கீழையூர் கடைமுடிநாதர் கோயில்

கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில்
பெயர்
பெயர்:திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கடைமுடிநாதர், அந்திசம்ரட்சணீசுவரர்[1]
உற்சவர் தாயார்:அபிராமவல்லி
தல விருட்சம்:கிளுவை
தீர்த்தம்:கருணாதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

இறைவன், இறைவி

தொகு

இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று.[1]

அமைவிடம்

தொகு

செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வணங்கியோர்

தொகு

பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 129

வெளி இணைப்புக்கள்

தொகு