பண்டாரவாடை

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

பண்டாரவாடை (Pandaravadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

பண்டாரவாடை
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி பண்டாரவாடை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

பண்டாரவாடை தஞ்சாவூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை 45 சி இல் உள்ள அழகிய கிராமம் ஆகும்.

பண்டாரவாடை தொடர்வண்டி நிலையம் மேலும் ஊருக்கு பெருமை சேர்க்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இத்தொடருந்து நிலையத்தில். தற்சமயம் பெரும்பாலான இரயில்கள் நின்று செல்கின்றன.

பண்டாரவாடை ஊராட்சி (Pandaravadai Gram Panchayat), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். சிற்றூர்கள் தொகு

பண்டாரவாடை ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

1,தில்லை நகர் காலனி

2,காமாட்சிபுரம்

3,கோவில்தேவராயன்பேட்டை

4,லக்ஷ்மிபுரம்

5,பார்வதிபுரம்

6,பண்டாரவாடை

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1]

அரசியல்

தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [2]

ஆதாரங்கள்

தொகு
  1. Rural - Thanjavur District; papanasam Taluk; Pandaravadai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.

புற இணைப்புகள்

தொகு

www.pandaravadai.wordpress.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரவாடை&oldid=3561678" இலிருந்து மீள்விக்கப்பட்டது