குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு முருகன் கோயில்

குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குமரன்குன்றத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]

குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில்
குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் கோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவு:குமரன்குன்றம்
ஏற்றம்:67 m (220 அடி)
ஆள்கூறுகள்:12°56′38″N 80°08′35″E / 12.9438°N 80.1430°E / 12.9438; 80.1430
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
தாயார்:வள்ளி, தெய்வானை
சிறப்பு திருவிழாக்கள்:தைப்பூசம், கந்த சட்டி, ஆடிக் கிருத்திகை

கடல் மட்டத்திலிருந்து சுமார் 67 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°56′38″N 80°08′35″E / 12.9438°N 80.1430°E / 12.9438; 80.1430 ஆகும்.

தல பெயர்கள்

தொகு
 
ஐந்து நிலை ராஜகோபுரம்

குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் "குமரன் குன்றம்" என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தின் மூலவர் சுவாமிநாத சுவாமி என்றும் பாலசுப்ரமணியர் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் கோயில் குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் என்றும், குமரன்குன்றம் சுவாமிநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தக்சன சுவாமிமலை எனவும் அழைக்கப்படுகிறது.[2]

ஐஸ்வர்ய முருகன்

தொகு

மூலவர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

விழாக்கள்

தொகு

கோவில் திறக்கும் நேரம்

தொகு

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை திறந்திருக்கும்.

தல வரலாறு

தொகு

குன்று இருந்த இடத்தினைக் கண்டு காஞ்சிப்பெரியவர் சந்திரசேகர சரசுவதி இக்குன்றில் முருகன் கோயில் அமையும் என்றார். அவ்வாறே சில பக்தர்கள் குன்றை சீர்படுத்திய போது வேல் கிடைத்தது. அதனை வைத்து வழிபாடு செய்தனர்.

மூலவருக்கு சுவாமிநாதன் என்று பெயரிட்டுள்ளனர்.

ஆதாரங்கள்

தொகு
  1. "Balasubrahmanyar Temple : Balasubrahmanyar Balasubrahmanyar Temple Details | Balasubrahmanyar- Kumaran Kunram, Chromepet | Tamilnadu Temple | பாலசுப்பிரமணியர்". temple.dinamalar.com.
  2. "Hill temple in Chennai city". 28 ஜூலை, 2011 – via www.thehindu.com. {{cite web}}: Check date values in: |date= (help)