குட்டே கோல்
காஷ்மீரிலுள்ள ஒரு கால்வாய்
குட்டே கோல் ( Kutte Kol) என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் சிறிநகர் நகரத்தின் வழியாக செல்லும் ஒரு கால்வாய் ஆகும். இடைக்கால காஷ்மீரின் ஆட்சியாளரான கோத ராணி, ஆரம்பத்தில் ஜீலத்தில் ஏற்படும் வெள்ளத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இதை கட்டியதாக நம்பப்படுகிறது.[1] பின்னர் இது உணவு தானியங்களை நகரத்திற்கு கொண்டு செல்ல வழியாகவும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த கால்வாய் பாரிய அளவில் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சிறீநகர் நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.
சொற்பிறப்பியல்
தொகுகோத ராணி என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுவதாக நம்பப்பட்டாலும், இந்த பெயர் 'குசிப்ட் குல்யா' ( ஜீலத்தின் மற்றொரு பெயர்) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது ' நீரோடை ' என்று பொருள்படும். [2] [3]
சான்றுகள்
தொகு- ↑ "Queens, poets, academics, mystics: A calendar celebrates 12 inspirational women of Kashmir".
- ↑ K.N. Dhar. Glimpses of Kashmiri Culture கூகுள் புத்தகங்களில்
- ↑ "Vitasta". பார்க்கப்பட்ட நாள் 19 February 2016.