குமோன் கல்வி முறை
குமோன் கல்வி முறை (Kumon) என்பது யப்பானிய நாட்டவரான தோரூ குமோன் (Toru Kumon) என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி முறை ஆகும்.
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 1958 |
தலைமையகம் | ஒசாக்கா, (யப்பான்) (உலகத் தலைமையகம்); டீநெக், நியூ செர்சி (வட அமெரிக்கத் தலைமையகம்) |
தொழில்துறை | கல்வி |
உற்பத்திகள் | குமோன் கணிதம், குமோன் கல்வி (சீனா மற்றும் ஹாங்காங் - சீன மொழி) |
இணையத்தளம் | www |
இக்கல்வி முறை குறிப்பாக மாணவர்களுக்கு கணிதம், மொழிக் கல்வி ஆகியவற்றைப் புகட்டுவதில் ஈடுபட்டுள்ளது.[1]
குமோன் கல்வி முறையின் வரலாறு
தொகுதோரூ குமோன் என்னும் யப்பானியர் தம்முடைய மகன் பள்ளிக்கூடத்தில் கணிதம் பயில்வதில் சிரமப்படுவதைக் கண்டார். எனவே, குமோன் 1954இல் தாமாகவே மகனுக்குக் கணிதம் பயில்வதில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். அதற்காக ஒரு தனி முறையை வகுத்துக்கொண்டார். இதுவே பிற்காலத்தில் "குமோன் கல்வி முறை" என்னும் பெயர் பெற்று, உலகம் முழுவதிலும் பரவலாயிற்று.
குமோன் 1970இல் "குமோன் கல்வி நிறுவனம்" என்றொரு அமைப்பைத் தொடங்கினார். அதன் பிறகு உலகத்தின் பல பகுதிகளில் "குமோன் மையங்கள்" தொடங்கிச் செயல்படலாயின.
2012ஆம் ஆண்டில் உலகத்தில் 36 நாடுகளில் 12,900க்கும் அதிகமான குமோன் மையங்களில் சுமார் 12 மில்லியன் சிறுவர்கள் குமோன் கல்வி முறைப்படி கல்வி பயின்றனர். [2]
குமோன் பாடத்திட்டம்
தொகுகணிதம் மற்றும் மொழிக் கல்வியில் பள்ளிச் சிறுவர்களுக்குப் பயிற்சி அளிப்பது குமோன் கல்வி முறையின் முக்கிய நோக்கம் ஆகும். இது வழக்கமாக பள்ளிச் சிறுவர்கள் பள்ளிக்கூடங்களில் பயிலும் பாடங்களுக்குப் பதிலாக அளிக்கப்படுகின்ற பாடத்திட்டம் அல்ல. மாறாக, பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் பயிலுகின்ற பாடங்களை இன்னும் நல்லமுறையில் பயில்வதற்குத் துணை செய்கின்ற ஒரு பாடத்திட்டம் ஆகும்.
கல்வி கற்பதில் எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் செயல்பட முடிவதில்லை என்னும் உண்மையில் அடிப்படையில் எழுந்ததே குமோன் கல்வி முறை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு மாணவர் எந்த நிலையை எட்டியுள்ளாரோ அந்த நிலைக்குப் பொருத்தமான வகையில் அவருக்குக் கற்றுக்கொடுத்து, அதற்கு அடுத்த நிலைக்கு அவரை அணியமாக்குவது குமோன் கல்வி முறைக் கொள்கை.
தேர்ச்சி பெற்ற குமோன் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். கணிதத்திலும் சரி, மொழிப் பயிற்சியிலும் சரி, மாணவர்கள் வேகமாக, சரியான விதத்தில் பதில் வழங்குவதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.[3]
ஒவ்வொரு மட்டத்திலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெற்றால் மாணவர் அடுத்த நிலைக்குச் செல்வார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Around the World in 80 ideas". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ List of all Kumon franchises by country Kumon Group
- ↑ Emily Yoffe: . Slate, November 4, 2006
வெளி இணைப்புகள்
தொகு- Kumon's official site in Australia பரணிடப்பட்டது 2019-05-16 at the வந்தவழி இயந்திரம்
- Kumon's official site in Canada பரணிடப்பட்டது 2013-11-26 at the வந்தவழி இயந்திரம்
- Kumon's official site in Ireland
- Kumon's official site in New Zealand
- Kumon's official site in the Philippines
- Kumon's official site in South Africa
- Kumon's official site in the United Kingdom
- Kumon's official site in the United States of America பரணிடப்பட்டது 2013-11-17 at the வந்தவழி இயந்திரம்