ஜான்வி கபூர்

ஒரு இந்திய நடிகை

ஜான்வி கபூர் (பிறப்பு 7 மார்ச்சு 1997) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

ஜான்வி கபூர்
Janhvi Kapoor graces Lux Golden Rose Awards 2018 (01).jpg
2018 ஆம் ஆண்டில்
பிறப்பு7 மார்ச்சு 1997 (1997-03-07) (அகவை 24)
மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018–முதல்
பெற்றோர்ஸ்ரீதேவி
போனி கபூர்

ஆரம்ப வாழ்க்கைதொகு

ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை திருமதி.ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு.போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.[1][2] இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.[3] ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்வி_கபூர்&oldid=2937954" இருந்து மீள்விக்கப்பட்டது