கீழை சுழல் கரணப் புறா

கீழை சுழல் கரணப் புறா என்பது ஒரு ஆடம்பரப் புறா இனமாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கீழை சுழல் கரணப் புறா மற்றும் அனைத்து வளர்ப்புப் புறாக்களும் மாடப் புறாவிலிருந்தே தோன்றியவையாகும்.[1]

கீழை சுழல் கரணப் புறா
கீழை சுழல் கரணப் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்பறத்தல் இனங்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்கரணப் புறா மற்றும் உயர்பறப்பவை
குறிப்புகள்
இறக்கைகள் வால் மீது தாங்கப்படாமல் கீழே தொங்கியவாறு உள்ளன.
மாடப் புறா
புறா

பறக்கும் பாணி

தொகு

இதன் பறக்கும் பாணியே இதன் தரக்குறியீடாகும். இவை ஒற்றை கரணம், இரட்டை கரணம் மற்றும் சுழல் கரணங்கள் அடிக்கக் கூடியவை, பறக்கும்போதே திடீரென்று திசையை மாற்றக் கூடியவை. இவை சுமார் 1000 மீ உயரம் வரை பறக்கக் கூடியவை. அதே உயரத்தில் பல மணி நேரம் பறக்கக் கூடியவை.

இவற்றின் பறக்கும் வித்தைகள் கலட்சு சுழல் கரணப் புறா மற்றும் பர்மிங்கம் சுழல் கரணப் புறா இனங்களுக்கு இணையாக உள்ளன.

பார்வைக்கு

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oriental Roller
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழை_சுழல்_கரணப்_புறா&oldid=3366198" இலிருந்து மீள்விக்கப்பட்டது