கீதாஞ்சலி மிஸ்ரா
கீதாஞ்சலி மிஸ்ரா (Geetanjali Misra) புது தில்லியை தளமாகக் கொண்ட பெண்கள் உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான சி,ஆர்.இ.ஏ.வின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். கீதாஞ்சலி கொள்கை மட்டங்களில் மானியம் தயாரித்தல் மற்றும் பாலியல், இனப்பெருக்க ஆரோக்கியம், பாலினம், மனித உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்றவற்றின் ஆர்வலராக பணியாற்றியுள்ளார். தற்போது, இவர் பன்னாட்டு மன்னிப்பு அவை (அம்னஸ்டி) பாலின பணிக்குழு, ஸ்பாட்லைட் சிவில் சொசைட்டி குறிப்புக் குழு மற்றும் நீதிக்கான அஸ்ட்ரேயா லெஸ்பியன் அறக்கட்டளை குழுவின் உறுப்பினராக உள்ளார். [1]
கீதாஞ்சலி மிஸ்ரா | |
---|---|
(ஏ.டபிள்யூ.ஐ.டி.) 2016 இல் கீதாஞ்சலி மிஸ்ரா | |
பணி | வழக்குரைஞர், பெண்ணியவாதி, எழுத்தாளர் |
வலைத்தளம் | |
www.creaworld.org |
சமீபத்திய வாழ்க்கை மற்றும் படைப்புகள்
தொகுமுன்னதாக, கொலம்பியா பல்கலைக்கழக மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் அகனள், அகனன், ஈரர், திருனர்(எல்.ஜி.பி.டி.) பிரச்சினைகள், பாலியல் உரிமைகள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றின் குறுக்குவெட்டு குறித்து துணை பேராசிரியராக மிஸ்ரா கற்பித்தார். சி.ஆர்.இ.ஏ. வில் சேருவதற்கு முன்பு, அவர் புதுதில்லியில் உள்ள ஃபோர்டு அறக்கட்டளையின் திட்ட அலுவலர், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து பணியாற்றினார்.
பணிகள்
தொகுதெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியளித்த நியூயார்க்கில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான 1989 ஆம் ஆண்டில் தெற்காசிய பெண்களுக்காக சாகி உடன் இணைந்து நிறுவினார். முன்னதாக, அவர் இனப்பெருக்க சுகாதார விஷயங்களின் வாரியங்களின் (யுகே) தலைவராக இருந்தார், பாலியல், இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து தகவல்கள் அளிக்கும் "மமா காஷ் (நெதர்லாந்து)" எனப்படும் உலகளாவிய மதிப்பாய்வு இதழின் ஆசிரியராவார். இவர் எஃப்.எச்.ஐ.360 (அமெரிக்கா) இன் வாரிய உறுப்பினராக இருந்தார். மேலும் ஏ.டபிள்யூ.ஐ.டி. வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். கடந்த காலத்தில், அவர் கோர்டைட்டின் நிபுணர் ஆலோசனைக் குழுவின் (நெதர்லாந்து) உறுப்பினராக இருப்பது போன்ற பல முக்கிய ஆலோசனைப் பாத்திரங்களை வகித்தார். எச்.ஐ.வி / எய்ட்ஸ் (இந்தியா) இல் உரிமைகள், கல்வி மற்றும் பராமரிப்புக்கான கூட்டணியின் முக்கிய உறுப்பினராக பணியாற்றினார். பிராந்திய மற்றும் பெண்களுக்கான உலகளாவிய மானிய நிதியத்திற்கான உலகளாவிய ஆலோசகராக (அமெரிக்கா) உள்ளார். பாலியல், பாலினம் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் இவர் எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்
தொகுமேலும் 2005 ஆம் ஆண்டில், ராதிகா சந்திரமணியுடன் இணைந்து, பாலியல் மற்றும் பாலினம் மற்றும் உரிமைகள் : தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ( SAGE பப்ளிகேஷன்ஸ் ) எக்ஸ்ப்ளோரிங் தியரி அண்ட் பிராக்டிஸ் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இதில், பாலியல் மற்றும் தெற்காசியாவில் உரிமைகள், திருநங்கை கல்வி மற்றும் சுகாதார சேவைகள் எய்ட்ஸ் கவலைகள் மற்றும் சிகிச்சை போன்றவற்றைப் பற்றி எழுதியுள்ளார். [2] ஆசியாவில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து மிஸ்ரா பல கல்வித் தாள்களை எழுதியுள்ளார், இதில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்: இந்திய அனுபவம் என்கிற படைப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இது, 2000 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ஹெல்த் மற்றும் மனித உரிமைகள் இதழில் வெளியிடப்பட்டது. [3] இவர், ஏ.டபிள்யூ.ஐ.டி. ஆல் வெளியிடப்பட்ட 'இயக்கங்களின் சக்தி' ஆசிரியரும் ஆவார்.
கல்வி
தொகுஇவர், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களில் முதுகலை பட்டங்களையும், அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றவர்.
குறிப்புகள்
தொகு- ↑ From a Cordaid interview[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bookfinder page about the work
- ↑ JSTOR abstract
வெளி இணைப்புகள்
தொகு- Women's Initiatives for Gender Justice at iccwomen.org