கும்ளாபுரம்
கும்ளாபுரம் ( Gumalapuram ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த [1], தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
கும்ளாபுரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அமைவிடம்
தொகுஇந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 66 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 329 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 723 வீடுகளும், மக்கள் தொகையானது 3331 ஆக உள்ளது. இதில் பெண்கள் விகிதம் 48.5% என்றும், மொத்த எழுத்தறிவு விகிதம் 60.6% ஆகும், இதில் பெண்களின் எழுத்தறிவு விகிதமானது 26.8% என்று உள்ளது.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுஇந்த ஊரில் வீரபத்திரர் கோயில், கங்கணப்பள்ளி மகாதேஸ்வரன் கோயில், முத்துராய சுவாமி கோயில், நாகமங்க வீரபத்திரர் கோயில், சிவன் கோயில், இலட்சுமி நரசிம்மர் கோயில், கௌரம்மா கோயில், பெரியமடம் பங்கதராய சுவாமி கோயில், நாகதேவர் கோயில், அனுமந்தராயர் கோயில் என பல கோயில்கள் உள்ளன.
சிறப்பு மிக்க இந்த ஊரில் 101 கோயில்கள், 101 ஏரிகள், 101 குட்டைகள், 101 குகைகள் இருந்திதாகவும் காலப்போக்கில் அவை அழிந்துவிட்டதாகவும் செவிவழித் தகவல்கள் உள்ளன.[3]
குறிப்பு
தொகு- ↑ "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Gumalapuram". அறிமுகம். onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 124.
{{cite book}}
: Check date values in:|year=
(help)