குசுமா கருணாரத்ன

குசுமா கருணாரத்ன (Kusuma Karunaratne) இலங்கையைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். எதிரிவீர செயசூரியா என்ற பெயராலும் இவரை அழைக்கிறார்கள். 1940 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பல்கலைக்கழக நிர்வாகி, பேராசிரியர் மற்றும் சிங்கள மொழி மற்றும் இலக்கிய அறிஞர் என்று பன்முகங்களுடன் இவர் இயங்குகிறார்.

பேராசிரியர் குசுமா கருணாரத்ன இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரிப் பீடத்தின் முன்னாள் கல்வித் தலைவராகவும் தற்போது அதே பல்கலைக்கழகத்தில் சிங்களத் துறையில் மூத்த விரிவுரையாளராகவும் உள்ளார். சிங்கள ஆய்வுகள் மற்றும் சப்பான்-இலங்கை உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இவர் புகழ்பெற்றவராவார்.

சிங்களம் -ஆங்கிலம் மற்றும் சப்பானிய நாவல்களின் ஏராளமான மொழிபெயர்ப்புகள் இவரது சாதனைகள் ஆகும். இத்துடன் சப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது சொற்பொழிவுகளின் அடிப்படையில் சிங்கள இலக்கியம் பற்றிய ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தென் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரமான திக்வெல்லா நகரத்தில் குசுமா கருணாரத்னே பிறந்தார். ஆறு குழந்தைகள் கோண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிக் கல்வியைத் தொடம்பகலா வித்யாலயாவிலும், பின்னர் திக்வெல்லா நகரத்திலுள்ள வியிதா வித்யாலயாவிலும் படித்தார். கண்டி பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இலங்கை பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியை முடித்தார்;[1] 1964 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் முதல் வகுப்பு மரியாதை பட்டம் பெற்ற முதல் பெண் மாணவி என்ற சிறப்புடன் இவர் பட்டம் பெற்றார்.[2] முதுகலை பட்டப்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது இவருடைய கல்வி வாழ்க்கை ஒரு முக்கிய இடத்தை அடைந்தது. பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனம் பெற்ற முதல் பெண் என்ற சிற்ப்பை அடைந்த போது குசுமா கருணாரத்னவின் திறமைக்கு வெகுமதியும் அளிக்கப்பட்டது பின்னர் இவர் சமரசீவ கருணாரத்ன என்ற பொறியாளரைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். சவந்த் கருணாரத்ன மற்றும் பசந்த் கருணாரத்ன என்பது அவர்களின் பெயர்களாகும். இருவரும் வரைகலை மற்றும் காணொளி செயலாக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற மின் பொறியாளர்களாவர். மூத்தவர், சவந்த் கருணாரத்ன, முனைவர் பட்டம் பெற்றவர். ஆத்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியலில் இப்பட்டம் பெற்றார். இளையவர், பசந்த் கருணாரத்னவும் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் இப்பட்டம் பெற்றார்.

கல்வி வாழ்க்கை

தொகு

இலங்கை பல்கலைக்கழகத்தில் சிங்களத் துறையின் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதன் மூலம் இவருடைய கல்வி வாழ்க்கை தொடங்கியது. 1967 ஆம் ஆண்டு குசுமாவும் அவரது கணவரும் ஐக்கிய ராச்சியம் சென்றனர். இருவரும் அவரவர் முதுநிலை படிப்புகளைத் தொடர்ந்தனர்.

கொலம்போ பல்கலைக்கழகத்தில் சிங்களத் துறையின் முதல் பெண் விரிவுரையாளரான குசுமா கருணாரத்ன, பின்னர் சிங்களத்தின் முதல் பெண் பேராசிரியராகவும், அந்தத் துறைக்கு தலைமை வகிக்கும் முதல் பெண்ணாகவும் ஆனார்.[2] பேராசிரியர் குசுமா கருணாரத்ன பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவர் மற்றும் செயல் துணைவேந்தர் ஆகிய பதவிகளையும் அடைந்தார். [2]

தனது தொழில் வாழ்க்கையின் போது , பேராசிரியர்கள் மற்றும் அரச தந்திரிகள் உட்பட பல சப்பானியர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்தார். இதனால் சப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவினார். பல ஆங்கில மற்றும் சப்பானிய நாவல்களை இவர் சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

வெளியீடுகள்

தொகு
  • சப்பானிய கலாச்சாம் ஒரு பார்வை [3]
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை சிறுகதைகள்,
  • எமிங்வேயின் தி சன் ஆல் ரைசசு ஆங்கில-சிங்கள மொழிபெயர்ப்பு

கவுரவங்கள் மற்றும் விருதுகள்

தொகு
  • உருகூனு புத்ரா விருது [2]
  • லியா வருணா விருது [2]
  • ஃபுல்பிரைட்டு உறுப்பினர்
  • சப்பான் அறக்கட்டளை, உறுப்பினர் [2]
  • உதிக்கும் சூரியன், தங்கக் கதிர்கள் மற்றும் கழுத்து ரிப்பன் வரிசை [2]

மேற்கோள்கள்

தொகு
  1. ""Darling we aren't too old, though we pass the Jubilee Gold: Mathematician + intellectual = love,Sunday Observer, January 7, 2007". Archived from the original on செப்டம்பர் 28, 2007. பார்க்கப்பட்ட நாள் March 8, 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link). Archived from the original பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் on September 28, 2007. Retrieved March 8, 2008.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Perera, Suharshi. "Woman: An icon in the literary world," பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம் Daily News (Sri Lanka). August 9, 2007.
  3. Speech at Seminar in Commemoration of Fifty Years of Bilateral Relations between Sri Lanka and Japan," (2002).

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசுமா_கருணாரத்ன&oldid=3928997" இலிருந்து மீள்விக்கப்பட்டது