குஞ்சரபாரதி
கவி குஞ்சர பாரதி (பிறப்பு: 1810 – மறைவு: 1896) தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் பெருங்கரை எனும் கிராமத்தில் 1810இல் கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் சுப்பிரமணிய பாரதி. குஞ்சரபாரதி தனது 12ஆம் வயதிலேயே தமிழில் கவிதைகள், கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் இயற்றத் தொடங்கினார். இவரது பாடல்களில் பெரும்பாலும் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
1840இல் இவர் இயற்றிய அழகர் குறவஞ்சி இலக்கியம், சிவகங்கை மன்னர் கெளரிவல்லபர் முன்னிலையில் சிவகங்கை அரசவையில் அரங்கேற்றப்பட்டது. இவருடைய திறமையைப் பாராட்டி, சிவகங்கை மன்னர் இவருக்குக் கவி குஞ்சரம் எனும் விருதினை வழங்கி, சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமித்தார். இவர் பாடிய வேங்கைக் கும்மி பாட்டைப் பாராட்டி, சிவகங்கை அரசர் இவருக்கு கொட்டாங்கச்சியேந்தல் எனும் கிராமத்தைத் தானமாக வழங்கினார்.
இவரது புகழை கேள்விப்பட்ட முத்துராமலிங்க சேதுபதி தனது இராமநாதபுரம் சீமையின் ஆஸ்தான வித்துவானாக நியமித்தார். ஐம்பது வயதில் ஸ்கந்தபுராண கீர்த்தனைகள் எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார்.[1] [2]
படைப்புகள்
தொகு- வேங்கைக் கும்மி
- கந்தபுராண கீர்த்தனைகள்
- அழகர் குறவஞ்சி பழமுதிர்சோலையில் கோயில் கொண்ட முருகன் மீது பாடப்பட்ட குறவஞ்சி இலக்கியம்.
- அடைக்கலமாலை மற்றும் கயற்கண்ணிமாலை ஆகியவை மதுரை மீனாட்சியம்மன் மீது பாடப்பட்டவை.
- பேரின்ப கீர்த்தனைகள் தொகுப்பு
சாகாவரம் பெற்ற பாடல்களில் சில
தொகு- சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த எல்லோரையும் போலவே
- பேகடா ராகத்தில் அமைந்த என்னடி பெண்ணே உனக்கு
- மோகன ராகத்தில் அமைந்த சந்நிதி கண்டு
- கல்யாணி ராகப் பாடலான தெய்வம் உண்டென்று
- காம்போஜி ராகப் பாடலான “இவனாரோ?”
- கலாவதி ராகத்தில் அமைந்த “சித்தி விநாயகனே”