குடிமல்காபூர்
குடிமல்காபூர் (Gudimalkapur) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரின் ஒரு முக்கிய புறநகர் பகுதி ஆகும். நகரின் பழமையான பகுதிகளில் ஒன்றான் இது, மற்றொரு பிரபலமான புறநகர்ப் பகுதியான மெகுதி பட்டினத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி ஒரு சிறிய நகரச் சூழலைக் கொண்டுள்ளது. இது காய்கறி மண்டி மற்றும் பூ சந்தைக்கு மிகவும் பிரபலமானது. சந்தைக்கு அருகில் "ஜாம்சிங் வெங்கடேசுவரா கோவில்" என்று அழைக்கப்படும் மிகப் பழமையான வெங்கடாசலபதி கோவில் உள்ளது.
குடிமல்காபூர் | |
---|---|
புறநகர் பகுதி | |
ஆள்கூறுகள்: 17°22′47″N 78°26′09″E / 17.37972°N 78.43583°E | |
நாடு | India |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
Metro | ஐதராபாத்து |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 028 |
வாகனப் பதிவு | டிஎஸ் |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
சட்டப் பேரவைத் தொகுதி | நம்பள்ளி |
நகரத் திட்டமிடல் நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
இணையதளம் | telangana |
வணிகப் பகுதி தொகு
இந்த பகுதியில் அனைத்துப் பொருட்களையும் பெரும் பல கடைகள் உள்ளன. இங்கு 'குடிமல்காபூர் சந்தை' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய காய்கறிச் சந்தை உள்ளது.[1] 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான மோசம் சாகி மலர் சந்தை [2] குடிமல்காபூருக்கு மாற்றப்பட்டது. இதனால் இப்பகுதி தினமும் காலையில் பரபரப்பான இடமாக உள்ளது. [3]
போக்குவரத்து தொகு
குடிமல்காபூர், மெகுதிப் பட்டினத்தில் தெலங்காண மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் உள்ளது. புகழ்பெற்ற அம்பா தியேட்டருக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றனர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "15 Best Markets in Hyderabad for Shopping" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
- ↑ "Your guide to street shopping in Hyderabad". பார்க்கப்பட்ட நாள் 2019-01-21.
- ↑ "Flower sales bloom on new market premises" (in en-IN). 2009-10-31. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Flower-sales-bloom-on-new-market-premises/article16505598.ece.