கீதா ஜோஹ்ரி

கீதா ஜோஹ்ரி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் இந்தியக் காவல் அதிகாரியாவார். 1982 ஆம் ஆண்டில் இந்திய காவல் பணிக்காக தேர்ச்சி பெற்ற கீதா[1], குஜராத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார். 2017 ஆம் ஆண்டில் குஜராத் மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக பதிவு உயர்வு பெற்று அப்பதவியிலேயே ஓய்வும் பெற்று, முதல் பெண் காவல்துறை இயக்குனர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.[2][3] இவருக்கு முன்னதாக இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிபி பாண்டே அம்மாநில காவல்துறையின் தலைமை இயக்குனராக இருந்துள்ளார்.[4]

செராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை முதன்முதலில் விசாரித்து வந்த அதிகாரி கீதா ஆவார்.[5]

1992 ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியான, அப்துல் லத்தீப்பை அவனது அகமதாபாத்தில் உள்ள தரியாபூரில் இருந்த மறைவிடத்தை தைரியமாக சோதனை செய்ததற்காக பிரபலமாவர் கீதா, இந்த சோதனையின் போது லத்தீப் தப்பித்துவிட்டாலும், அவனது மெய்க்காப்பாளனான ஷெரீப் கானை கைது செய்துள்ளார்.

1998 ஆம் ஆண்டில், அவர் காந்திநகர் சரக காவல்துறை துணைத் தலைவராக இருந்தபோது, ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக சில உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்துத் வேறுபாடுகள் காரணமாக வதோதராவில் உள்ள காவல்துறை பயிற்சி கல்விக்கூடத்திற்கு மாற்றப்பட்டார். காவல்துறை இயக்குனராக பதவி உயர்விற்கு முன்னதாக குஜராத் மாநில காவலர் வீட்டுவசதி கழகம் நிர்வாக இயக்குநராக பணியாற்றியிருந்தார்.[6][7] 

கோத்ரா மற்றும் கோத்ராத்வுக்குப் பிந்தைய கலவரங்களை விசாரிக்க, முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.ர்கே. ராகவனின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) கன்வீனராக அவர் நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Times News Network (19 February 2009). "Geetha Johri, Rajkot's new police chief". The Times of India (in ஆங்கிலம்).
  2. "Geetha Johri Becomes Gujarat's First Woman Police Chief". HuffPost. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  3. "Geetha Johri will retire as Gujarat's police chief". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  4. "Geetha Johri is Gujarat's first woman DGP, replaces PP Pandey". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). 4 April 2017.
  5. Misra, R.K. (14 May 2007). "Slug In The Belly". Outlook. Archived from the original on 29 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. NDTV Correspondent (30 July 2010). "Who is Geeta Johri?". என்டிடிவி.
  7. India Today Web Desk (4 April 2017). "Who is Geetha Johri, the new Gujarat DGP?". India Today (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_ஜோஹ்ரி&oldid=4110217" இலிருந்து மீள்விக்கப்பட்டது