குத்தாலம் பி. கல்யாணம்

இந்திய அரசியல்வாதி

குத்தாலம் பி.கல்யாணம் (P. Kalayanam Kuttalam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளராகச் செயல்பட்டார்.[1] 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டார். நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.[2] 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், குத்தாலம் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவருக்கு 2018 ஆம் ஆண்டு திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் விருது வழங்கப்பட்டது.[4] இவரது மகன் குத்தாலம் க. அன்பழகனும் 1996 ஆம் ஆண்டில் குத்தாலம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவின் கொள்கை பரப்புகுழு துணைச் செயலாளராக உள்ளார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "தேர்தல் பணி சரிவர செய்யாத தேனி மாவட்ட திமுக செயலாளர் நீக்கம் : கட்சி தலைமை அதிரடி". Archived from the original on 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
  2. "மாவட்டக் கழகச் செயலாளர்கள்". Archived from the original on 2015-07-11. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2015.
  3. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 1996" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
  4. "விழுப்புரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா". பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தாலம்_பி._கல்யாணம்&oldid=4128525" இலிருந்து மீள்விக்கப்பட்டது