குக்கரஅள்ளி ஏரி

குக்கரஅள்ளி ஏரி (Kukkarahalli Lake) மைசூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். இந்த ஏரி கர்நாடக மக்களால் குக்கரஹள்ளி கெரெ என்று கன்னடத்தில் அழைக்கபடுகிறது. (கெரே என்றால் கன்னடத்தில் ஏரி என்று பொருள்) இந்த ஏரியானது மானசகங்கோத்திரி (மைசூர் பல்கலைக்கழகம்),[1] கலாமந்திர் (ரங்கயானா) மற்றும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஆகியவற்றை அடுத்துள்ளது. இது மைசூர் நகரின் இதயம் போன்றுள்ளது.

குக்கரஅள்ளி ஏரி
View of Kukkarahalli lake
Location of the lake within Karnataka
Location of the lake within Karnataka
குக்கரஅள்ளி ஏரி
அமைவிடம்மைசூர்
ஆள்கூறுகள்12°18′N 76°38′E / 12.3°N 76.63°E / 12.3; 76.63
வகைநன்னீர் ஏரி-மீன்பிடித்தல்-பொழுதுபோக்கு
வடிநிலப் பரப்பு414 km2 (160 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு62 ha (150 ஏக்கர்கள்)
அதிகபட்ச ஆழம்5 m (16 அடி)
நீர்க் கனவளவு2.53×10^6 m3 (89×10^6 cu ft)
கரை நீளம்15 km (3.1 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்755.73 m (2,479.4 அடி)
குடியேற்றங்கள்மைசூர்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இந்த ஏரி மூன்றாம்மும்மடி கிருஷ்ணராஜ உடையாரால் (1794–1868) உருவாக்கப்பட்டது. அவர் மைசூரை ஆண்டபோது இதனை 1864 இல் சுமார் 4000 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்களின் நீர்ப்பாசன வசதிக்காகத் தோற்றுவித்தார்.[2] இது மைசூர் நகர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இது பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. மைசூர் மக்கள் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளால் பாதுகாக்கப்படுகிறது. பறவைகளின் சரணாலயமாகவும் உள்ளது.

அமைவிடம்

தொகு

இந்த ஏரி மைசூரின் நகரப்பகுதியில் அமைந்துள்ளது. ஏரியிலிருந்து மைசூர் தொடருந்து நிலையம் 3 கி. மீ தூரம். அருகாமையிலுள்ள வானூர்தி நிலையம் மைசூர் வானூர்தி நிலையம் 15 கி. மீ தொலைவிலும் உள்ளது.

நீர்பிடிப்பு பகுதி

தொகு
 
குக்கரஹள்ளி ஏரியின் அகலக்காட்சி

இந்த ஏரியின் வடிநிலப்பகுதி சுமார் 414 சதுர கிலோமீட்டராகும். இதன் நீர்ப்பரப்பு பகுதி 62 ஹெக்டேராகும். திவான் பூமையா பாசனக்கால்வாயின்  நீளம் 27 கி. மீ ஆகும். இக்கால்வாய் ஹெங்கல், போகடி, குன்றிமாலா மற்றும் மானசகங்கோத்திரி வழியாகச் செல்லும் 27 கிமீ நீளமுள்ள திவான் பூமையா பாசனக் கால்வாய் இந்த ஏரியில் சென்று விழுகிறது. இவ்வேரி ‘J’ வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் அதிகபட்ச ஆழம் 5 மீட்டராகும். மணல் மற்றும் களிமண் அமைப்புடன் உயிர் சூழ்நிலைக்கு தகுந்ததாக உள்ளது. என சன்றுகள் கூறுகின்றன. கிழக்கு-மேற்கான ஏரிக்கரையின் ஒருபக்கமாக நீர் தேக்கப்படுகிறது. ஏரியின் மண் அமைப்பு, மணல் கலப்புமண்ணாகவும் களிமண் கலப்புமண்ணாகவும் உள்ளது. தற்காலிகமான வடகரை, ஏரிக்குள் வந்துவிழும் கழிவுநீரை தடுத்து நிறுத்துகிறது.[3] ஏரியின் அதிகப்பட்ச வெள்ள அளவு 755.73 m (2,479.4 அடி) ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கரஅள்ளி_ஏரி&oldid=3736564" இலிருந்து மீள்விக்கப்பட்டது