கீசா தேவாலய தீவிபத்து

தீவிபத்து

கீசா தேவாலய தீவிபத்து (Giza church fire) என்பது 14 ஆகத்து 2022 அன்று, எகிப்தின் கெய்ரோவின், கீசாவின் இம்பாபா புறநகரில் உள்ள காப்டிக் தேவாலயமான அபு செபைன் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் போது ஏற்பட்ட தீ விபத்தாகும். இந்த வார இறுதிநாள் வழிபாட்டின்போது கிட்டத்தட்ட 5,000 வழிபாட்டாளர்கள் கூடியிருந்தனர்.[1][2][3] இத்தீவிபத்தின் போது 18 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார மற்றும் மக்கள்தொகை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.[4][5][2][6] இத்தீவிபத்தில் கொல்லப்பட்டவர்களில் தேவாலயத்தின் பாதிரியார்களில் அப்துல் மசிஹ் பாகித் என்பவரும் ஒருவர்.[7]

கீசா தேவாலய தீவிபத்து
Map
நாள்14 ஆகத்து 2022
இடம்அபு செபைன் தேவாலயத்தில், கீசா, எகிப்து
அமைவிடம்கீசா, எகிப்து
புவியியல் ஆள்கூற்று30°04′30″N 31°11′13″E / 30.07500°N 31.18694°E / 30.07500; 31.18694
வகைதீ
காரணம்மின்பழுது
இறப்புகள்41
காயமுற்றோர்45

பின்னணி தொகு

கட்டிடம் மற்றும் ஆய்வுத் தரநிலைகள் தரமானதாக இல்லாததாலும் மோசமான செயல்பாடு காரணமாகவும் எகிப்தில் மின்சார தீ விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.[8][2] இது போன்று தீவிபத்துகள் பல மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றுள் 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் 7 பேர் மருத்துவமனை தீவிபத்து ஒன்றில் உயிரிழந்தனர்.[2][6] 2002-ல் தொடருந்து ஒன்றில் ஏற்பட்ட தீயானது பெட்டிகள் முழுவதும் பரவியதால் 370 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சமீபத்தில் (2021-ல்) கெய்ரோவிற்கு வெளியே ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.[6]

இந்த தேவாலயம் புனித மெர்குரியசுக்காகப் பெயரிடப்பட்டது. அரபு மொழியில் அபு செபைன் என்று அழைக்கப்படுகிறது.[9] மேலும் இது கீசாவில் உள்ள தேவாலயங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். இது அண்டை நாடான கெய்ரோவுக்கு அடுத்தபடியாக எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். எகிப்திய சட்டத்தின்படி தேவாலயங்களும் கட்டுமான சட்டதிட்டங்களைக் கடைமுறை பிடிக்க ஒழுங்குபடுத்துகிறது. வரலாற்று ரீதியாகக் கட்டட அனுமதி பெறக் குடியரசுத்தலைவர் ஆணை தேவைப்படுகிறது. திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக, தீ பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், அங்கீகரிக்கப்படாத கட்டுமானப் பணிகளும் பரவலாக நடைபெற்று வருகிறது. அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று அனுமதியின்றி தேவாலயமாக மாற்றப்பட்டது. இருப்பினும் பின்னர் இத்தேவாலயம் சட்டப்பூர்வமான அனுமதியினைப் பெற்றது.[6]

தீ தொகு

தேவாலயத்தின் இரண்டாவது மாடியில் உள்ள குளிர் சாதன அலகு ஒன்று பழுதானதால் தீ விபத்து ஏற்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, பெரும்பாலான இறப்புகள் புகையைச் சுவாசித்ததாலோ அல்லது கட்டிடத்திலிருந்து தப்பிக்க நெரிசலில் சிக்கி மிதிக்கப்பட்டதாலோ ஏற்பட்டுள்ளன என்பதாகும்.[6]

தேவாலயத்தில் மழலையர் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்று பாதுகாப்பு சேவைகள் தகவல் தெரிவித்தன.[1][10]

உள்ளூர் மருத்துவமனையின் பதிவுகளின் படி 20 உடல்கள் பெறப்பட்டதாகவும் இதில் 10 உடல்கள் குழந்தைகளுடையது என்பதாகும். மற்றொரு உள்ளூர் மருத்துவமனையில் 21 உடல்கள் உள்ளன.[7] அண்டை தேவாலயத்தின் மதபோதகர் ஒருவர் கூறுகையில், தீயிலிருந்து தப்பிக்க குழந்தைகளை வெளியேற்றுவதற்குப் பதிலாக மேல் தளங்களுக்கு மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கொண்டு சென்றனர் என்றும்,[6] தீயிலிருந்து தப்பிக்கக் மக்கள் மேல் மாடியிலிருந்து குதிக்க முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.[7][1] தீயின் தீவிரம் மற்றும் புகை அதிகமாகும் வரையிலும் சிக்கியவர்களை வெளியேற்றுவதற்குப் பார்வையாளர்கள் தேவாலயத்திற்குள் விரைந்ததாகக் கூறப்படுகிறது.[1]

எகிப்தின் சமீபத்திய வரலாற்றில் தீயில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரித்து வருகின்றது. மேலும் நாட்டின் உயர்மட்ட அரசு வழக்கறிஞர் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.[7][6] தேவாலயத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள், துணை மருத்துவர்களும் தீயணைப்பு வீரர்களும் இந்த இடத்தை அடைவதில் மெத்தனமாக இருந்தாகக் குறை கூறினார்கள், அல் ஜசீராவால் நேர்காணப்பட்ட சாட்சி ஒன்று, தீயணைப்பு வண்டி வருவதற்கு இரண்டு மணிநேரம் தாமதமானது என்று கூறினார்.[6] ஆனால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சுகாதார அமைச்சகம் கூறியது.[7] காலை 8 மணிக்குத் தொடங்கிய தீ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக இச்சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.[11]

எகிப்தின் கோப்துக்கள் பாகுபாடு, தாக்குதல்கள் மற்றும் மத வன்முறைகளை எதிர்கொண்டாலும், தேவாலய அதிகாரிகள் மற்றும் எகிப்தின் அரசு நிறுவனங்கள் தீ விபத்து தற்செயலானது என்று நம்புகின்றன.[4][12]

நிவாரணபணிகள் தொகு

குடியரசுத்தலைவர் அப்துல் பத்தா அல்-சிசி தனது வருத்தத்தை வெளிப்படுத்தி அறிக்கையை ஒன்றினை வெளியிட்டார். இதில் "வழிபாட்டு இல்லங்களில் தங்கள் இறைவனுடன் இருக்கும்படி கடந்து சென்ற அப்பாவி பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.[2][4] இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 100,000 எகிப்திய பவுண்டுகள் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 20,000 எகிப்திய பவுண்டுகள் வரை வழங்கப்படும் என்றும் பிரதமர் முசுதபா மட்பௌலி அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கூடுதலாக 50,000 எகிப்திய பவுண்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[13] அல்-அசார் மசூதி தனது இரங்கலைத் தெரிவித்தது. மேலும் அல்-அசார் அகமத் எல்-தாயேப்பின் பெரிய இமாம் காப்டிக் போப் II தவத்ரோசுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.[13] எகிப்து தேசிய காற்பந்து அணியின் தலைவர் முகமது சாலா தனது இரங்கலைச் டுவீட்டரில் சுட்டியுள்ளார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 McKernan, Bethan (14 August 2022). "At least 41 people killed in Egypt church fire, say officials". The Guardian. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "At least 41 killed in Egyptian church fire, security sources say". Reuters. 14 August 2022. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  3. "At least 41 killed in Egyptian church fire: Officials". Al Jazeera English. 14 August 2022. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  4. 4.0 4.1 4.2 4.3 Salem, Mostafa; Kourdi, Eyad; Engels, Jorge; Humayun, Hira (14 August 2022). "Children among dozens killed in Egypt church fire". CNN. Archived from the original on 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  5. "41 dead, 12 injured in Church of Abu Sefein blaze in Imbaba". Daily News Egypt. 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 "Fire at Egypt Coptic Church Kills Dozens During Sunday Prayers". The New York Times. 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Magdy, Samy (14 August 2022). "Officials: Fire at Coptic church in Cairo kills 41, hurts 14". The Washington Post. Associated Press இம் மூலத்தில் இருந்து 14 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220814151119/https://www.washingtonpost.com/world/officials-fire-at-coptic-church-in-cairo-kills-1-hurts-55/2022/08/14/978361de-1bbd-11ed-9ce6-68253bd31864_story.html. 
  8. "A fire at a church in Cairo kills 41 people and hurts 14 others". NPR.org. 14 August 2022. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  9. Wimmer, AC (14 August 2022). "Reports of at least 40 people killed in church fire in Egypt". Catholic News Agency. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
  10. Violetta Baran (14 August 2022), "Tragedia w Gizie. W pożarze kościoła zginęło 41 osób", wp.pl (in போலிஷ்), Wirtualna Polska, archived from the original on 14 August 2022, பார்க்கப்பட்ட நாள் 14 August 2022
  11. السيد, مصطفى (14 August 2022). "شهود عيان كنيسة أبو سيفين بإمبابة: «الحريق بدأ 8 صباحًا واستمر ساعتين» (بث مباشر)". Al-Masry al-Youm. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  12. El-Fekki, Amira; Deng, Chao (14 August 2022). "Fire Kills at Least 41 at Egyptian Coptic Church, Nursery". WSJ. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
  13. 13.0 13.1 "Al-Azhar, state bodies extend condolences over Giza church fire; psychological support teams for injured dispatched – Society". Ahram Online. 14 August 2022. Archived from the original on 14 August 2022. பார்க்கப்பட்ட நாள் 14 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசா_தேவாலய_தீவிபத்து&oldid=3495337" இலிருந்து மீள்விக்கப்பட்டது