குடமுருட்டி ஆறு

குடமுருட்டி ஆறு (Kudamurutti River) தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் காவிரியின் கிளையாறு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி என்னும் இடத்திலிருந்து காவிரியிலிருந்து பிரிந்து ஓடுகிறது. பண்டாரவாடை அருகே இதிலிருந்து திருமலைராஜனாறும், நல்லூர் அருகில் வாழைப்பழக்கடை எனும் இடத்தில் இதிலிருந்து முடிக்கொண்டான் ஆறும் பிரிகிறது. திருவையாற்றில் உள்ள ஐந்து புனித ஆறுகளில் இதுவும் ஒன்றாகும்.[1] தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்படும் இந்த ஆற்றின் பழைய பெயர் கடுவாய் ஆகும்.[2] திரு ஆலம்பொழில் கோயிலின் தீர்த்தமாகவும் உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடமுருட்டி_ஆறு&oldid=3763956" இலிருந்து மீள்விக்கப்பட்டது