குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள்

2019இல் வெளியான இந்தித் திரைப்படம்
(குஞ்சன் சக்சேனா: கார்கில் பெண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள் (Gunjan Saxena: The Kargil Girl) என்பது 2019 இந்தியாவின் இந்தி மொழியில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். சரண் சர்மா என்பவர் இதை இயக்கி, தர்மா என்ற தயாரிப்பு நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் தயாரித்திருந்தது. இப்படத்தில் ஜான்வி கபூர் என்ற நடிகை போர் விமானங்களில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் இந்திய வான்படை விமானிகளில் ஒருவரான குஞ்சன் சக்சேனாவாக நடித்திருந்தார். பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி ஆகியோரும் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.[2]

குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள்
பட வெளியீட்டின் புகைப்படம்
இயக்கம்சரண் சர்மா
தயாரிப்புகரண் ஜோஹர்
ஜீ ஸ்டுடியோஸ்
கிரோ யாசு ஜோகர்
அபூர்வா மேத்தா
கதைநிகில் மெக்ரோத்ரா
சரண் சர்மா
இசைபின்னணி இசை:
ஜான் ஸ்டூவர்ட் எடூரி
பாடல்கள்
அமீத் திரிவேதி
நடிப்புஜான்வி கபூர்
பங்கஜ் திரிபாதி
அங்கத் பேடி
ஒளிப்பதிவுமனுஷ் நந்தன்
படத்தொகுப்புநிதின் பைத்
கலையகம்தர்மா புரொடக்சன்ஸ்
ஜீ ஸ்டுடியோஸ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடு12 ஆகத்து 2020 (2020-08-12)
ஓட்டம்112 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

முதன்மை புகைப்படம் எடுத்தல் 2019 பிப்ரவரியில் தொடங்கி அக்டோபரில் முடிந்தது. இது இலக்னோ முழுவதும் பரவலாக படமாக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, படம் திரையரங்கில் வெளியிட முடியவில்லை. எனவே நெற்ஃபிளிக்சில் வெளியானது.[3] [4] இது 2020 ஆகத்து 12 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.[5]

நடிகர்கள்

தொகு
  • இந்திய வான்படை விமானி குஞ்சன் சக்சேனாவாக ஜான்வி கபூர்
  • இளம் குஞ்சனாக இரிவா அரோரா
  • குஞ்சனின் தந்தை அனுப் சக்சேனாவாக பங்கஜ் திரிபாதி
  • குஞ்சனின் சகோதரர் அன்சுமான் சக்சேனாவாக அங்கத் பேடி
  • இளம் அன்சுமனாக ஆர்யன் அரோரா
  • குஞ்சனின் தாய் கீர்த்தி சக்சேனாவாக ஆயிசா ராசா மிசுரா
  • கட்டளை அதிகாரி கௌதம் சின்காவாக மானவ் விஜ்
  • போர் தளபதி திலீப் சிங்காக வினீத் குமார் சிங்
  • தலைமை பயிற்றுவிப்பாளராக அசிசு அகுஜாவாக சந்தன் கே ஆனந்த்

தயாரிப்பு

தொகு

இப்படத்திற்கான முதன்மை புகைப்படம் 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது, படம் இலக்னோவில் விரிவாக படமாக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு, மூன்று மாதங்கள் தொடர்ந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக, மே 2019 இல் நிறுத்தப்பட்டது.[6] ஆனால் பின்னர் அதே மாதத்தில் மீண்டும் தொடங்கியது. படத்தின் முதல் அட்டவணை 24 மே 2019 அன்று நிறைவடைந்தது. [7]

சூலை மாதம் இலண்டனில் சில காட்சிகளை படமாக்க குழு திட்டமிட்டிருந்தாலும், இதனைசியார்சியாவுக்கு மாற்ற குழு திட்டமிட்டது.[8] நாட்டின் வடகிழக்கு பகுதியில் சியார்சியாவின் உயரமான பகுதிகளைக் கொண்டுள்ள காசுபெகி என்ற ஊரில் படமாக்க குழு திட்டமிட்டது. இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 5700 அடிக்கு மேல் அமைந்துள்ள ஒரு மலைப்பிரதேசமாகும். ஜான்வி கபூர் மற்றும் அங்கத் பேடி இருவரும் தங்கள் பாத்திரங்களுக்கான உடற்தகுதியைப் பராமரிப்பதற்கான காட்சிகளை படமாக்கியுள்ளனர். அவருடன் பயிற்சியாளர் பிரின்ஸ்டன் மிராண்டாவும் இருக்கிறார்.[9] படத்தின் படப்பிடிப்பு 29 திசம்பர் 2019 அன்று முடிக்கப்பட்டது.[10]

ஒலிப்பதிவு

தொகு

கௌசர் முனீர் எழுதிய பாடல்களுடன், இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Gunjan Saxena: The Kargil Girl (2020)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.
  2. "Angad Bedi joins the star cast of Gunjan Saxena's biopic, Kargil Girl". Bollywood Hungama. 25 February 2019. https://www.bollywoodhungama.com/news/bollywood/angad-bedi-joins-star-cast-gunjan-saxenas-biopic-kargil-girl/. பார்த்த நாள்: 27 April 2019. 
  3. "Confirmed: Janhvi Kapoor's Gunjan Saxena The Kargil Girl to release on Netflix, watch her real story in new teaser". Hindustan Times. 9 June 2020.
  4. "Janhvi Kapoor Starrer Gunjan Saxena The Kargil Girl to Release on Netflix". News18. 9 June 2020.
  5. "Netflix's Gunjan Saxena: The Kargil Girl to premiere on August 12". இந்தியன் எக்சுபிரசு. 25 June 2020. பார்க்கப்பட்ட நாள் 16 July 2020.
  6. "Janhvi Kapoor's Gunjan Saxena biopic shoot called off due to thunderstorm warning in Lucknow". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  7. "Janhvi Kapoor's Gunjan Saxena biopic shoot cancelled in Lucknow, here's why". hindustantimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  8. "Janhvi Kapoor heads to Georgia to shoot for Gunjan Saxena biopic". The Times of India (in ஆங்கிலம்). 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  9. "Details about Janhvi Kapoor and Angad Bedi's Georgia schedule for Gunjan Saxena biopic revealed". www.dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  10. "Janhvi Kapoor wraps filming of Gunjan Saxena biopic, shares behind-the-scenes pics". hindustantimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.

வெளி இணைப்புகள்

தொகு