குப்பை
குப்பை (Wastes, rubbish, trash, refuse, garbage, junk, litter) என்பது மனிதன் பயன்படுத்திய கழிவுகள் ஆகும். இவை மட்கும் குப்பை, மட்காத குப்பை என இரு வகைப்படும். பழங்காலத்தில் குப்பைக் குழிகள் இருந்தன. அதில் வீட்டுக் குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்வர். அது வேளாண்மைக்குப் பயன்படும். இன்று நம் பயன்பாட்டில் குப்பை மேடுகள் தான் இருக்கின்றன. அதில் மக்காத குப்பைகளான நெகிழிகளே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி இடத்தை அசுத்தமாக்கி மண்ணையும் மாசுபடுத்துகிறது. கால்வாய்களில் விழுந்து சாக்கடைகளாக்கி கொசு உற்பத்தியை அதிகரிக்கிறது.[1][2][3]
குப்பை இன்று சர்வதேசப் பிரச்சினையாக உள்ளது. எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெருக்களில், ஆறு, ஏரி, குளம்,குட்டை, கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டி விடுகிறோம். இதனால் நம் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் பேரின்னலை விளைவிக்கிறது. குப்பைகளைக் குறைப்பதற்கு உக்காத பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது (Reduce), பொருட்களை மறுபடியும் பயன்படுத்துவது (Reuse), கழிவுகளில் இருந்து புதிய பயன்பாட்டைப் பெறுவது (Recycle) போன்ற வழிமுறைகளைக் கையாளலாம்.
குப்பையிலிருந்து காகிதம் தயாரிப்பது, மண் புழு உரம் தயாரிப்பது, எரிபொருளான மீத்தேன் வாயு தயாரிப்பது போன்றவை பரவலாக்கப்படலாம்.
இவை மட்டுமல்லாமல் குப்பை இயற்கை குப்பை, விண்வெளிக் குப்பை என மேலும் இருவகைப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Doron, Assa. (2018). Waste of a Nation : Garbage and Growth in India. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-98060-0. இணையக் கணினி நூலக மைய எண் 1038462465.
- ↑ “Basel Convention.” 1989. "Basel Convention Home Page" (PDF). Archived (PDF) from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
- ↑ Glossary of Environment Statistics பரணிடப்பட்டது 2013-01-04 at the வந்தவழி இயந்திரம். 1997. UNSD. Updated web version 2001.