குரல் பகுப்பாய்வு

குரல் பகுப்பாய்வு என்பது மொழியியல் உள்ளடக்கம் என்பதைவிட பேச்சு இனங்காணலைப் ( speech recognition) போலவே பேச்சொலி தொடர்பான ஒரு கற்கையாகும்.இவ்வாறான கற்கைகள் குரல் தொடர்பான மருத்துவ பகுப்பாய்வுகளையும் பேசுபவரை அடையாளம் காணல் என்பதனையே பெரிதும் உள்ளடக்கும்.இவற்றுக்கெல்லாம் முரணாக பேசுபவரின் உண்மைத்தன்மை மற்றும் மனவெழுச்சி என்பன குரல் அழுத்த பகுப்பாய்வு அல்லது அடுக்கு குரல் பகுப்பாய்வு என்வற்றின் மூலம் தீர்மானிக்கப்பட முடியும் என சிலர் நம்புகிறார்கள்.[1][2][3]

இயல்பான குரல் பிரச்சினைகள் தொகு

எடுத்துக்காட்டாக, குரல் தொடர்பான மருத்துவ கற்கையானது சத்திர சிகிச்சை மூலமாக குரல் நாண் அகற்றப்பட்ட நோயாளி தொடர்பான கற்கையாகவும் அமையும். குரல் விருத்தி தர மதிப்பீட்டு முறைகளில் தர அளவீட்டு நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஒரு அனுபவமிக்க குரல் வைத்திய நிபுணரால் நம்பகமான முறையில் குரல் தர மதிப்பீடு செய்ய முடியும், ஆனாலும் இதற்கு பரந்தளவு பயிற்சி தேவைப்படுவதோடு அகவயத்தன்மையானது.

மருத்துவ குரல் ஆய்வில் மற்றொரு தீவிர ஆராய்ச்சி தலைப்பு குரல் ஏற்றுதல் மதிப்பீடு ஆகும். நீட்டிக்கப்பட்ட நேரம் பேசும் ஒரு நபரின் குரல்வளை இழையம் சோர்வடைந்து பாதிக்கப்படுகின்றன. தொழில்முறை குரல் பயனர்கள் ( உ.தா., ஆசிரியர்கள், விற்பனையாளர்கள் ) மத்தியில் இந்த சோர்வை குரல் இழப்பை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைகளை மதிப்பீடு செய்ய, குரல் ஏற்றுதல் புறநிலையாக மதிப்பிடப்பட வேண்டியது கட்டாயம்.

குரல் பகுப்பாய்வு முறைகள் தொகு

குரல் பகுப்பாய்வு தேவைப்படும் குரல் பிரச்சினைகளாவன குரல் மடிப்பு அல்லது குரல் வளை நாண் என்பவற்றிலேயே உருவாகின்றன. மடிப்புகளாவன அதிர்வு சக்கரத்தோடு மோதுதலை ஏற்படுத்தக்கூடியன என்பதோடு அவற்றின் ஊடாக வெளி உந்தப்படும் காற்றினால் உலரக்கூடியவை. அத்தோடு குரல்வளை நாணானது பேசுதல் பாடுதல் போன்றவற்றின் போது தொடர்ச்சியாக செயற்பாட்டு நிலையில் இருப்பவை என்பதோடு களைப்படையக்கூடியவை. எவ்வாறாயினும் குரல் மடிப்பு மற்றும் அவற்றின் இசைவு தொடர்பான பௌதீக ரீதியான பகுப்பாய்வு என்பது கடினமானதாகும். குரல் மடிப்புக்களின் அமைவிடமானது நேரடி மற்றும் ஆக்கிரமிப்பான அளவீட்டு இயக்க முறைகளை செயல் திறனுடன் தடை செய்கின்றன.எக்ஸ் கதிர் மற்றும் நுண் ஒலி போன்ற குறை ஆக்கிரமிப்பு பிரதி பிம்ப முறைகள் வெற்றியளிக்காது ஏனெனில் குரல்வளை நாண்கள் இழையம் போன்ற ஒன்றினால் சூழப்பட்டுள்ளது. அது பிரதி பிம்பத்தை விகாரம்படுத்தும். குரல்வளை நாணின் அசைவானது விரைவானது. இதன் அடிப்படை அலையானது 80 Hz க்கும் 300 Hz இடைப்பட்டதாகும். மேலும் சுழல் நிலை படம் அதிவேக காணொளிகள் இதற்கான வேறொரு தெரிவாக இருந்தாலும் குரல்நாண் மடிப்பின் தெளிவான படத்தைப்பெற புகைப்படக்கருவி தொண்டையினுள் வைக்கப்பட வேண்டும். இது பேசுதலை கடினப்படுத்தும். குரல்நாண் மடிப்பின் அதிர்வு கால இடைவெளி சார்ந்ததென்பதால் சுழல் நிலை படம் மட்டுமே உதவிகரமாதாக இருக்கும்.[சான்று தேவை]

ஓலிப்பெருப்பாக்கி மற்றும் பேசுப்போது வெளிப்படும் காற்று என்பவற்றை மறுபக்க வடிகட்டல் மற்றும் ஒலிப்பியல் ஆகியன வேறு இரு மறைமுக முறைகளாகும். மறுபக்க வடிகட்டல் முறையில் ஓலிப்பெருப்பாக்கி மற்றும் பேசும் போது வெளிப்படும் காற்று என்பவை வாய்க்கு வெளிப்பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டு குரல் வழிப்பாதையின் ஏற்ற இறக்கங்கள் நீக்கப்பட்டு கணிதவியல் முறையில் வடிகட்டப்படுகின்றது. இம்முறை குரல்நாண் அசைவினைப் பிரதிபலிக்கக்கூடிய தொண்டையின் காற்று வெளித்தள்ளுகையின் பருமட்டான ஒரு அலைவடிவத்தைத் தருகின்றது. மற்றொரு மறைமுக குறை-ஆதிக்க முறையான ஒலிப்பியல் முறையில் தொண்டையின் மட்டத்தில் குரல் நாண் மடிப்புகள் தொடும் இடங்களில் மின்னேற்றம் ஒன்று பிறப்பிக்கப்படுகின்றது. இது தொடுகை பிரதேசத்தின் ஒருபரிமாண தகவலை மட்டுமே தரவல்லது. ஓலிப்பெருப்பாக்கி மற்றும் பேசும் போது வெளிப்படும் காற்று என்பவற்றை மறுபக்க வடிகட்டல் ஆகிய முறைகள் முழுமையான முப்பரிமாண தகவல்களைத் தர போதாது எனினும் குரல் நாண் அசைவு தொடர்பான பயனுள்ள தகவல்களைத் தரும்.[சான்று தேவை]

வெளி இணைப்புக்கள்  தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரல்_பகுப்பாய்வு&oldid=3896276" இலிருந்து மீள்விக்கப்பட்டது