குஜராத் உள்ளாட்சித் தேர்தல் 2021

குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனை போட்ட நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 81 நகராட்சிகள், 231 தாலுகா பஞ்சாயத்து மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு 28 பிப்ரவரி 2021-இல் தேர்தல் நடைபெற்றது. முன்னதாக அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா, பவநகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கு 21 பிப்ரவரி 2021 அன்று தேர்தல் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 66.67% வாக்குகளும், தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் 66.86% வாக்குகளும், நகராட்சி தேர்தலில் 59.05% வாக்குகளும் பதிவானது.

வெற்றி விவரம்

தொகு

அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா, பவநகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், 6 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மையாக வார்டு உறுப்பினர் தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி வென்றது.[1][2]

81 நகராட்சிகள், 231 தாலுகா பஞ்சாயத்துகள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2021 அன்று நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 31 மாவட்ட ஊராட்சிகளிலும் வென்றுள்ளது. 81 நகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி 74 நகராட்சிகளையும், இந்திய தேசிய காங்கிரசு கட்சி 7 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. 231 தாலுகா பஞ்சாயத்துகளில் 196-இல் பாரதிய ஜனதா கட்சியும், 35இல் காங்கிரசு கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலை
  2. https://www.dinamalar.com/news_detail.asp?id=2716212
  3. Gujarat Local Body Election Results