கீமோ புரோவா போர்போரா மகளிர் கல்லூரி
கீமோ புரோவா போர்போரா மகளிர் கல்லூரி (Hemo Prova Borbora Girls' College) என்பது 1969-இல் அசாமின் கோலாகாட்டில் நிறுவப்பட்ட மகளிர் பொதுப் பட்ட கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரி திப்ருகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரி கலைப் பிரிவில் இளங்கலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1969 |
முதல்வர் | பிபுல் சந்திர புயான் |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | திப்ருகர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | hpbgirlscollege |
பின்னணி
தொகுகீமோ ப்ரோவா போர்போரா பெண்கள் கல்லூரி 1969-ஆம் ஆண்டு கோலாகாட் மாவட்ட பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டது. இக்கல்லூரியை நிறுவும் பணியில் நன்கொடையாளர் அலோக் சி. போர்போரா ரூ. 75,000 வழங்கி தனது தாய் கீமோ புரோவா போர்போராவின் நினைவாக, கோலாகாட் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் பெண்களிடையே உயர்கல்வியின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதே முதன்மை நோக்கமாகக் கொண்டு நிறுவினர். முதல் தொகுதி மாணவர்களுடன் கல்லூரியானது 22 சூலை1969 அன்று கோலாகாட் அரசு பெசுபருவா மேல்நிலைப் பள்ளியின் உறைவிடத்தில் தொடங்கியது. பின்னர் கல்லூரி தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு நிரந்தர கட்டமைப்புகளுடன் செயல்படுகிறது. மேலும் புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரத்துடன் தேதியத் தர மதிப்பீட்டுக் குழுவின் "ஏ" தரத்துடன் கல்விப் பணியாற்றி வருகின்றது.
துறைகள்
தொகு- அசாமிய மொழி
- சமசுகிருதம்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- கல்வியியல்
- அரசியல் அறிவியல்
- மனையியல்
- சமூகவியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of Dibrugarh University". Archived from the original on 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.