கும்லா
கும்லா (Gumla), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த கும்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். கும்லாவிலிருந்து மாநிலத் தலைநகரான ராஞ்சி 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கும்லா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 23°2′40″N 84°32′30″E / 23.04444°N 84.54167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | கும்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.89 km2 (3.05 sq mi) |
ஏற்றம் | 652 m (2,139 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 51,264 |
• அடர்த்தி | 197/km2 (510/sq mi) |
மொழிகள்* | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 835207 |
தொலைபேசி குறியீடு எண் | 06524 |
வாகனப் பதிவு | JH]-07 |
இணையதளம் | www |
அமைவிடம்
தொகுசோட்டா நாக்பூர் மேட்டு நிலத்தின் தெற்கில் அமைந்த கும்லா நகரம், தக்காண பீடபூமியின் கிழக்கு முனையில் உள்ளது.
தட்ப வெப்பம்
தொகுகும்லா நகரத்தின் கோடைக்காலத்திய அதிகபட்ச வெப்பம் 40 °C (104 °F) ஆகவும்; குளிர்காலத்திய குறைந்தபட்ச வெப்பம் 3 °C (37 °F) ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1,450 மில்லிமீட்டர்கள் (57 அங்குலங்கள்) ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, கும்லா நகரத்தின் மக்கள் தொகை 51,264 ஆகும்.[1][2] அதில் ஆண்கள் 26,252 மற்றும் பெண்கள் 25,012 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,373 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.33% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 45.93%, இசுலாமியர் 20.35%, கிறித்தவர்கள் 18.26% மற்றும் பழங்குடி சர்னா சமயத்தினர் 14.95% ஆகவுள்ளனர். இந்நகரத்தில் பெரும்பான்மையாக இந்தி மொழி, உருது மற்றும் சத்திரி மொழி, குறுக்ஸ் மொழி, முண்டாரி மொழி போன்ற வட்டார மொழிகள் பேசப்படுகிறது.[3]
போக்குவரத்து
தொகுசாலைப்போக்குவரத்து
தொகுகும்லா நகரம் தேசிய நெடுஞ்சாலை எண் 43 வழியாக மாநிலத் தலைநகரான ராஞ்சியுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 78 அண்டை மாநிலமான சத்தீஸ்கருடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "District Census Handbook, Gumla, Series 21, Part XII B" (PDF). Rural PCA-C.D. blocks wise Village Primary Census Abstract, location no. 801797, page 200-201. Directorate of Census Operations Jharkhand. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue