கூத்து வகை
(குஞ்சிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ்.
இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ்.
இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ்.
கூத்து என்பது ஆடலால் உணர்த்தப்படும் தமிழ்.
மேலும் வேத்தியல், பொதுவியல் என்னும் பாகுபாடும் கூத்தில் உண்டு.
வகை
தொகு- நாட்டுப்புறக் கூத்து
- வள்ளிக் கூத்து, குரவைக் கூத்து, ஆரியக் கூத்து போன்றவை
- இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டவை
- வெறிக் கூத்து, துணங்கைக் கூத்து, பேய்க் கூத்து போன்றவை
தேவர் ஆடிய கூத்து
தொகு- சிவன் - கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம்
- திருமகள் - பாவை
- திருமால் - குடம், மல், அல்லியம்.
- குமரன்(முருகன்) - குடை, துடி.
- எழுவகை மாதர்(சபத கன்னியர்) - துடி
- அயிராணி(இந்திரன் மனைவி) - கடையம்
- துர்க்கை - மரக்கால்
- காமன் - பேடு
மக்கள் ஆடிய கூத்து
தொகு- வெறியாட்டு = வெறி, கழங்கு, அணங்கு
- குரவை - கை கோத்து ஆடல்
- துணங்கை - முடங்கிய இருகை பழு(விலா)ப் புடைத்து ஆடல்.
- குடந்தம் - கை கூப்பி உடம்பை வளைத்து நிற்றல்
- கொம்மை(கும்மி) - குடங்கை குவித்துக் கொட்டல்
- ஆவலம் - வாயால் நா கொட்டுதல்
- குஞ்சிதம் - குந்திநிற்றல் (குந்திநின்று ஆடும் ஆட்டத்தைக் குஞ்சிதம் என்பர்.)
தொகுப்பு நூல்
தொகு:சூடாமணி நிகண்டு, ஒன்பதாவது செயல் பற்றிய பெயர்த்தொகுதி, பாடல் 50-53
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |