கும்புளாப் பாரை

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Caranx|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கும்புளாப் பாரை (Blue runner) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் ஆகும். கும்புளாப் பாரை அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசிலிலிருந்து மேற்கு அட்லாண்டிக்கில் கனடா வரையிலும் மற்றும் அங்கோலாவிலிருந்து பெரிய பிரித்தானியா வரையிலும் கிழக்கு அட்லாண்டிக்கில் மத்திய தரைக்கடல் வரை பரவியுள்ளது. கும்புளாப் பாரை இதன் ஒத்த இனங்களிலிருந்து பல உருவவியல் அம்சங்களால் வேறுபடுகிறது. இதில் மேல் தாடையின் அளவு, செவுள் வாரி எண்ணிக்கை மற்றும் பக்கவாட்டுக் கோடு அளவுகள் ஆகியவைவற்றின் மாறுபாடு போன்றவை அடங்கும். கும்புளாப் பாரை அதிகபட்சமாக 70 செ.மீ நீளம் வரையும், 5.05 கி.கி எடை வரையும் எட்டும். ஆனால் பொதுவாக 35 செ.மீட்டரைவிட குறைவான அளவிலேயே காணப்படும். இந்த இனங்கள் முதன்மையாக கடலி்ல், பாறைகள் உள்ள இடத்தில் வாழ்கின்றன. இருப்பினும் இவை கடலில் மனிதர்களால் உருவாக்கபட்ட எண்ணெய் கிணற்று மேடை கட்டமைப்புகளைச் சுற்றி திரள்வதாக அறியப்படுகிறது. இவற்றில் இளம் மீன்கள் ஆழமற்ற பாறைகள் உள்ள பகுதியில் இருக்கின்றன. வளர்ந்த பின்னர் ஆழமான நீருக்குச் செல்கின்றன.

கும்புளாப் பாரை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Caranx
இனம்: வார்ப்புரு:Taxonomy/CaranxC. crysos
இருசொற் பெயரீடு
Caranx crysos
(Mitchill, 1815)
Approximate range of the blue runner
வேறு பெயர்கள்
  • Scomber crysos
    Mitchill, 1815
  • Carangoides crysos
    (Mitchill, 1815)
  • Paratractus crysos
    (Mitchill, 1815)
  • Caranx fusus
    Geoffroy Saint-Hilaire, 1817
  • Carangoides fusus
    (Geoffroy Saint-Hilaire, 1817)
  • Caranx pisquetus
    Cuvier, 1833
  • Trachurus squamosus
    Gronow, 1854

கும்புளாப் பாரை கூட்டமாக திரியும் ஒரு இரைகொல்லி மீன் ஆகும். இவை முக்கியமாக பல்வேறு ஓடுடைய கணுக்காலிகள் மற்றும் பிற முதுகெலும்பற்ற விலங்குகளை உணவாக கொள்கிறது. மேலும் இவை மிதவை விலங்குகளையும் உணவாக கொள்கிறன்றன. இந்த இனம் 225 மற்றும் 280 மி.மீ அளவுக்கு இடையில் வளரும்போது பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இவை ஆண்டு முழுவதும் முட்டை இடுகின்றன, என்றாலும் இது வெப்பமான மாதங்களில் உச்சம் அடைகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 6000 முதல் 7000 டன் வரை கும்புளாப் பாரை பிடிக்கப்பட்டுள்ளன.

விளக்கம் தொகு

 
ஒரு சிறிய கும்புளாப் பாரை

கும்புளாப் பாரை மீனானது மிதமான அளவில் பெரியதாகும். இதில் அதிகபட்ச உறுதிசெய்யப்பட்ட நீளம் 70 செ.மீ மற்றும் 5.05 கிலோ நிறை வரை வளரும், ஆனால் பொதுவாக 35 செ.மீக்கும் குறைவான நீளத்திலேயே காணப்படுகிறது. கும்புளாப் பாரை உருவவியல் ரீதியாக பிற பாரை மீன்களையே ஒத்தது. நீளமான, மிதமாக தட்டையான உடலைக் கொண்ட இதன் உடலின் மேல் மற்றும் அடிப் பகுதிகள் தோராயமாக சமமான குவிவு கொண்டதாகவும், சற்று கூர்மையான மூக்கு கொண்டும் இருக்கும். இதன் முதுகு துடுப்பு இரண்டு பகுதிகளாக உள்ளது, முதல் பகுதி 8 முட்களையும், இரண்டாவது பகுதி 22 முதல் 25 மென்மையான கதிர்களையும் கொண்டுள்ளது . குத துடுப்பானது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் முதல் பகுதி ஒரு முள்ளைக் கொண்டதாகவும், அடுத்த பகுதி 19 முதல் 21 மென்மையான கதிர்களைக் கொண்டதாகவும் உள்ளது. மார்புத்துடுப்புகள் வயதுக்கு ஏற்ப, [2] 21 முதல் 23 கதிர்களைக் கொண்டு, தலையிலிருந்து சற்று தள்ளி இருக்கும். மீனின் உடலில் பக்கவாட்டு கோடு நன்கு தெரியக்கூடியதாக இருக்கும்.

கும்புளாப் பாரை உடலானது நீல பச்சை நிறத்தில் இருந்து ஒலிவ பச்சை நிறம்வரை மாறுபடும். அடிவயிறு வெள்ளி சாம்பல் நிறத்தில் இருந்து பித்தளை நிறமாக பொலியும். பெரும்பாலும் இளம் மீன்களின் உடலில் 7 இருண்ட செங்குத்து பட்டைகள் இருக்கும். துடுப்பின் நிறமும் மாறுபடும், அனைத்து துடுப்புகளும் இருண்டோ அல்லது ஒளி ஊடுருவக்கூடியது முதல் ஆலிவ் பச்சை வரை இருக்கும். இந்த இனங்களின் செவுள் மூடிமேல் ஒரு கருத்த பொட்டு இருக்கும். [3] [4]

குறிப்புகள் தொகு

  1. Herdson, D. (2010). "Caranx crysos". IUCN Red List of Threatened Species 2010: e.T154807A4637970. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T154807A4637970.en. https://www.iucnredlist.org/species/154807/4637970. 
  2. Nichols, J.T. (1920). "On Caranx crysos, Etc". Copeia (American Society of Ichthyologists and Herpetologists) 81 (81): 29–30. doi:10.2307/1435929. 
  3. FAO Species Identification Sheets for Fishery Purposes: Eastern Central Atlantic Vol 1. http://www.fao.org/fishery/sidp/3,1/en#Eca. 
  4. Fishes of the Gulf of Mexico: Scorpaeniformes to tetraodontiformes. McEachran, J.D.; J.D. Fechhelm (2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்புளாப்_பாரை&oldid=3296889" இலிருந்து மீள்விக்கப்பட்டது