குண்டு சுதா ராணி

இந்திய அரசியல்வாதி

குண்டு சுதாராணி (பிறப்பு: சூலை 28, 1964) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2021 முதல் வாரங்கலின் மாநகரத் தந்தையாகப் பணியாற்றுகிறார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் தெலங்காணாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] மே 2021-ல், தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் வாரங்கல் மாநகரத்தின் மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

குண்டு சுதாராணி
மாநகரத் தந்தை வாரங்கல்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை தெலங்காணா
பதவியில்
22 சூன் 2010 – 21 சூன் 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1964-07-28)28 சூலை 1964
வாரங்கல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி (2016–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி (1998–2016)
துணைவர்குண்டு பிரபாகர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

குண்டு சுதாராணி 28 சூலை 1964 அன்று இன்றைய தெலங்காணாவின் வாரங்கலில் சாமலா நர்சய்யா மற்றும் வெங்கடலட்சுமிக்கு மகளாகப் பிறந்தார். இவர்க் குண்டு பிரபாகர் என்பவரை 1984 மே 4-ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]

சுதாராணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]

தொழில் தொகு

2002 முதல் 2004 வரை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். 2005 முதல் 2010 வரை, இவர் தெலுங்கு தேசம் கட்சி, வாரங்கல் மாநகரத் தலைவராக இருந்தார். 

இவர் சூன் 2010-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழு உறுப்பினர்
  • உறுப்பினர், அறிக்கைக் குழு

ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது இவரது மாநிலங்களவைப் பதவி தெலங்காணாவிற்கு ஒதுக்கப்பட்டது.[3] பின்னர் தெலுங்கு தேச கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து விலகினார். 2016-ல், சுதா ராணி தெலுங்கானா இராட்டிர சமிதியில் சேர்ந்தார்.

சேவை தொகு

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் கீழ் சுதாராணி நீர்குல்லா கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள அத்மகூர் மண்டலத்தில் இந்த கிராமம் வருகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament Rajya Sabha". பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
  2. Mayabrahma, Roja (2021-05-07). "Telangana: Gundu Sudharani elected as Warangal new mayor". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
  3. "Draw of lots decides Rajya Sabha members for Telangana, Andhra". The Hindu. 30 May 2014. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/draw-of-lots-decides-rajya-sabha-members-for-telangana-andhra/article6066870.ece. பார்த்த நாள்: 13 July 2014. 
  4. (PDF) https://web.archive.org/web/20160304045058/http://saanjhi.gov.in/pdf/states/Telangana.pdf. Archived from the original (PDF) on 4 March 2016. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டு_சுதா_ராணி&oldid=3666477" இலிருந்து மீள்விக்கப்பட்டது