல்பாட்டை குறிக்கின்றன. இம்மூன்று புத்தகங்களும் ஒருசேர சிஃப்ரீ எம்னெட் என்று அழைக்கப்படுகின்றன (எபிரேய மொழியின் அகவரிசைப்படி איוב, משלי, תהלים ஆகியவற்றின் முதல் எழுத்துக்கள் எம்னெட் אמ"ת என்பதை கொடுக்கின்றது, இதுவே உண்மை என்பதை குறிக்கும் எபிரேய சொல்லும் இதுவே.

தனாக்கில், வசனங்களுக்கு இடையே இருக்கும் ஒத்துவாக்கியங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சிறப்பான உச்சரிப்பு வாய்ப்பாடுகளை உடைய புத்தகங்களும் இவை மாத்திரமே. எனினும், யோபு புத்தகத்தின் ஆரம்பமும், முடிவும் இயல்பான இலக்கண நடையிலேயே எழுதப்பட்டு இருக்கின்றன.

ஐந்து சுருள்கள் (ஹாமேஷ் மெகில்லாட்)

தொகு

உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், பிரசங்கி, எஸ்தர் ஆகிய ஐந்து புத்தகங்களுகும் ஒருசேர ஹாமேஷ் மெகில்லாட் என்று அழைக்கப்படுகின்றன (ஐந்து மெகில்லாட்). கடைசியாக சேகரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள், 2ஆம் பொது ஊழிவரை இவை நிறைவுபெறாமல் இருந்தன. எனினும், யூத திருமுறையில் இவை அதிகாரபூர்வமானவை என்று சான்றுபெற்றன.

மற்ற புத்தகங்கள்

தொகு

இலக்கியம் மற்றும் ஐந்து சுருள்களை தவிற கெத்துவிமில் மீதம் இருக்கும் புத்தகங்கள் தானியேல், எஸ்றா, நெகேமியா மற்றும் நாளாகமம் ஆகும். இந்த புத்தகங்கள் முறையாக யூத பாரம்பரியத்தின்படி தொகுக்கப்படவில்லை என்ற போதிலும், இவை அனைத்திற்கும் பொதுவான பல குணாதிசயங்கள் உண்டு. • சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை இவை வெளிப்படையாக விவரிக்கின்றன (அதாவது, பாபிலோன் சிறையிருப்பு மற்றும் சீயோன் புதுப்பிக்கப்படுதல் ஆகிய நிகழ்வுகள்). • இவை அனைத்திற்கும் தால்முட் பாரம்பரியம் தாமதமாகவே அங்கீகாரம் வழங்கியது. • தனாக்கில் இருக்கும் தானியேல் மற்றும் எஸ்றா ஆகிய இரண்டு புத்தகங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்க அளவு அரமேய மொழியில் எழுதப்பட்ட பகுதிகள் இருக்கின்றன.

புத்தகங்களின் ஒழுங்குமுறை

தொகு

பெரும்பாலான அச்சு பதிப்புகளில் கெத்துவிம் புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருக்கும் ஒழுங்குமுறையை பின்வரும் பட்டியல் வெளிப்படுத்துகின்றது. சிஃப்ரீ எமெட் மற்றும் ஹாமேஷ் மெகில்லாட்டின் அடிப்படையில் இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

மூன்று இலக்கிய புத்தகங்கள் (சிஃப்ரீ எமெட்) • தெஹிலிம் (சங்கீதங்கள், திருப்பாடல்கள்) úÀäÄìÄÌéí • மிஷ்லேய் (நீதிமொழிகள்) îÄùÀìÅé • லியோப் (யோபு) àÄéÌåÉá

ஐந்து மெகில்லாட் (ஹாமேஷ் மெகில்லாட்) • ஷிர் ஹாஷ்ஷிரிம் (உன்னதப்பாட்டு) அல்லது (இனிமைமிகு பாடல்கள்) ùÄÑéø äÇùÑùÄÑéøÄéí • ரூத் (ரூத்தின் புத்தகம்) øåÌú • எய்கா (புலம்பல்) àéëä (எபிரேயத்தில் கின்னோத் என்றும் அழைக்கப்படுகின்றது). • க்யோஹொலெத் (பிரசங்கி) ÷äìú • எஸ்தர் (எஸ்தரின் புத்தகம்) àÆñÀúÅø

மற்ற புத்தகங்கள் • தானியேல் (தானியேலின் புத்தகம்) ãÈÌðÄéÅÌàì • எஸ்றா (எஸ்றா மற்றும் நெகேமியாவின் புத்தகம்) òæøà • திவ்ரேய் ஹா-யாமிம் (நாளாகமம்) ãáøé äéîéí

யூத பாரம்பரியம் கெத்துவிமின் புத்தக வரிசையை முடிவுசெய்யவே இல்லை. பாபிலோனிய தால்முட் (பவா பத்ரா 14ஆ-15அ) பின்வருமாறு வரிசைப்படுத்துகின்றது. ரூத், சங்கீதங்கள், யோபு, நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, புலம்பல்கள், தானியேல், எஸ்தர், தானியேல், எஸ்றா.

திருமுறைபடுத்துதல்

தொகு

வேதாகம திருமுறையில் இறுதியாக ஏற்ற்குக்கொள்ளப்பட்ட மூன்று பகுதிகளில் கடைசியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது கெத்துவிம். இஸ்ரவேலில், 5ஆம் நூற்றாண்டு பொது ஊழிக்கு முன்பே தோரா திருமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முற்கால மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகள் பொது ஊழிக்கு முன்பு 2 ஆம் நூற்றாண்டில் திருமுறை செய்யப்பட்டது. 2 ஆம் பொது ஊழிக்கு பிறகு தான் கெத்துவிம் திருமுறை செய்யப்பட்டது. தீர்க்கதரிசிகள் திருமுறை செய்யப்பட்ட சிறிது நாட்களிலேயே, திருமுறை செய்யப்படும் என்கிற நம்பிக்கையில் கெத்துவிமை தங்கள் புனித நூலோடு இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொண்டதாக சான்றுகள் இருக்கின்றன. கெத்துவிமிற்கு முறையான தலைப்பு இல்லாத நிலையிலே, பொது ஊழிக்கு முன் 132 ஆம் ஆண்டில் கெத்துவிம் வடிவம் பெற்றதாக குறிப்புகள் காணப்படுகின்றன. நான்கு நற்செய்தி நூல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் மற்ற நூல்கள் அனைத்திற்கும் பொது ஊழி 1 ஆம் நூற்றாண்டிலேயே மதரீதியான அங்கீகாரம் பெற்று இருந்தன என்று குறிப்புகள் கூறுகின்றன. ஜான்மியா ஆலோசனை சங்கம் பொது ஊழி 90ல் கெத்துவிமை திருமுறை செய்ததாக பல அறிஞர்கள் நம்புகின்றார்கள். ”ஒருவரும் சேர்க்கக்கூடாத, நீக்கக்கூடாத, எழுத்தின் ஒரு உறுப்பையும் மாற்றக்கூடாத” மூடப்பட்ட திருமுறையாக எபிரேய வேதாகமத்தின் வாக்கியங்கள் கருதப்பட வேண்டும் என்று பொது ஊழி 95ல் வெளியான ஜொசீஃபசின் ’எபியானுக்கு எதிராக’ என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த தேதிக்கு பிறகு எஸ்தர், உன்னதப்பாட்டு மற்றும் பிரசங்கி ஆகிய புத்தகங்களின் தெய்வீக உந்துதல் சந்தேகத்து உரியதாக கருதப்பட்டன.

மூல மொழிகள்

தொகு

தனாக் பெரும்பாலும் வேதாகம எபிரேயத்திலேயே எழுதப்பட்டது. சில பகுதிகள் மாத்திரம் அரமேயத்தில் எழுதப்பட்டு இருந்தன (எஸ்றா 4:8–6:18 and 7:12–26, எரேமியா 10:11, தானியேல் 2:4–7:28). இந்த அரமேய மொழி யூத பாரம்பரியத்தில் குடியாட்சி மொழியாக மாறியது.

பழைய ஏற்பாடு

தொகு
தனாக்
(யூத விவிலியம்)
புரடஸ்தாந்தம் கத்தோலிக்கம் கிழக்கு மரபுவழி திருச்சபை மூல மொழி
தோரா அல்லது அறநெறி நூல்கள்
பென்டடூக் அல்லது ஐந்நூல்கள்
பெரெஷிட் (= தொடக்கத்தில்) தொடக்க நூல் தொடக்க நூல் தொடக்க நூல் எபிரேயம்
ஷெமொத் (= பெயர்கள்) விடுதலைப் பயணம் விடுதலைப் பயணம் விடுதலைப் பயணம் எபிரேயம்
வயிக்ரா (= அவர் அழைத்தார்) லேவியர் லேவியர் லேவியர் எபிரேயம்
பெமிட்பார் (= பாலைநிலத்தில்) எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை எபிரேயம்
தெவாரிம் (வார்த்தைகள்) இணைச் சட்டம் இணைச் சட்டம் இணைச் சட்டம் எபிரேயம்
நெவீம் அல்லது இறைவாக்கினர்கள்
வரலாறு
யோசுவா யோசுவா யோசுவா யோசுவா எபிரேயம்
நீதித் தலைவர்கள் நீதித் தலைவர்கள் நீதித் தலைவர்கள் நீதித் தலைவர்கள் எபிரேயம்
கீழே பார் ரூத்து ரூத்து ரூத்து எபிரேயம்
சாமுவேல் 1 சாமுவேல் 1 சாமுவேல் 1 சாமுவேல் (1 அரசுகள்)[1] எபிரேயம்
2 சாமுவேல் 2 சாமுவேல் 2 சாமுவேல் (2 அரசுகள்)[1] எபிரேயம்
அரசர்கள் 1 அரசர்கள் 1 அரசர்கள் 1 அரசர்கள் (3 அரசுகள்)[1] எபிரேயம்
2 அரசர்கள் 2 அரசர்கள் 2 அரசர்கள் (4 அரசுகள்)[1] எபிரேயம்
குறிப்பேடு
கீழே பார்
1 குறிப்பேடு 1 குறிப்பேடு 1 குறிப்பேடு எபிரேயம்
2 குறிப்பேடு 2 குறிப்பேடு 2 குறிப்பேடு எபிரேயம்
எஸ்ரா கிரேக்கம் (அல்லது அரமேயம் ?)
எஸ்ரா ( நெகேமியாவோடு)
கீழே பார்
எஸ்ரா எஸ்ரா எஸ்ரா (2 எஸ்திராஸ்)[1][2] எபிரேயம்(+அரமேயம்)
நெகேமியா நெகேமியா நெகேமியா (2 எஸ்திராஸ்)[1][2] எபிரேயம்
தோபித்து தோபித்து அரமேயம்
யூதித்து யூதித்து எபிரேயம்
கீழே பார் எஸ்தர் எஸ்தர்[3] எஸ்தர்[3] எபிரேயம்
1 மக்கபேயர்[4] 1 மக்கபேயர் எபிரேயம் அல்லது அரமேயம்?
2 மக்கபேயர்[4] 2 மக்கபேயர் கிரேக்கம்
3 மக்கபேயர் கிரேக்கம்
4 மக்கபேயர் கிரேக்கம்
ஞான நூல்கள்
கீழே பார் யோபு யோபு யோபு எபிரேயம்
கீழே பார் திருப்பாடல்கள் திருப்பாடல்கள் திருப்பாடல்கள்[5] எபிரேயம்
ஓடிஸ்[6][சான்று தேவை] எபிரேயம் (+ கிரேக்கம்)
கீழே பார் நீதிமொழிகள் நீதிமொழிகள் நீதிமொழிகள் எபிரேயம் [சான்று தேவை]
கீழே பார் சபை உரையாளர் சபை உரையாளர் சபை உரையாளர் எபிரேயம்
கீழே பார் இனிமைமிகு பாடல் இனிமைமிகு பாடல் இனிமைமிகு பாடல் எபிரேயம்
சாலமோனின் ஞானம் சாலமோனின் ஞானம் கிரேக்கம்
சீராக்கின் ஞானம் சீராக்கின் ஞானம் எபிரேய மொழி; பின்னர் கிரேக்கத்தில் பெயர்க்கப்பட்டது
பெரிய இறைவாக்கினர்கள்
எசாயா எசாயா எசாயா எசாயா எபிரேயம்
எரேமியா எரேமியா எரேமியா எரேமியா எபிரேயம்(+ அரமேயம்)
கீழே பார் புலம்பல் புலம்பல் புலம்பல் எபிரேயம்
பாரூக்கு[7] பாரூக்கு[7] எபிரேயம் [8]
எரேமியாவின் கடிதம்[9] கிரேக்கம் (அல்லது எபிரேயம்/அரமேயம்?)[10]
எசேக்கியேல் எசேக்கியேல் எசேக்கியேல் எசேக்கியேல் எபிரேயம்
கீழே பார் தானியேல் தானியேல்[11] தானியேல்[11] எபிரேயம் + அரமேயம்
சிறிய இறைவாக்கினர்கள்
ட்ரை அசார் அல்லது பன்னிரெண்டு ஓசேயா ஓசேயா ஓசேயா எபிரேயம்
யோவேல் யோவேல் யோவேல் எபிரேயம்
ஆமோஸ் ஆமோஸ் ஆமோஸ் எபிரேயம்
ஒபதியா ஒபதியா ஒபதியா எபிரேயம்
யோனா யோனா யோனா எபிரேயம்
மீக்கா மீக்கா மீக்கா எபிரேயம்
நாகூம் நாகூம் நாகூம் எபிரேயம்
அபக்கூக்கு அபக்கூக்கு அபக்கூக்கு எபிரேயம்
செப்பனியா செப்பனியா செப்பனியா எபிரேயம்
ஆகாய் ஆகாய் ஆகாய் எபிரேயம்
செக்கரியா செக்கரியா செக்கரியா எபிரேயம்
மலாக்கி மலாக்கி மலாக்கி எபிரேயம்
கெத்துவிம் அல்லது படைப்புகள் (எழுத்துகள்) (Writings)[12]
திருப்பாடல்கள் எபிரேயம்
நீதிமொழிகள் எபிரேயம்
யோபு எபிரேயம்
இனிமைமிகு பாடல் எபிரேயம்
ரூத்து எபிரேயம்
புலம்பல் எபிரேயம்
சபை உரையாளர் எபிரேயம்
எஸ்தர் எபிரேயம்
தானியேல் எபிரேயம் + அரமேயம்
எஸ்ரா (நெகேமியாவோடு) எபிரேயம்(+ அரமேயம்)
குறிப்பேடு எபிரேயம்
மேலே பார்[4] 1 மக்கபேயர் எபிரேயம் அல்லது அரமேயம்?
மேலே பார்[4] 2 மக்கபேயர் கிரேக்கம்

புதிய ஏற்பாடு

தொகு

புதிய ஏற்பாட்டில் உள்ள 27 நூல்களையும் எல்லாக் கிறித்தவ சபைகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றின் வரிசை அமைப்பு மட்டும் சில வேளைகளில் மாறுபடுகிறது. கத்தோலிக்கம், கிரேக்க மரபுவழி சபை, புரடஸ்தாந்தம் ஆகிவை ஒரே வரிசைமுறையைக் கொண்டுள்ளன. அர்மீனிய, எத்தியோப்பிய மரபுகள் வேறு வரிசைமுறையைக் கடைப்பிடிக்கின்றன.

கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, புரடஸ்தாந்தம்,
மற்றும் பெரும்பான்மையான மரபுவழி திருச்சபைகள்
லூதரனியம் மரபுவழி சிரிய திருச்சபை மூல மொழி
(நடைமுறை கிரேக்க மொழி)
நற்செய்திகள்
மத்தேயு மத்தேயு மத்தேயு கிரேக்கம் (?)[13]
மாற்கு மாற்கு மாற்கு கிரேக்கம்
லூக்கா லூக்கா லூக்கா கிரேக்கம்
யோவான் யோவான் யோவான் கிரேக்கம்
திருத்தூதர்கள் பணி வரலாறு
திருத்தூதர் பணிகள் திருத்தூதர் பணிகள் திருத்தூதர் பணிகள் கிரேக்கம்
பவுலின் திருமுகங்கள்
உரோமையர் உரோமையர் உரோமையர் கிரேக்கம்
1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் கிரேக்கம்
2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கிரேக்கம்
கலாத்தியர் கலாத்தியர் கலாத்தியர் கிரேக்கம்
எபேசியர் எபேசியர் எபேசியர் கிரேக்கம்
பிலிப்பியர் பிலிப்பியர் பிலிப்பியர் கிரேக்கம்
கொலோசையர் கொலோசையர் கொலோசையர் கிரேக்கம்
1 தெசலோனிக்கர் 1 தெசலோனிக்கர் 1 தெசலோனிக்கர் கிரேக்கம்
2 தெசலோனிக்கர் 2 தெசலோனிக்கர் 2 தெசலோனிக்கர் கிரேக்கம்
1 திமொத்தேயு 1 திமொத்தேயு 1 திமொத்தேயு கிரேக்கம்
2 திமொத்தேயு 2 திமொத்தேயு 2 திமொத்தேயு கிரேக்கம்
தீத்து தீத்து தீத்து கிரேக்கம்
பிலமோன் பிலமோன் பிலமோன் கிரேக்கம்
பொதுத் திருமுகங்கள்
எபிரேயர் எபிரேயர்[L 1] எபிரேயர் கிரேக்கம் (?)[14]
யாக்கோபு யாக்கோபு[L 1] யாக்கோபு கிரேக்கம்
1 பேதுரு 1 பேதுரு 1 பேதுரு கிரேக்கம்
2 பேதுரு 2 பேதுரு கிரேக்கம்
1 யோவான் 1 யோவான் 1 யோவான் கிரேக்கம்
2 யோவான் 2 யோவான் கிரேக்கம்
3 யோவான் 3 யோவான் கிரேக்கம்
யூதா யூதா[L 1] கிரேக்கம்
திருவெளிப்பாடு
திருவெளிப்பாடு திருவெளிப்பாடு[L 1] கிரேக்கம்

அட்டவணைக் குறிப்புகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 எபிரேயர், யாக்கோபு, யூதா, திருவெளிப்பாடு ஆகிய நான்கு விவிலிய நூல்களை ஏற்பது பற்றிச் சிறிது தயக்கம் இருந்தாலும், மார்ட்டின் லூதர் தாம் பதிப்பித்த செருமானிய விவிலியத்தில் அவற்றைச் சேர்த்தே பதித்தார்.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் செப்துவசிந்தா மொழிபெயர்ப்பாகும்
 2. 2.0 2.1 எஸ்ரா மற்றும் நெகேமியா நூல்களை யூத விவிலியம் ஒன்றெனக் கொள்ளும்
 3. 3.0 3.1 103 வசனங்கள் கத்தோலிக்க மற்றும் மரபுவழி சபை விவிலியத்தில் மேலதிகமாக உள்ளன
 4. 4.0 4.1 4.2 4.3 உட்பிரிவின் படி இவ்வரிசை மாறும்
 5. கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றெங்கும் காணப்படாத 151ஆம் திருப்பாடலைச் சேர்த்துக்கொள்கிறது
 6. கத்தோலிக்க, புரடஸ்தாந்த விவிலியங்களில் காணப்படுவதில்லை
 7. 7.0 7.1 கத்தோலிக்க விவிலியத்தில் 6ஆம் அதிகாரம் (எரேமியாவின் கடிதம்) அதிகமாக உள்ளது. யூத விவிலியம் மற்றும் புரடஸ்தாந்த விவிலியத்தில் இந்நூல் இடம் பெறவில்லை
 8. Britannica 1911
 9. மரபுவழி திருச்சபைகளில் இது தனி நூலாய் உள்ளது
 10. New English Translation of the Septuagint
 11. 11.0 11.1 கத்தோலிக்க, மற்றும் கீழை மரபு சபை விவிலியங்களில் தானியேல் நூலோடு மூன்று இணைப்புகள் மேலதிகமாக உள்ளன. அவை இளைஞர் மூவரின் பாடல், சூசன்னா, பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும் என்பவையாகும். இவை புரடஸ்தாந்த பழைய ஏற்பாட்டில் இல்லை.
 12. இந்நூல்கள் கிறித்தவ விவிலியத் திருமுறையில் வரலாற்று மற்றும் ஞான நூல்கள் வரிசையில் உள்ளன.
 13. அரமேயம் அல்லது எபிரேய மொழியிலும் எழுதப் பட்டிருக்கலாம்.
 14. எபிரேய மொழியிலிருந்து லூக்காவால் மொழிபெயர்க்கப்பட்டது என்போரும் உளர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_நூல்கள்&oldid=2755521" இலிருந்து மீள்விக்கப்பட்டது