குமுதினி லக்கியா

இந்திய நடனக் கலைஞர்

குமுதினி லக்கியா (Kumudini Lakhia) (பிறப்பு: 1930 மே 17) இவர் குசராத்தின் அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஓர் இந்திய கதக் நடனக் கலைஞரும் நடன இயக்குனரும் ஆவார், அங்கு இவர் 1967ஆம் ஆண்டில் இந்திய நடனம் மற்றும் இசை நிறுவனமான கடம்ப் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் அண்ட் மியூசிக் என்ற நிறுவனத்தை நிறுவினார். [1] புகழ்பெற்ற பாரம்பரிய கதக் குருக்களான ஷம்பு மகாராஜ், பிர்ஜு மகாராஜ் (இருவரும் லக்னோ கரானா), சுந்தர் பிரசாத், ராதா லால் மிஸ்ரா (ஜெய்ப்பூர் கரானாவின்) மற்றும் ஆஷிக் உசேன் (பனாரஸ் கரானாவின்) ஆகியோரின் புகழ்பெற்ற சீடர் ஆவார். ஒரு நடனக் கலைஞராக, ஆசிரியராக மற்றும் நடன இயக்குனராக இவர் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்துள்ளார். இவர் சர்வதேச நடனக் குழுவின் (யுனெஸ்கோ) துணைத் தலைவராகவும் இருந்தார்.

குமுதினி லக்கியா
பிறப்பு1930
தேசியம்இந்தியன்
பணிகடம்ப் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் அண்ட் மியூசிக் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்
அறியப்படுவதுகதக் நடனக் கலைஞர், நடன இயக்குனர்

பத்மசிறீ, காளிதாஸ் சம்மன், நகர் பூசண், ஓம்கர்நாத் தாகூர் விருது, அகமதாபாத் நகர விருது, 1978ஆம் ஆண்டில் நடனத்திற்காக குசராத் மாநில நாடக அகாதமி விருது, 1982ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாதமி விருது, மற்றும் 2010 ல் பத்ம பூசண் போன்ற பல விருதுகளையும் கௌரவங்களையும் இவர் பெற்றுள்ளார். குமுதினி லக்கியா இந்திய நடனத்தில் தனது பங்களிப்புக்காக சங்கீத நாடக அகாதமியின் தாகூர் கூட்டாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

சமகால கதக் நடனத்தில் ஒரு முன்னோடியாக இருக்கும் இவர், 1960களில் தொடங்கி கதக்கின் தனி வடிவத்திலிருந்து விலகி, அதை ஒரு குழு காட்சியாக மாற்றுவதன் மூலமும், பாரம்பரிய கதைகளை எடுத்துச் செல்வது மற்றும் தற்காலக் கதையோட்டங்களை கதக் திறனாய்வில் சேர்ப்பது போன்ற புதுமைகளையும் புகுத்தினார். [3] [4] [5]

தொழில்

தொகு

இவர் மேற்குலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடனமேதை இராம் கோபாலுடன் தனது தொழில்முறை நடனத்தைத் தொடங்கினார். முதல் முறையாக இந்திய கதக் நடனத்தை வெளிநாட்டினரின் கண்களுக்கு கொண்டு வந்தார். பின்னர் ஒரு நடனக் கலைஞராகவும் நடன இயக்குனராகவும் ஆனார். இவர் முதலில் ஜெய்ப்பூர் கரானாவின் பல்வேறு குருக்களிடமிருந்தும், பின்னர் ஷம்பு மகாராஜிடமிருந்தும் நடனத்தைக் கற்றுக்கொண்டார்.

இவர் பலதரப்பட்ட நடனக் கலைகளுக்கு குறிப்பாக அறியப்படுகிறார். 1980களில் தில்லியில் ஆண்டுதோறும் நடந்த கதக் மகோத்சவத்தில் இவர் நிகழ்த்திய தப்கர் (நாடித்துடிப்பு), யுகல் (இணை) மற்றும் அதா கிம் (இபோது எங்கே) ஆகியவை இவரின் மிகவும் பிரபலமான நடனக் கலைகளில் அடங்கும். உம்ராவ் ஜான் (1981) என்ற இந்தி திரைப்படத்தில் நடனக் கலைஞர் கோபி கிருட்டிணாவுடன் இணைந்து நடன இயக்குனராகவும் இருந்தார். [6]

கதக் நடனக் கலைஞர்களான அதிதி மங்கல்தாஸ், வைசாலி திரிவேதி, சந்தியா தேசாய், தக்சா சேத்,மௌலிக் ஷா, இஷிரா பரிக், பிரசாந்த் ஷா, உர்ஜா தாகூர் மற்றும் பருல் ஷா உள்ளிட்ட பல சீடர்களுக்கு இவர் குருவாக இருந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் இலண்டன் லிங்கன் விடுதியில் சட்டம் படித்து வந்த இரஜினிகாந்த் லக்கியா என்பவரை மணந்தார். இராம் கோபால் நிறுவனத்தில் வயலின் கலைஞராக இருந்து 1960இல் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார். இவருக்கு சிறீராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் மைத்ரேயி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இவர் 2012-2013 கல்வியாண்டில் ஸ்வர்த்மோர் கல்லூரியில் கார்னெல் வருகை பேராசிரியராக இருந்தார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. . 17 July 2002. https://timesofindia.indiatimes.com/ahmedabad-events/Dancing-your-way-to-health/articleshow/14861355.cms. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
  3. Rachel Howard. "When Many Feet Make Loud Work". https://www.nytimes.com/2006/09/24/arts/dance/24howa.html?ref=dance. 
  4. "Dance of the masters" இம் மூலத்தில் இருந்து 2005-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050531215119/http://www.hindu.com/mag/2004/11/21/stories/2004112100460500.htm. 
  5. Leela Venkatraman. "New vocabulary for Kathak". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/New-vocabulary-for-Kathak/article15401691.ece. 
  6. "Bollywood's new dancing queen". ரெடிப்.காம் Movies. 2 August 2006. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதினி_லக்கியா&oldid=3879903" இலிருந்து மீள்விக்கப்பட்டது