கோத ராணி

காஷ்மீரின் ஆட்சியாளர்

கோத ராணி (Kota Rani) (இ. 1344) காஷ்மீரில் இந்து இலோகரா வம்சத்தின் கடைசி ஆட்சியாளாவார். இவர் தனது மகனின் சிறுவயது காரணமாக அரசப் பிரதிநிதியாக இருந்தார். மேலும் பொ.ச.1339 வரை தனி உரிமையுடன் இராணியாகவும் ஆட்சி செய்தார். காஷ்மீரின் முதல் முஸ்லிம் ஆட்சியாளரான ஷா மிர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

சுகதேவன்
காஷ்மீரின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1323 − 1339
முன்னையவர்இரிஞ்சன் (1320- 1323)
பின்னையவர்ஷா மிர் ( 1339-1342)
இறப்பு1344
துணைவர்சுகதேவன்
இரிஞ்சன்
உதயணதேவன்
மரபுஇலோகரா வம்சம்
தந்தைஇராமச்சந்திரன்
மதம்இந்து சமயம்

வரலாறு தொகு

கோத ராணி காஷ்மீரின் இலோகரா வம்சத்தின் மன்னன் சுகதேவனின் தளபதி இராமச்சந்திரனின் மகளாவார். [1] இராமச்சந்திரன் ஒரு லடாக்கைச் சேர்ந்த இரிஞ்சன் என்ற நிர்வாகியை நியமித்தார். இரிஞ்சன் தான் பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். வணிகர்கள் என்ற போர்வையில் கோட்டைக்கு ஒரு படையை அனுப்பினார். [2] இராமச்சந்திரன் கொல்லப்பட்டதுடன் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். [3]

உள்ளூர் ஆதரவைப் பெற, இரிஞ்சன் இராமச்சந்திரனின் மகன் இராவன்சந்திரனை லார் மற்றும் லடாக்கின் நிர்வாகியாக நியமித்து, அவரது சகோதரி கோத ராணியை மணந்தார். [4] முன்னதாக காஷ்மீருக்குள் நுழைந்து அரசாங்கத்தில் நியமனம் பெற்றிருந்த ஷா மிரை நம்பகமான அரசவை அதிகாரியாக பணியமர்த்தினார். இரிஞ்சன் இசுலாமுக்கு மாறி சுல்தான் சத்ருதின் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு ஒரு படுகொலையின் விளைவாக இறந்தார். 

ஆட்சி தொகு

கோத ராணி முதலில் இரிஞ்சனை மணந்து அவரது இளம் மகனுக்கு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் உதயணதேவன் என்பவரை மணந்தார். கோத ராணிக்கு இரண்டு மகன்கள். இரிஞ்சனின் மகன் ஷா மிரின் பொறுப்பில் இருந்தான். உதயணதேவனின் மகன் பட்டா பிக்சணன் என்பவரால் கற்பிக்கப்பட்டான். பின்னர் கோத ராணி தனது சொந்த உரிமையில் ஆட்சியாளரானார். மேலும் பட்டா பிக்சனனை தனது பிரதம அமைச்சராக நியமித்தார். 

ஷா மிர் நோய்வாய்ப்பட்டிருப்பது போல் நடித்தார். பட்டா பிக்சனன் அவரைச் சந்தித்தபோது, ஷா மிர் படுக்கையில் இருந்து குதித்து அவரைக் கொன்றார். [5] காஷ்மீர் வரலாற்றாசிரியர் ஜோனராஜா, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும்  ஷா மிர் இராணியின் இரு மகன்களையும் கொன்றார் என்று கருதுகிறார்.

மரபு தொகு

கோத ராணி மிகவும் புத்திசாலியாகவும் சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தார். சிறீநகரில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து காப்பாற்ற கால்வாய் அமைத்து அதற்கு " குட்டே கோல் " என்று பெயரிட்டார். [6] இந்த கால்வாய், நகரின் நுழைவாயிலில் உள்ள ஜீலம் ஆற்றிலிருந்து தண்ணீரைப் பெற்று, நகர எல்லையைத் தாண்டி மீண்டும் ஜீலம் நதியுடன் கலக்கிறது. 

பிரபலமான கலாச்சாரத்தில் தொகு

  • இராகேஷ் கவுலின் வரலாற்று புதினமான தி லாஸ்ட் குயின் ஆஃப் காஷ்மீர் என்பது கோத ராணியின் வாழ்க்கை மற்றும் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்டது. [7]
  • ஆகஸ்ட் 2019 இல், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாண்டம் பிலிம்ஸ் கோத ராணியைப் பற்றிய ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தனர். [8] [9]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

  • Hasan, Mohibbul (1959), Kashmir under the Sultans, Aakar Books, ISBN 978-81-87879-49-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத_ராணி&oldid=3686207" இருந்து மீள்விக்கப்பட்டது