கும்கி 2

வரவிருக்கும் தமிழ் மொழி திரைப்படம்

கும்கி 2 (Kumki 2) என்பது தற்போது வரவிருக்கும் தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இயக்குனர் பிரபு சாலமன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.மற்றும் பென் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கும்கி திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. மதி மற்றும் சீறிதா ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கும்கி 2
இசைஅஜய்-அதுல்
தனிசிக் பாக்ச்சி
சி.எஸ் சாம்
ஒளிப்பதிவுஎம்.சுகுமார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

 • மதி
 • சீறிதா ராவ்
 • அர்சுன் தாசு
 • கரீசு பேரடி
 • சூசன் சார்ச்
 • சீறிநாத்
 • நடக்கல் உன்னிகிருசுணன்
 • அது இது எது ஆண்ட்ரூசு
 • பிளாரென்ட் சி.பெரேரா[1]
 • வி.திருசெல்வம்

தயாரிப்பு தொகு

பிரபு சாலமன் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2012 ஆம் ஆண்டில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய கும்கி, [2] திரைப்படத்தின் தொடர்ச்சியான பணி விரைவில் நடைபெற உள்ளதாக ஊடகத்திடம் உறுதியாக தெரிவித்தார்.பிரபு சாலமன் 2016 ஆம் ஆண்டில் நடிகர் தனுசு நடித்த தொடரி திரைப்படத்தை இயக்கியதால், கும்கி 2 உருவாக தாமதமானது. பின்னர் ஆழ்ந்து சிந்தித்த போது சாத்தியமானதால் கும்கி திரைப்படத்தை இந்தி மொழியில் மறு ஆக்கம் செய்தனர்.[3][2] தொடரி தொடர்ந்து ஏமாற்றத்தை தந்ததால்,பிரபு சாலமன் கும்கி கதையின் தொடர்ச்சியை எழுதி முடித்ததோடு அத்திரைப்படத்திற்காக 2016 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் ஈராஸ் இன்டர்நேசனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து யானை என்ற பெயரையும் பதிவு செய்து வைத்தார்.[4] பிரபு சாலமன் தாய்லாந்து சென்று கதையை இறுதி செய்ததோடு, படப்பிடிப்பிற்கான இடங்களையும் தேர்வு செய்தார்.[5]

ஜூலை, 2017 ஆம் ஆண்டில் பிரபு சாலமனின் தயாரிப்பு பணி நிறைவு பெறக்கூடிய வேளையில், பருவமழை முடியும் முன்பாக தாய்லாந்தில் படப்பிடிப்பினை நடத்திட படக்குழுவினர் காத்திருந்தனர். இவர் அறிமுக நடிகரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் இயக்குனர் லிங்குசாமியின் மருமகனான மதி இத்திரைப்படத்தில் முக்கிய ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டார்.பாலாசி சக்திவேலின், ரா ரா ராசசேகர் என்ற திரைப்படம் மதியின் முந்தைய திரைப்படம் ஆகும்.ஆனால், லிங்குசாமியின் பொருளாதார பிரச்சினையின் காரணமாக இந்த திரைப்படம் வெளிவராமல் உள்ளது. அறிமுக நடிகையான சீறிதா ராவ் இந்த திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6][7]பென் இந்தியா லிமிடெட் மற்றும் அசய்-அதுல் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். ஆகத்து 2017 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணி தொடங்கப்பட்டது.[8][9]

2018 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் இந்த திரைப்படத்தின் முக்கிய தயாரிப்பு பணி நிறைவடைந்தது.[10] 2020 ஆம் ஆண்டில் கொரோனா நோய் தொற்றின் போதும், அதற்கு பின்னரும் இந்த திரைப்படத்திற்கான ஒலிச்சேர்க்கைப் பதிவு நடைபெற்றது.[11]

மேற்கோள்கள் தொகு

 1. "From behind the scenes to in front of the arc lights - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/from-behind-the-scenes-to-in-front-of-the-arc-lights/articleshow/68656841.cms. 
 2. 2.0 2.1 "Director Prabhu Solomon will start Kumki 2 from April". 6 February 2016 இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025073911/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-will-start-kumki-2-from-april.html. 
 3. "Kumki 2 and Hindi Kumki planned by Prabhu Solomon after Thodari". 31 August 2016 இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025073618/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kumki-2-and-hindi-kumki-planned-by-prabhu-solomon-after-thodari.html. 
 4. "Forthcoming releases" இம் மூலத்தில் இருந்து 16 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170116151054/http://www.erosintl.com/wp-content/uploads/2016/12/Forthcoming-Releases.pdf. 
 5. "Prabu Solomon scouts location for Kumki 2 and Kumki Hindi remake". 30 November 2016 இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025074949/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabu-solomon-scouts-location-for-kumki-2-and-kumki-hindi-remake.html. 
 6. "Director Prabhu Solomon says hero-heroine hunt is on for Kumki 2". 17 June 2017 இம் மூலத்தில் இருந்து 24 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170924021547/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-prabhu-solomon-says-hero-heroine-hunt-is-on-for-kumki-2.html. 
 7. "Actor Rajashekar’s daughter in talks for 'Kumki 2'" இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025085851/http://www.sify.com/movies/actor-rajashekar-s-daughter-in-talks-for-kumki-2-news-tamil-rgqkGAbegibeh.html. 
 8. "'Kumki 2' shoot begins in Thailand" இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025082843/http://www.sify.com/movies/kumki-2-shoot-begins-in-thailand-news-tamil-rjikJDjcfhifj.html. 
 9. "Prabhu Solomon’s Kumki 2 shoot started yesterday, August 5 in Thailand". 6 September 2017 இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171025131729/http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/prabhu-solomons-kumki-2-shoot-started-yesterday-august-5-in-thailand.html. 
 10. "'Kumki 2' wraps up the shoot". Times of India. 2 November 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kumki-2-wraps-up-the-shoot/articleshow/66477776.cms. 
 11. Kumar, Pradeep (12 May 2020). "'Master', 'Indian 2' among other Tamil films to start post-production work". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/master-indian-2-among-other-tamil-films-to-start-post-production-work/article31564723.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்கி_2&oldid=3186099" இருந்து மீள்விக்கப்பட்டது