குடிமயக்கத்தில் வாகனம் ஓட்டுதல்

குடிமயக்கத்தில் வாகனம் ஓட்டுதல் (Driving under the influence, DUI), குடிபோதையில் ஓட்டுதல் ( driving while intoxicated,DWI), குடியும் ஓட்டுதலும் என்பது மது அல்லது பிற போதை மருந்துகளின் தாக்கத்தின் கீழ் இயக்கூர்தி ஒன்றினை ஓட்டும் குற்றத்தினைக் குறிப்பதாகும்.

ஜெர்மனியின் இசுட்ராசுலந்தில் குடித்தெளிவு சோதனைச்சாவடியில்

குடிபோதை வழக்குகளில் ஓட்டுநரின் குருதியில் உள்ள ஆல்கெகால் இருப்பைக் (BAC) கொண்டு மதுபோதை அளவிடப்படுகிறது. குறிப்பிட்ட வரம்புக்கு மீறிய குருதி ஆல்கெகால் இருப்பு, 0.05% அல்லது 0.08%, குற்றத்தை வரையறுக்கிறது; ஓட்டுநரின் திறன் பாதிப்படைந்துள்ளதா எனப் பார்க்கப்படுவதில்லை. சில சட்டங்களில் 0.12%க்கு கூடிய குருதி ஆல்கெகால் இருப்பு தீவிரக் குற்றமாகக் கருதப்படுகிறது. பல நாடுகளில் குடிமயக்கத்தில் ஓட்டி எவரையேனும் காயப்படுத்தியிருந்தாலோ உயிரிழப்பிற்கு காரணமாகவிருந்தாலோ சிறைத்தண்டனையைத் தவிர கூடிய தண்டனைத்தொகையும் வழங்கப்படுகிறது.ஐக்கிய அமெரிக்காவில் குடிமயக்கம் மறும் தொடர்புடைய சாலை விபத்துகளில் ஆண்டுக்கு $45 பில்லியன் இழப்பு ஏற்படுகின்றது.[1]

சில அமெரிக்க மற்றும் செருமன் ஆய்வுகளில் குருதி ஆல்கெகால் இருப்பு 0%ஆக இருப்பதை விட 0.01-0.03% இருந்தால் விபத்துகளுக்கான வாய்ப்பு குறைவதாக கண்டறிந்துள்ளனர்;[2][3] இது கூடுதலான எச்சரிக்கையுடன் ஓட்டுவதால் இருக்கலாம்.[2] இருப்பினும் 0.08% அல்லது அதற்கு மேற்பட்ட குருதி ஆல்கெகால் இருப்பு குடிமயக்கத்தில் ஏற்பட்ட அனைத்து விபத்துகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.[3] இது 0.15% இருந்தால் விபத்திற்கான வாய்ப்பு 25-மடங்கு கூடுகிறது.[3]

மேற்சான்றுகள்

தொகு
  1. "How DUI Works". howstuffworks.com. Archived from the original on 2014-07-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  2. 2.0 2.1 Crash Risk of Alcohol Involved Driving: A Case-Control Study பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Blomberg, Richard D; Peck, Raymond C; Moskowitz, Herbert; Burns, Marcelline; Fiorentino, Dary. Abstract. Dunlap and Associates, Department of Transportation, National Highway Traffic Safety Administration, 2005. Mainly pages xviii and 108.
  3. 3.0 3.1 3.2 Grand Rapids Effects Revisited: Accidents, Alcohol and Risk பரணிடப்பட்டது 2018-04-07 at the வந்தவழி இயந்திரம், H.-P. Krüger, J. Kazenwadel and M. Vollrath, Center for Traffic Sciences, University of Wuerzburg, Röntgenring 11, D-97070 Würzburg, Germany.

நூற் தொகுப்பு

தொகு
  • Barron H. Lerner, One for the Road: Drunk Driving Since 1900. Baltimore, MD: Johns Hopkins University Press, 2011.

வெளி இணைப்புகள்

தொகு