குமரிச்சுறா
குமரிச்சுறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | காண்டிரிச்சிசு
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இசுடெகோசுடோமா முல்லர் & கென்லி, 1837
|
இனம்: | இசு. டைகிரினம்
|
வரிக்குதிரை சுறாவின் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
Scyllia quinquecornuatum van Hasselt, 1823 |
குமரிச் சுறா அல்லது வரிக்குதிரைச் சுறா ( Zebra shark ) என்பது ஒரு வகை கம்பளச் சுறா மற்றும் ஸ்டிகோஸ்டோமாடிடே குடும்பத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். இது வெப்பமண்டல இந்தோ-பசிபிக் கடல் முழுவதும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் பவளப் பாறைகள், கடலடி மணல் தரைகளில் 62 m (203 அடி) ஆழத்தில் காணப்படுகிறது. வளர்ந்த குமரிச் சுறாக்கள் கரும்பழுப்பு, அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலில் சிறுத்தைக்கு இருப்புதைப் போல அடர் நிறத்தில் புள்ளிகள் காணப்படும். இது பெரிய தலையும், சிறிய கண்களும், ஐந்து செவுள் கீறல்களையும் கொண்டிருக்கும். இதன் வால் நீளமானது கிட்டத்தட்ட அதன் உடல் அளவில் பாதி இருக்கும். 50–90 cm (20–35 அங்) நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட குட்டி குமரிச் சுறாக்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன. கரும் பழுப்பு நிறத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை வரிகளுடன் காணப்படும். இதனாலேயே இது ஆங்கிலத்தில் வரிக்குதிரை சுறா என்று அழைக்கப்படுகிறது. இந்த சுறாக்களானது 2.5 m (8.2 அடி) நீளம்வரை வளரக்கூடியன.
குமரிச் சுறாக்கள் ஒரு இரவாடி ஆகும். மேலும் நாளின் பெரும்பகுதியை அசைவின்றி கடல் தரையில் படுத்து ஓய்வெடுத்தபடி இருக்கும். இரவில், இவை மெல்லுடலிகள், ஓட்டுய கணுக்காலிகள், சிறிய எலும்பு மீன்கள் போன்றவற்றை வேட்டாயடுவதுடன், பவளப் பாறைகளில் உள்ள இண்டு இடுக்குகளில் உள்ள கடல் பாம்புகளையும் தீவிரமாக வேட்டையாடி உண்ணக்கூடியன. ஆண்டின் பெரும்பகுதி தனியாக இருந்தாலும், இவை பருவகாலங்களில் கூட்டங்களாக திரள்கின்றன. பெண் குமரிச் சுறாக்கள் முட்டைகளை இட்டு பாறையில் கொழுவக்கூடியவை. இவை பல டசன் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் தானாக பொறிந்து குஞ்சுகள் வெளியே வருகின்றன. இவை மனிதர்களுக்கு ஆபத்தற்றவை ஆகும். பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் சுறாக்கள் சூழலியல் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் இறைச்சி, துடுப்புகள் மற்றும் கல்லீரல் எண்ணெய் ஆகியவற்றிற்காக (ஆஸ்திரேலியாவை தவிர) இது வாழும் பகுதி முழுவதும் பிடிக்கப்படுவதால். இதன் எண்ணிக்கைக் குறைந்து போய் உள்ளது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்த இனத்தை அருகிய இனம் என்று வகைப்படுத்தியுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Dudgeon, C.L.; Simpfendorfer, C.; Pillans, R.D. (2019). "Stegostoma fasciatum". IUCN Red List of Threatened Species 2019: e.T41878A161303882. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T41878A161303882.en. https://www.iucnredlist.org/species/41878/161303882. பார்த்த நாள்: 19 February 2022.