கீரன் (புலவர்)
புலவர் கீரன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சொற்பொழிவாளர். கம்பராமாயணம், மகாபாரதம், திருவிளையாடற்புராணம், திருவெம்பாவை போன்ற நூல்களில் பாடல் வடிவில் சொல்லப்பட்டுள்ள விடயங்களைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கூறத்தக்க வல்லமை பெற்றவர்.[4]
புலவர் கீரன் | |
---|---|
இளவயது தோற்றம் | |
பிறப்பு | [1] மாயவரம் (இப்போது மயிலாடுதுறை)[2] | 4 ஆகத்து 1935
இறப்பு | 1990 (அகவை 54–55) [3] |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | சமயச் சொற்பொழிவாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | செல்ல பாப்பா |
தமிழ்மொழி, ஆன்மீக வளர்ச்சி
தொகுதூய தமிழ் வளர்ச்சிக்கும்[5], ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர் பாடுபட்டார்.[6] புலவர் கீரன் லால்குடியில் தமது பணிமனையை அமைத்து அங்கிருந்து சுமார் 20 ஆண்டுகள் பணி செய்தார்.[2]
இசைச் சொற்பொழிவு
தொகுபுலவர் கீரன் இசைச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார். இந்த வகை சொற்பொழிவுகளில் கிருபானந்த வாரியார் போலவே புலவர் கீரனும் புகழ் பெற்று விளங்கினார்.
இசைச் சொற்பொழிவு என்பது இசையும் உரையும் கலந்து வழங்கப்படுவது. ஆரம்பகாலத்தில் ஹரிகதை எனவும் பின்னர் கதாகாலட்சேபம் எனவும் அழைக்கப்பட்டுவந்தது. இதிலே ராமாயணம், மகா பாரதம் மற்றும் இவை போன்ற இதிகாசங்களைக் கதைகளாகக் கூறுவார்கள். பொருத்தமான இடங்களிலே பாடல்கள் பாடுவார்கள். கதை நிகழ்த்துபவருக்கு உதவியாக சங்கீதம் நன்றாகத் தெரிந்த ஒருவரும் இசைக் கருவிகளை மீட்டுவோரும் சேர்ந்து நிகழ்ச்சியை அளிப்பார்கள். தொடக்க காலத்தில் இந்த நிகழ்ச்சிகள் 5, 6 மணி நேரம் வரையிலும் தொடர்ந்து நடக்கும். கதை சொல்பவர் அவ்வளவு நேரமும் நின்று கொண்டே கதை சொல்லுவார். சில சமயங்களில் காலிலே சலங்கை கட்டிக்கொண்டு நடனமாடவும் செய்வார். கதை சொல்லும்போது நாடக பாணியில் அபிநயங்களும் காட்டுவார்.
தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் என்பவரே இந்த வகையான நிகழ்ச்சியின் முன்னோடி என நம்பப்படுகிறது. பின்னர் சூலமங்கலம் சௌந்தரராஜ பாகவதர், எம்பார் ஸ்ரீரங்காச்சாரியார், எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் போன்றவர்கள் ஹரிகதை நிகழ்த்தி வந்தார்கள்.
இந்த நிகழ்ச்சி பின்னர் கால அளவு குறைக்கப்பட்டு சங்கீத உபந்நியாசம் என்று சொல்லி வந்தார்கள். இதுவே தமிழில் இசைச் சொற்பொழிவு எனக் கூறப்பட்டது. கம்பராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை இசையீடிட்ட கதைகளாகச் சொல்லி வந்தார்கள். இந்தப் புதிய மரபிலே திருமுருக கிருபானந்த வாரியாரும் புலவர் கீரனும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக விளங்கினார்கள்.[7]
கீரன் அறக்கட்டளை
தொகுபுலவர் கீரன் செல்வமணி கீரன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் புலவர் கீரனின் உரைகள் நூல் வடிவிலும், குறுந்தட்டு வடிவிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "புலவர் கீரனின் 80வது பிறந்த நாள் விழா". நக்கீரன்.இன். 8 ஆகஸ்ட் 2015. Archived from the original on 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ 2.0 2.1 "Pulavar Keeran !!". krty.net. 5 ஜனவரி 2006. Archived from the original on i ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2006.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ "Mr.S.Vijayaraghavan vs Mrs. Sellappappa Keeran". indiankanoon.org. 12 ஏப்ரல் 2011. Archived from the original on 30 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ பவள சங்கரி (6 டிசம்பர் 2014). "திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் …". vallamai.com. Archived from the original on 6 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
and|archivedate=
(help) - ↑ "புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம்". தினமணி. 1 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 6.0 6.1 "Pulavar Keeran's Services Recalled". தி இந்து. 20 பெப்ரவரி 2011. Archived from the original on 7 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ "The lost art of musical STORY-TELLING". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 நவம்பர் 2015. Archived from the original on 2015-11-22. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)