குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட்

குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் (Queen's University Belfast) ஐக்கிய இராச்சியத்தின் வட அயர்லாந்தின் தலைநகர் பெல்பாஸ்ட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக 1845 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1849 ஆம் ஆண்டு குயின்ஸ் கல்லூரி, பெல்பாஸ்ட் என்ற பெயரில் திறக்கப்பட்டது. ஆனாலும் இக்கல்லூரியின் வரலாறு 1810 ஆம் ஆண்டில் பெல்பாஸ்ட் ரோயல் அக்கடெமிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கிறது[2].

குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட்
Queen's University Belfast
உருவாக்கம்1849
வேந்தர்ஜோர்ஜ் ஜே. மிட்ச்செல்
துணை வேந்தர்பேராசிரியர் பீட்டர் கிரெக்சன்
நிருவாகப் பணியாளர்
1,600
மாணவர்கள்24,560[1]
பட்ட மாணவர்கள்19,165[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,395[1]
அமைவிடம்
University Road
Belfast
BT7 1NN
, , ,
54°35′3″N 5°56′5″W / 54.58417°N 5.93472°W / 54.58417; -5.93472
இணையதளம்http://www.qub.ac.uk
corporate logo

குயின்ஸ் பல்கலைக்கழகம் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் அமைப்பு, ஐரோப்பிய பல்கலைக்கழக அமைப்பு, மற்றும் அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் பல்கலைக்கழகங்களின் அமைப்புகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. இது 300 இற்கும் மேற்பட்ட துறைகளில் பல்வேறு மட்டங்களிலும் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Table 0a - All students by institution, mode of study, level of study, gender and domicile 2005/06
  2. History of Queen's
  3. "Teaching Quality". Archived from the original on 2008-04-17. பார்க்கப்பட்ட நாள் 2008-11-12.

வெளி இணைப்புகள்

தொகு
 
குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைக் கட்டிடம்