சங்ககாலச் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது குடநாடு.

குடபுலம் (தற்கால கேரளம்)

'குடபுலம்' என்பது சேரநாடு.

குடதிசை என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். சேர நாட்டைக் 'குடபுலம்' என்பர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குடநாட்டை வென்று அதன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்.

கரிகாலனின் வெற்றிகளைக் கண்டு குடவர்-மக்கள் சோர்ந்து கூம்பிப்போயினராம். [1]

குடவர் என்பவர் சங்ககால ஆயர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர்.

குடவர் மேய்ச்சல் தொழிலை கொண்டிருந்தனர்.

குடவர்-மக்கள் வேங்கட அரசன் புல்லி நாட்டிலும் வாழ்ந்தனர். அவர்கள் பொங்கல் சோறும், ஆவின் பாலும் தந்து விருந்தினர்களைப் பேணும் பழக்கமுடையவர். [2]

சேரன் செங்குட்டுவன், [3] ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், [4] சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [5] ஆகியோர் ’குடவர் கோ’, அல்லது ‘குடவர் கோமான்’ எனப் போற்றப்படிகின்றனர்.

குன்றத்தில் குரவையாடும் சேரநாட்டு மகளிர் ‘வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோ’வை ஆட்டத்தை முடிக்கும்போது பொதுப்பட வாழ்த்துகின்றனர். [6]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. பட்டினப்பாலை 276
  2. அகநானூறு 393-16
  3. சிலப்பதிகாரம் 27-64, 227,
  4. பதிற்றுப்பத்து 55-9 பதிகம் 5-2,
  5. புறநானூறு 17-40
  6. சிலப்பதிகாரம் 24-19-34,
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடவர்&oldid=3841937" இலிருந்து மீள்விக்கப்பட்டது